விக்டோரியா நிலப்பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்டோரியா நிலப்பகுதியின் பரப்பளவு வரைபடம்.

விக்டோரியா நிலப்பகுதி (Victoria Land ) என்பது அண்டார்டிகாவில் உள்ள ஒரு பகுதியாகும். கிழக்கில் இராசு பனித்தட்டு மற்றும் இராசு கடலும் மேற்கில் ