அதிதி குப்தா (ஆசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிதி குப்தா
பிறப்புகர்வா, சார்க்கண்டு, இந்தியா
தொழில்ஆசிரியர்
தேசியம் இந்தியா
கல்வி நிலையம்தேசிய வடிவமைப்பு நிறுவனம்
வகை"மென்ஸ்ட்ரூபீடியா காமிக்"
துணைவர்துகின் பால்
பிள்ளைகள்ஒரு மகன்
இணையதளம்
www.menstrupedia.com

அதிதி குப்தா (Aditi Gupta) ஓர் இந்திய எழுத்தாளரும், "மென்ஸ்ட்ரூபீடியா காமிக்" வலைதளத்தின் இணை நிறுவனரும் ஆவார். [1] இவரும் இவரது கணவர் துகின் பாலும், தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின், முன்னாள் மாணவர்களாவர். இவர்கள் 2012 இல் "மென்ஸ்ட்ரூபீடியா காமிக்" என்ற வரைகதை நிறுவனத்தை இணைந்து நிறுவினர். [2] 2014 ஆம் ஆண்டில், போர்ப்ஸ் இந்தியா என்ற இதழின் '30 வயதுக்குட்பட்ட சிறந்த 30 பேர் பட்டியலி'ல் இவர் இடம் பெற்றார். [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பொறியியல் பட்டதாரியான இவர் அகமதாபாத்தின் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் புதிய ஊடக வடிவமைப்பில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் இந்தியாவின் சார்க்கண்டுவில் உள்ள கர்வாவில் பிறந்தார். [4] இவரது 12 வயதிலேயே இவருக்கு மாதவிடாய் தொடங்கியது. [5] ஆனால் தனது 15 வயதில் 9 ஆம் வகுப்பில் படிக்கும்போது மாதவிடாய் பற்றி கற்பிக்கப்பட்டபோதுதான் மாதவிடாய் பற்றிக் கற்றுக்கொண்டார். தன்னுடைய குழந்தைப் பருவத்தில், மாதவிடாய் நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவோ, மற்றவர்களின் படுக்கைகளில் உட்காரவோ அனுமதிக்கப்படவில்லை. மேலும் தனது உடைகளைத் தனியாக துவைத்துக் கழுவி உலர வைக்க வேண்டியிருந்தது. சந்தையில் கிடைக்கும் விடாய்க்கால அணையாடைகளை வாங்குவதற்கு இவர் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அவற்றை வாங்குவது 'குடும்பத்தின் கௌரவத்திற்கு இழுக்கு' என்பதால் தடுக்கப்பட்டார். [6] இவர் தனது 15 வயதில் தனது முதல் விடாய்க்கால அணையாடையை வாங்கினார்.

அதிதி தனது கணவர் துகின் பாலை தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் சந்தித்தார். அங்கு இவர்கள் இருவரும் சேர்ந்து பல திட்டங்களில் பணியாற்றினர். மிகவும் படித்தவர்களிடையே கூட மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு இல்லாததை இவர்கள் கண்டறிந்தனர். மேலும் பலர் இன்னும் மாதவிடாய் கட்டுக்கதைகளை நம்பி பின்பற்றி வந்தனர். [7]

தொழில்[தொகு]

மாதவிடாய் குறித்த விழிப்புணர்வும், அதைப்பற்றிய கல்வியும் இல்லாதது ஒரு வருடத்திற்கு இந்த விஷயத்தில் ஆராய்ச்சியைச் செய்யத் தூண்டியது. [6] மருத்துவர்கள் மற்றும் சிறுமிகளிடமிருந்து தகவல்களை இவர் சேகரித்தார். இது மூன்று இளம் பெண்களையும், ஒரு மருத்துவரையும் முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு ஒரு வரைகதை புத்தகத்தைத் தொடங்கும் ஒரு யோசனை இவருக்கு தோன்றியது. அவர் ஒரு வலைத்தளத்தில் (www.talesofchange.in) வரைகதை புத்தகங்களை வெளியிட்டார். நவம்பர் 2012இல், இவரும் இவரது கணவரும் "மென்ஸ்ட்ரூபீடியா" என்ற வரைகதை நிறுவனத்தைத் தொடங்கினார். அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் இருந்தபோது இது ஓர் ஆய்வறிக்கைத் திட்டமாகத் தொடங்கியது. வலைத்தளம் 'பதின்வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு பருவமடைதல் மற்றும் பாலியல் குறித்த தகவல்களை' வழங்கும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டுள்ளது. [8]

மென்ஸ்ட்ரூபீடியா[தொகு]

