உள்ளடக்கத்துக்குச் செல்

அண்மைக் குவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண்மைக் குவியத்தின் மூலம் குவிக்கப்பட்ட மஞ்சள் நிற மலர்

அண்மைக் குவியம் (Shallow focus) என்பது புல ஆழத்துடன் இணைக்கப்பட்ட புகைப்படக் கலை மற்றும் ஒளிப்பதிவுக் கலை ஆகியத் துறைகளில் உள்ள தொழினுட்பம் ஆகும். அண்மைக் குவியத்தில் ஒரு படப் பதிவிலுள்ள ஒரு பகுதி மட்டும் குவிக்கப்பட்டு மற்ற பகுதிகள் குவிக்கப்படாமல் (out of focus) இருக்கும். அண்மைக் குவியம் என்பது படத்தின் ஒரு பகுதியை மட்டும் வலியுறுத்தப் பயன்படுகிறது.[1]

புகைப்படத்தில் குவிக்கப்படாமல் இருக்கும் பகுதியின் கலைநயத்தைப் போக்கா என புகைப்பட கலைஞர்கள் அழைக்கின்றனர்.[2]

அழுத்தக் குவியம் (deep focus) என்பது அண்மைக் குவியத்திற்கு எதிரானது, இதில் மொத்த பிம்பமும் சரியான குவியத்தில் குவிக்கப்படுகிறது. அண்மைக் குவியம் 2000 லிருந்து 2010 வரை மிகவும் பிரபலமானது. குறைந்த செலவில் திரைப்படம் எடுப்போர், தங்களின் திரைப்பட பின்புலம் தெரியாமலிருக்க இவ்வகைத் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வர்.[3]

இலையுதிர் காலத்தில் சப்பானின் டோக்வாத் தோட்டத்தில் (Tokugawa Garden) எடுக்கப்பட்டப் புகைப்படம். f/1.8 அகலமுள்ள துவாரம் வழியாக எடுக்கப்படும் போது பின்புலம் குவிக்கப்படாமல் இருப்பதைக் காணலாம்.

அண்மைக் குவிய விளைவைப் பெறும் முறை

[தொகு]
அண்மைக் குவியம் மூலம் படமெடுக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட உணவு

அண்மைக் குவிய விளைவைப் பெற அதிக அகலமுள்ள துளையைப் பயன்படுத்துவது, அண்மையிலுள்ளவற்றை படம் பிடிப்பது, பெரிய தோற்றுரு உணரி (image sensor) அல்லது குறைந்த தூரத்திற்கு அதிக குவியத் தூரம் கொண்ட வில்லையைப் பயன்படுத்துதல் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. சாய்வு மாற்ற ஒளிப்படவியலையும் பயன்படுத்தலாம், இம்முறை குவியத்தைச் செம்மைப்படுத்தும் முறைக்கு எதிரானது.

35மிமீ அளவுள்ள திரைப்படக் கருவி (cine cameras) வில்லைகளைக் கொண்டு குறும்படங்களை எடுப்பதற்கும், எண்ணியல் வடிவூட்டங்களைப் (digital format) பெறவும் ஏதுவான அழுத்தக் குவிய ஏற்பிகள் (Depth-of-field adapter) பயன்படுத்தப்படுகின்றன.

அண்மையில் குவிக்கப்பட்டவிசைப் பலகையின் படம்

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mamer, Bruce (2013-05-30). Film Production Technique: Creating the Accomplished Image. Cengage Learning. pp. 19–20. ISBN 1285712560. Retrieved 2014-12-04.
  2. Allen, John RS (2013-07-25). "The Bokeh Effect". A Beginners' Guide to Ghost Hunting. Autharium. ISBN 1780258224. Retrieved 2014-12-04.
  3. Anne Helmond (March 13, 2011). "Video Vortex: Florian Cramer 'Bokeh is a form of visual fetishism, it is not avant-garde but porn'".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்மைக்_குவியம்&oldid=3909185" இலிருந்து மீள்விக்கப்பட்டது