அனுராதா தொட்டபல்லாபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுராதா தொட்டபல்லாபூர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அனுராதா தொட்டபல்லாபூர்
பிறப்புசெப்டம்பர் 10, 1986 (1986-09-10) (அகவை 37)
தாவண்கரே, கருநாடகம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சு
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 15)4 பிப்ரவரி 2020 எ. [[ஓமான் பெண்கள் துடுப்பாட்ட அணி|ஓமான்]]
கடைசி இ20ப3 ஜூலை 2022 எ. நமீபியா
இ20ப சட்டை எண்18
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
கர்நாடக மகளிர் துடுப்பாட்ட அணி
நார்த்தம்பர்லேண்டு மகளிர் துடுப்பாட்ட அணி
2013–2014பிராங்க்பர்ட் (ஆண்கள் அணி)
2013–2015கலோன்
2016–பிராங்க்பர்ட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் இருபது20
ஆட்டங்கள் 23
ஓட்டங்கள் 253
மட்டையாட்ட சராசரி 16.86
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 40*
வீசிய பந்துகள் 287
வீழ்த்தல்கள் 19
பந்துவீச்சு சராசரி 9.47
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 5/1
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/–
மூலம்: ESPNcricinfo, 18 November 2022

அனுராதா தொட்டபல்லாபூர் ( Anuradha Doddaballapur )(பிறப்பு: செப்டம்பர் 10, 1986) இந்தியாவில் பிறந்த ஜெர்மன் இதய விஞ்ஞானியும் மற்றும் துடுப்பாட்ட வீரரும் ஆவார். இவர் ஜெர்மனி பெண்கள் தேசிய துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.[1][2] இவர் தற்போது பேட் நௌஹெய்மில் உள்ள இதயம் மற்றும் நுரையீரல் ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தில் முதுகலை ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார்.[3] ஆகஸ்ட் 2020 இல், சர்வதேச துடுப்பாட்ட வரலாற்றில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

அனுராதா தொட்டபல்லாபூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவனகுடியை சேர்ந்தவர்.[4] பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் பயின்றார்.[5] தனது குழந்தைப் பருவத்தில் ஒரு பள்ளித் தோழனாலும் தனது குடும்ப உறுப்பினர்களின் விளையாட்டின் மீதான ஆர்வம் காரணமாகவும் துடுப்பாட்ட விளையாட்டில் ஈடுபட தூண்டப்பட்டார்.

தொழில்[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1998-99 பருவங்களில் 12 வயதில் கர்நாடகா பெண்கள் விளையாட்டு வீரர்கள் சங்கம் நடத்திய பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். பின்னர் இவர் கர்நாடகா துடுப்பாட்ட பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர், கர்நாடகாவின் 16 வயதுகுட்பட்டோருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டார். இவர் கர்நாடகா பெண்கள் துடுப்பாட்ட அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்பு 16 வயதுகுட்பட்டோருக்கான பிரிவில் கர்நாடகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் விளையாடினார்.[6]

பெங்களூருவில் உள்ள நியூ ஹொரைசன் பொறியியல் கல்லூரியில் உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, நியூகேஸில் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மரபியலில் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக 2008 இல் இங்கிலாந்து சென்றார்.[4][7] துடுப்பாட்டம் மற்றும் உயர் படிப்புக்கு இடையில் இருந்ததால் இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்கொண்டார்.[8]

அனுராதா உயர்கல்வியில் ஈடுபடும் போது இங்கிலாந்தில் உள்ள சங்கங்களுக்காக துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார். நார்தம்பர்லேண்ட் மகளிர் கவுண்டி அணி, சவுத் நார்த் துடுப்பாட்ட சங்கம் மற்றும் நியூகேஸில் பல்கலைக்கழக அணிக்காக சில போட்டிகளில் பங்கேற்றார். இங்கிலாந்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவுடன், பிராங்பேர்ட் ஆம் மெயினில் உள்ள கோதே பல்கலைக்கழகத்தில் கார்டியோவாஸ்குலர் உயிரியலில் பிஎச்டி படிப்பதற்காக 2011 இல் ஜெர்மனிக்கு குடிபெயர்ந்தார்.[6]

பிராங்பேர்ட்டில் குடியேறிய பிறகு, இவர் தனது விளையாட்டு வாழ்க்கையை பிராங்பேர்ட் துடுப்பாட்டச் சங்கத்தில் சேர்ந்தார். பெண்கள் அணி கிடைக்காததால் ஆண்கள் அணியில் இவர் சேர வேண்டியிருந்தது. இவர் 2013 முதல் 2015 வரை ஜெர்மன் பெண்கள் பன்டெஸ்லிகா அணிக்காக சிலகாம் விளையாடினார்.[6]

தேசிய அணி[தொகு]

அனுராதா 2013 இல் ஜெர்மனி தேசிய அணி பயிற்சி முகாமில் விளையாட தனது முதல் அழைப்பைப் பெற்றார். ஆகஸ்ட் 2013 இல், ஜெர்சி நடத்திய பெண்கள் டி20 ஐரோப்பிய போட்டியில் ஜெர்மனிக்காக அறிமுகமானார்.[6] அறிமுகமானதில் இருந்தே அனுராதா தேசிய அணியில் தொடர்ந்து நிலைத்து நிற்கிறார். இவர் 2017 இல் தேசிய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[9][10]

சொந்த வாழ்க்கை[தொகு]

அனுராதா பிராங்பர்ட்டின் குவார்ட்டர் பொக்கன்ஹெய்மில் வசிக்கிறார்.[11]

Rமேற்கோள்கள் =[தொகு]

  1. "Anuradha-Doddaballapur". Deutscher Cricket Bund (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-02.
  2. "Frauen-Nationalmannschaft auf England-Tour". Deutscher Cricket Bund (in ஜெர்மன்). 2018-07-04. பார்க்கப்பட்ட நாள் 2019-05-02.
  3. "This Bengaluru doctor leads German cricket team". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-08-19. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  4. 4.0 4.1 "Basavanagudi to Bad Nauheim: Anuradha Doddaballapur's journey to new world record". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  5. "How Bengaluru gully cricketers starred in German national team". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN. 5 October 2020. https://timesofindia.indiatimes.com/city/bengaluru/how-bengaluru-gully-cricketers-starred-in-german-national-team/articleshow/78485093.cms. 
  6. 6.0 6.1 6.2 6.3 "Meet Anuradha Doddaballapur, the scientist who leads the German women's team". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  7. "A scientist who took four wickets in four balls in a T20I – The story of Anuradha Doddaballapur". DNA India (in ஆங்கிலம்). 2020-09-01. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  8. "Meet Anuradha Doddaballapur: Cardiovascular scientist, holder of cricket records too". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-08-30. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  9. "European Women's T20 tournament(2016)". German Cricket Federation (DCB). Archived from the original on 15 August 2016. பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
  10. "Women In Cricket". NormaProvenc. 2017. Archived from the original on 18 July 2021. பார்க்கப்பட்ட நாள் 20 February 2021.
  11. "Meisterliche Cricket-Kämpferin". https://twitter.com/FrankfurtCric/status/1447967529276674049. 

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_தொட்டபல்லாபூர்&oldid=3920406" இலிருந்து மீள்விக்கப்பட்டது