அப்துல் அகத் வக்கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் அகத் வக்கில்
Abdul Ahad Vakil
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1977–1979
தொகுதிபாரமுல்லா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபிப்ரவரி 1934[1]
சோப்பூர், பாரமுல்லா, சம்மு காசுமீர்
இறப்பு9 சூலை 2014
எல்.டி. காலனி, கோரிபோரா
அரசியல் கட்சிசம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
துணைவர்Maryam Jan
பிள்ளைகள்4

அப்துல் அகத் வக்கில் (Abdul Ahad Vakil) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1934 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 6ஆவது மக்களவைத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் மாநில அமைச்சராகவும், 1996 ஆம் ஆண்டில் சம்மு காசுமீர் சட்டப் பேரவையின் சபாநாயகராகவும் பணியாற்றினார். தேசிய மாநாட்டின் மூத்த உறுப்பினராக இவர் இருந்தார். [1]

வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

அப்துல் அகத் வக்கில் 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சம்மு காசுமீர் மாநிலத்தின் சோபோரா மாவட்டத்தில் பிறந்தார். தனது கல்விக் காலத்தில் முதுகலை பட்டமும் சட்டத்தில் இளநிலைப் பட்டமும் பெற்றார், ஆரம்பத்தில் சிறீநகரில் உள்ள அமர் சிங் கல்லூரியில் படித்து வந்தார், பின்னர் அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், அங்கு இவர் தனது மேற்படிப்பை முடித்தார்.

அப்துல் அகத் வக்கில் முதலில் 1971 ஆம் ஆண்டில் ஒரு வழக்கறிஞராக இருந்தார், பின்னர் 1976 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் [1] [2]

சமூக நடவடிக்கைகள்[தொகு]

அப்துல் அகத் வக்கில் பெண்களுக்கான அரசுப் பட்டயக் கல்லூரி, சோபோரில் அறிவியல் மற்றும் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை நிறுவுவதற்குப் பொறுப்பான செயலில் உள்ள சமூகப் பணியாளராகக் கருதப்பட்டார். இவரது அரசியல் காலத்தில், சோபோரில் ஏழைகள், விதவைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்காக பல நலவாழ்வு மையங்களைத் திறந்தார். [3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆச்சீ அப்துல் ரசாக்கின் மகனான இவர் 1960 ஆம் ஆண்டில் மரியம் இயானை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர். [1]

இறப்பு[தொகு]

தனது 79 ஆவது வயதில் கோரிபோராவில் உள்ள எல்டி காலனியில் அப்துல் அகத் வக்கில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக செர்-இ-காசுமீர் மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சுவாச நோயுடன் தொடர்புடைய பல உறுப்பு செயலிழப்பு மற்றும் மார்பு நோயின் காரணமாக தனது கடைசி மூச்சை விட்டார். [4] [5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Members Bioprofile".
  2. "NC leader Vakil passes away". https://www.business-standard.com/article/pti-stories/nc-leader-vakil-passes-away-114071000977_1.html. 
  3. "Former speaker Abdul Ahad Vakil passes away".
  4. "Abdul Ahad Vakil passes away". Kashmir Times. 11 July 2014. http://kashmirtimes.com/newsdet.aspx?q=34247. பார்த்த நாள்: 9 February 2020. 
  5. "Ahad Vakil passes away". 11 July 2014. பார்க்கப்பட்ட நாள் 9 February 2020.
  6. "NC leader Vakil passes away". Hindustan Times. 10 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_அகத்_வக்கில்&oldid=3866419" இலிருந்து மீள்விக்கப்பட்டது