மாதவிடாய், சுகாதாரம் மற்றும் பருவமடைதல் ஆகியவற்றிற்கு இந்த வலைதளம் ஓர் எளிதான வழிகாட்டியாக இருக்கிறது. மேலும், இவற்றுடன் தொடர்புடைய கட்டுக்கதைகளை உடைக்கவும் உதவுகிறது. எண்ணிம ஊடகம் மூலம் இந்த தகவலை கலாச்சார ரீதியாக உணர்திறன் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வழங்குவதே வலைத்தளத்தின் நோக்கமாகும். இணையதளத்தில் பல்வேறு வரைகதை புத்தகங்கள், வலைப்பதிவுகள், கேள்வி பதில் பிரிவு, கற்றல் பிரிவு ஆகியவை உள்ளது. இந்த வரைகதை பதினான்கு மொழிகளில் கிடைக்கிறது. மேலும், 18க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. [9] தற்போது வட இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை குப்தா தயாரித்தார். [10] குப்தா இந்த வரைகதையை மெக்சனா, காந்திநகர், அகமதாபாது, ராஞ்சி ஆகிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் விநியோகித்தார். அங்கு பெண்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இதை மிகவும் விரும்பினர். [11] சிரத்தா கபூர், பரினீதி சோப்ரா, கல்கி கோய்ச்லின், நேஹா துபியா, மந்திரா பேடி போன்ற பல நடிகைகள் இணைந்து டச் தி பிக்கிள் இயக்கம் விஸ்பர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து பல இடங்களில் "மென்ஸ்ட்ரூபீடியா" தனது பிரசாரத்தைத் தொடங்கியது. [3]

விமர்சனங்கள்[தொகு]

அதிதியின் பணி ஆரம்பத்தில் ஒரு தடைசெய்யப்பட்ட விஷயத்தைப் பற்றி விவாதித்ததற்காக விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் இது இணையத்திலும் ஊடகங்களிலும் பெரும்பான்மையினரால் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டது. [8] மென்ஸ்ட்ரூபீடியா காமிக் ஒவ்வொரு மாதமும் ஒரு இலட்சம் பார்வையாளர்களைப் பெறுகிறது. இவரது வரைகதை புத்தகங்களை புரோட்சஹான், முன்ஷி ஜெகநாத் பகவான் ஸ்மிருதி சான்ஸ்தான், இன்ஸ்டிங்க்ட்ஸ், கன்ஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், லடாக்கில் உள்ள இரண்டு பௌத்த மடாலயங்களுடன் பயன்படுத்தியுள்ளன. ஓர் இந்து மதத் தலைவரிடமிருந்து "அவர்கள் நல்லது செய்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு மதம் பற்றி எதுவும் தெரியாது" என்று விமர்சனங்களைப் பெற்றார். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. हिंदी, BBC. "#100Women मौलिक सोच, नए रास्ते (भाग-6)". http://www.bbc.com/hindi/india/2015/11/151123_100women_innovators_facewall_pk. 
  2. Mankad, Ruchi (2019-03-01). "Aditi Gupta - Ushering a ‘Period Positive’ Change" (in en-US) இம் மூலத்தில் இருந்து 2019-09-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190904093132/https://ashaval.com/aditi-gupta-ushering-period-positive-change-0313559/. 
  3. 3.0 3.1 "Forbes India Magazine - The 30 Under 30 class of 2014: A report card" (in en-US). http://www.forbesindia.com/article/30-under-30/the-30-under-30-class-of-2014-a-report-card/39557/1. 
  4. Gupta, Soumya. "'Entrepreneurship Is Game-Changer For Women'" (in en). http://businessworld.in/article/-Entrepreneurship-Is-Game-Changer-For-Women-/07-03-2017-114003. 
  5. reddy, gayatri (2015-01-04). "The lady doth protest, PERIOD!" (in en). https://www.deccanchronicle.com/150103/commentary-sunday-chronicle/article/lady-doth-protest-period. 
  6. 6.0 6.1 Bahukh, Shivani; i (2017-08-22). "In Conversation With Menstrupedia: Changing The Narrative Around Menstruation" (in en-US). https://feminisminindia.com/2017/08/23/interview-menstrupedia-aditi-gupta/. 
  7. "Aditi Gupta Menstrupedia" (in en). http://www.womensweb.in/articles/aditi-gupta-menstrupedia/. 
  8. 8.0 8.1 8.2 "Teaching children to know their bodies" (in en). 2013-08-31. http://www.womensweb.in/2013/08/teaching-children-know-their-body/. 
  9. "Spotlight on Aditi Gupta, Founder of Menstrupedia from India – World YWCA | She Speaks" (in en-US). https://www.shespeaksworldywca.org/spotlight-on-aditi-gupta-founder-of-menstrupedia-from-india/. 
  10. Foundation, Thomson Reuters. "Trust Women Conference" இம் மூலத்தில் இருந்து 2016-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220120035/http://www.trustwomenconf.com/profile/index2.html?id=1ec35123-19e1-4e40-afec-2aa132e376a8. 
  11. "Forbes India Magazine - Aditi Gupta: Addressing a Social Taboo Creatively" (in en-US). http://www.forbesindia.com/article/30-under-30/aditi-gupta-addressing-a-social-taboo-creatively/37145/1. 

வெளி இணைப்புகள்[தொகு]