அண்டார்க்டிசைட்டு
அண்டார்டிசைட்டு Antarcticite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆலைட்டுக் கனிமம் |
வேதி வாய்பாடு | CaCl2·6H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
படிக இயல்பு | ஊசி போன்ற படிகத் தொகுதி |
படிக அமைப்பு | முக்கோணம் |
பிளப்பு | {0001} இல் ஒழுங்கு, {1010} இல் மிக ஒழுங்கு |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2 - 3 |
மிளிர்வு | கண்ணாடித் தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 1.715 |
ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nω = 1.550 nε = 1.490 - 1.500 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.060 |
பிற சிறப்பியல்புகள் | நீர்த்துப் போகும் |
மேற்கோள்கள் | [1][2][3] |
அண்டார்க்டிசைட்டு (Antarcticite) என்பது CaCl2•6H2O.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அசாதாரணமான கால்சியம் குளோரைடு அறுநீரேற்று கனிமம் ஆகும். நிறமற்ற ஊசி போன்ற முக்கோணப் படிகங்களாக இது உருவாகிறது. நீர் உறிஞ்சும் திறன் கொண்ட இக்கனிமம் குறைவான நீர் ஒப்படர்த்தி 1.715 மதிப்பைக் கொண்டுள்ளது.
பெயரில் உள்ளபடி இக்கனிமம் 1965 ஆம் ஆண்டில் அண்டார்டிக்காவில் கண்டறியப்பட்டது. விக்டோரியா நிலப்பகுதியில் உள்ள ரைட் பள்ளத்தாக்கின் மேற்கு எல்லையில் தோன் யூவான் குளம் என்று பெயரிடப்பட்டுள்ள ஒர் ஏரியில் படிக வீழ்படிவாக இக்கனிமம் காணப்பட்டது. டெட்சுயா டொரில் மற்றும் சோயோ ஒசாக்கா என்ற யப்பானைச் சேர்ந்த புவிவேதியியல் அறிஞர்கள் இருவர் இக்கண்டுபிடிப்பை நிகழ்த்தினர்[4]. கலிபோர்னியாவில் உள்ள பிரிசுடோல் உலர் ஏரியின்]] உப்புநீரிலும், பகாமாசுவில் உள்ள வடக்கு ஆண்ட்ரோசு தீவின் நீலக் குழியின் உப்புநீர் அடுக்கிலும் காணப்பட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள பசுவெல்ட் தீப்பாறை வளாகத்தில் காணப்பட்ட பெக்மாடைட்டு வகை படிகப்பொருளில் குவார்ட்சு பாய்மத்திலும் காணப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
கலிபோர்னியா உலர் ஏரியில் கிடைத்த அண்டார்க்டிசைட்டு கனிமத்துடன் ஆலைட்டு, கிப்சம், செலசுடைன் ஆகிய கனிமங்களும் இணைந்து காணப்பட்டன. இதைப்போலவே கால்சியம் குளோரைடின் இருநீரேற்று வடிவ சின்யாரைட்டு கனிமமும் நாற்கோணத்[5] தொகுதியாகப் படிகமாகிறது. ஐதரோபைலைட்டு என்ற மற்றொரு கால்சியம் குளோரைடின் கனிமம் அண்டார்க்டிசைட்டு, சின்யாரைட்டு ஆகிய கனிமங்களில் இருந்து மாறுபட்டு இருக்கிறது.[6]