அனுஷ்கா சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுஷ்கா சங்கர்
Anoushka Shankar.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூன் 9, 1981 (1981-06-09) (அகவை 41)
பிறப்பிடம்இலண்டன், ஐக்கிய இராச்சியம்
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)சித்தார் கலைஞர், இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)பாடுதல், சித்தார், கின்னரப்பெட்டி, தம்புரா
இசைத்துறையில்1998–இற்றை
வெளியீட்டு நிறுவனங்கள்ஏஞ்சல்
இணையதளம்AnoushkaShankar.com

அனுஷ்கா சங்கர் (Anoushka Shankar, வங்காள: অনুষ্কা শংকর; பிறப்பு: சூன் 9, 1981) இந்திய சித்தார் இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ரவிசங்கரின் மகளும், நோரா ஜோன்சின் தனது தந்தை வழியில் ஒன்று விட்ட சகோதரியுமாவார்.[1]

சொந்த வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

இலண்டனில் பிறந்த அனுஷ்கா தமது குழந்தைப் பருவத்தை லண்டன் மற்றும் தில்லி ஆகிய இரு இடங்களிலும் கழித்தார். பதின்ம வயதில் அவர், கலிபோர்னியா என்சினிடாஸில் வசித்து, சான் டைகுட்டியோ அகாடமியில் பயின்றார். 1999 ஆம் ஆண்டில் சிறப்புப் பட்டப்படிப்பு பயின்ற அவர், கல்லூரியில் சேருவதை விடவும், இசைத் துறையில் சாதனை புரிவதையே விரும்பினார்.[1]

தொழில் வாழ்க்கை[தொகு]

2005ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சியின்போது அனுஷ்காவும் ரவிசங்கரும்.

ஒரு சிறு குழந்தையாக இருக்கும்போதே, தமது தந்தையுடன் சித்தார் பயிற்சியைத் துவங்கிய அனுஷ்கா, தமது 13ஆம் வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றை அளித்து, 16 ஆவது வயதில் இசைக்கான முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[1]

1998ஆம் ஆண்டில் அனுஷ்கா என்ற தமது முதல் இசைத் தொகுப்பினை அவர் வெளியிட்டார். பின்னர், 2000ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்தில், கொல்கத்தாவின் ராமகிருஷ்ணா மையத்தில் நிகழ்ச்சி அளித்த முதல் பெண்மணியாக இவர் விளங்கினார். அனுஷ்காவும் அவருடைய ஒன்று விட்ட சகோதரியான நோரா ஜோன்ஸ் இருவருமே 2003ஆம் ஆண்டு கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டனர்.[1]

கார்ஷ் காலே என்பவருடன் இணைந்து, 2007 ஆகஸ்ட் 28 அன்று, ப்ரீத்திங் அண்டர் வாட்டர் என்னும் இசைத்தொகுப்பினை வெளியிட்டார். இது பாராம்பரிய சித்தார் மற்றும் மின்னணுத் தாளம் மற்றும் இன்னிசை ஆகியவற்றின் கலவையாகும். இதில் குறிப்பிடத்தக்க வகையில், நோரா ஜோன்ஸ், ஸ்டிங் மற்றும் தனது மகளுடன் சித்தாரில் ஒரு இருவர் இசையை அளித்த ரவிசங்கர் ஆகியோரின் குரல் பங்களிப்புகள் இருந்தன.

2009ஆம் ஆண்டு அனுஷ்கா இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் ஹெச்டி சிட்டி என்னும் வாழ்வு முறை துணையிதழில் பத்திகள் எழுதத் துவங்கினார். இந்தப் பத்திகள் தேசிமார்ட்டினி என்னும் சமூக வலையமைப்பினில் நேரடிக்-கணினி முறைமையில் காணக் கிடைக்கின்றன.[2]

ஆதரவு நிகழ்ச்சிகள்[தொகு]

2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 அன்று, அவர் லண்டன் நகரில் ராயல் ஆல்பர்ட் ஹால் என்னுமிடத்தில் ஜார்ஜிற்கான இசை நிகழ்ச்சி என்பதனை நிகழ்த்தி அதில் தாமும் பங்கேற்றார். அது ஜார்ஜ் ஹாரிசன் என்பவரின் நினைவாக, 1971ஆம் ஆண்டு ஹாரிசானுடன், ரவிசங்கர் அளித்த பங்களாதேஷிற்கான இசை நிகழ்ச்சி என்னும் ஆதரவு நிகழ்ச்சியின் வடிவில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது.

