உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பாச்சி இணைய வழங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Apache HTTP Server
வடிவமைப்புராபட் மக்கூல்
உருவாக்குனர் அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசன்
அண்மை வெளியீடு2.2.9 / சூன் 13 2008 (2008-06-13), 5963 நாட்களுக்கு முன்னதாக
மொழிசி நிரலாக்கல் மொழி
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
கிடைக்கும் மொழிஆங்கிலம்
மென்பொருள் வகைமைஇணைய வழங்கி
உரிமம்அப்பாச்சி அனுமதி
இணையத்தளம்http://httpd.apache.org/

அப்பாச்சி இணைய வழங்கி (Apache HTTP Server) ஒரு கட்டற்ற இணைய வழங்கி மென்பொருளாகும். இது யுனிக்சு, லினிக்சு, விண்டோசு, நாவல் நெட்வெர் போன்ற பல்வேறு இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. அப்பாச்சி இணைய வழங்கியானது ஆரம்பத்தில் உலகளாவிய வலையமைப்பின் வளர்ச்சிக்குதவியதுடன் இன்றளவும் உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இணைய வழங்கி மென்பொருளாக உள்ளது. அத்துடன் இதுவே மற்றை இணைய வழங்கி மென்பொருட்களிற்கு மாதிரியாகத் திகழ்கின்றது. அப்பாச்சி மென்பொருட்களானது கட்டற்ற நிரலாலாளர்களால் விருத்தி செய்யப் படுகின்றது.

வரலாறு

[தொகு]

ஆரம்பத்தில் வெளிவந்தபோது இது நெட்சுகேப்பின் இணைய வழங்கியின் (இன்றைய சண் யா சிசுடம் இணைய வழங்கி) அன்றிலிருந்து ஏனைய யுனிக்சு இயங்குதளத்தின் போட்டியாளராக விளங்கத் தொடங்கி ஏப்ரல் 1996 இல் உலகில் மிகப் பிரபலமான இணைய வழங்கி மென்பொருளாக மாற்றமடைந்தது. மே, 1999 இல் 57% மான இணையத்தளங்கள் அப்பாச்சியினையே பாவித்தன. பெப்ரவரி 2006 இல் 68% வீதமான இணையத்தளங்கள் அப்பாச்சியினையே பாவித்தன.

பயன்பாடு

[தொகு]

உலகளாவிய வலையின் நிலையான மற்றும் மாறுகின்ற உள்ளடக்கங்களைக் காண்பிப்பதற்காக வசதிகள் அப்பாச்சி இணைய வழங்கியில் இருந்து எதிர்பார்க்கப் படுகின்றது.

லாம்ப் (LAMP) என ஆங்கிலத்தில் அழைக்கபடும் பிரபலான லினக்சு, அப்பாச்சி, மையெசுக்யூயெல், பி.எச்.பி/பெர்ள்/பைத்தோன் இது முக்கியமான ஒன்றாகும்.

அப்பாச்சி இணைய வழங்கியானது வேறு மென்பொருட்களுடனும் விநியோகிக்கப் படுகின்றது. எடுத்துக் காட்டாக ஆரக்கிள் தகவற்தளம், ஐ.பி.எம் வெப்ஸ்பியர் பிரயோக வழங்கி, ஆப்பிள் கணினிகளின் மக்ஓஸ் X உடனும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. இது தவிர போர்லாண்ட் மென்பொருட்களான டெல்பி மற்றும் லினக்ஸ்ஸிற்கான் கைலிக்ஸ்சும் அப்பாச்சியை ஆதரிக்கின்றன.

அப்பாச்சி கோப்பொன்றை பாதுகாப்பாக இணையமூடாகப் பகிர்வதற்காக வசதிகளை வழங்குகின்றது. எடுத்துக் காட்டாக பயனர் ஒருவர் அப்பாச்சியின் மூலக் கோப்புறைப் பக்கத்தில் (root) கோப்பொன்றை போட்டு அதைப் பகிர முடியும்.

இணயப் பக்கங்களை விருத்திசெய்யும் நிரலாக்கர்கள் தமது கணினிகளில் அப்பாச்சி இணைய வழங்கியை நிறுவிப் பரீட்சிப்பது வழமை.

நிறுவுதலும் மேலாண்மையும்

[தொகு]

உபுண்டு/டேபியன்

[தொகு]

அப்பாச்சியை நிறுவ பின்வரும் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்.

sudo apt-get install apache2
sudo /etc/init.d/apache2 restart

நீங்கள் நிறுவிய பின்பு, உலாவியில் http://localhost என்ற முகவரிக்குச் சென்றால், அங்கு It Works என்ற அப்பாச்சியின் இயல்பு வலைத்ப்பக்கத்தைப் பார்க்கலாம். இயல்பாக அப்பாச்சி /var/www என்ற அடைவில் வலைத்தளங்களைப் பார்க்கும்.

வெளியிணைப்புக்கள்

[தொகு]

எப்படிச் செய்வது

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாச்சி_இணைய_வழங்கி&oldid=3791928" இலிருந்து மீள்விக்கப்பட்டது