2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அனுஷ்காவும் ஜெத்ரோ டுல் ஆகிய இருவரும் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி மும்பை நகரில் நிகழவிருந்த ஒரு நிகழ்ச்சியினை ஒத்தி வைத்தனர்.[3] அந்த நிகழ்ச்சியை அவர்கள் எ பில்லியன் ஹேண்ட்ஸ் கான்சர்ட் என்னும் பெயரில் தாக்குதல்களுக்குப் பலியானவர்களுக்கான ஒரு ஆதரவு நிகழ்ச்சியாக மாற்றியமைத்து 2008ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் நாள் நிகழ்த்தினர்.[4] இந்த முடிவைக் குறித்துப் பேசுகையில் அனுஷ்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்: "ஒரு இசைக் கலைஞராக, நான் இவ்வாறுதான் பேசுகிறேன்; என்னுள் இருக்கும் கோபத்தை நான் இவ்வாறுதான் வெளிப்படுத்துகிறேன் [...] இந்தச் சம்பவங்களால் எங்களது சுற்றுலா முழுவதுமே மாறுதலுக்கு உள்ளாகி விட்டது; நிகழ்ச்சியின் கட்டமைப்பு அதே போலவே இருப்பினும், உணர்வு பூர்வமாக நாங்கள் இன்னும் அதிகமாகவே கூற முயற்சிக்கிறோம்."[5]

விருதுகள்[தொகு]

 • பிரித்தானிய மக்களவைக் கேடயம் 1998[1]
 • ஆண்டின் பெண்மணி (2003வது ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்பட்ட இந்த விருதினை கரீனா கபூர், ரித்து பெரி, மற்றும் ரியா பிள்ளை ஆகியோருடன் இணைந்து பெற்றார்).[1]

செயற்பாடுகள்[தொகு]

அனுஷ்கா விலங்கினத்தின் உரிமைகள் மற்றும் விலங்குகளை நன்முறையில் நடத்தும் மக்கள் (பிஈடிஏ) என்னும் குழு ஆகியவற்றிற்கான ஆதரவாளர். அவரும் மற்றும் அவரது தந்தையாரும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தயாரிக்கப்பட்ட 30 விநாடிகளுக்கான பொதுச் சேவை அறிவிப்பு ஒன்றில் தோன்றியுள்ளனர்.[6] அனுஷ்கா முற்றிலுமாக சைவ உணவுப் பழக்கம்[7] கொண்டவர். டிரிப்பிள் ஜே உடனான ஒரு வானொலிப் பேட்டியில் (ஞாயிறு இரவு சஃப்ரான்), தாம் ஒரு சைவ உணவுப் பழக்கம் கொண்டவர் அல்ல என்று அவர் கூறியுள்ளார். அனுஷ்கா, ஐக்கிய நாடுகள் உலக உணவு நிரலின் அதிகாரபூர்வமான இந்தியத் தகவலாளர் ஆவார்.

இசை வரலாறு[தொகு]

ஒலித்தள இசைத் தொகுப்புகள்[தொகு]

 • அனுஷ்கா (1998)
 • அனுராக் (2000)
 • ரைஸ் (2005)
 • ப்ரீத்திங் அண்டர் வாட்டர் (2007)

நேரடி நிகழ்ச்சிகளும் தொகுப்புகளும்[தொகு]

 • கார்னேஜி ஹால் என்னுமிடத்திலான நேரடி நிகழ்ச்சி (2001)

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Anoushka Shankar Biography". musicianguide.com. January 20, 2009 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Anoushka Shankar columns". Desimartini. 2009-07-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-24 அன்று பார்க்கப்பட்டது.
 3. அவரது உழைப்பின் குழல்
 4. "எ பில்லியன் ஹேண்ட்ஸ் - பயங்கரவாதத்திற்கு எதிராகவும், ஒரு சிறந்த நாளைய பொழுதிற்காகவும் இணைந்து கொள்ளுங்கள்". 2011-03-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-05-13 அன்று பார்க்கப்பட்டது.
 5. பயங்கரமான தாக்குதல்களுக்குப் பிறகு, மும்பை முதல் இசை நிகழ்ச்சியைப் பெருந்திரளாக வரவேற்கிறது.
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2007-03-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-05-13 அன்று பார்க்கப்பட்டது.
 7. Sreelalitha, W. (2007-11-05). "Band vegan". The Hindu. http://www.hindu.com/mp/2007/11/05/stories/2007110550720300.htm. பார்த்த நாள்: 2009-11-10. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுஷ்கா_சங்கர்&oldid=3682813" இருந்து மீள்விக்கப்பட்டது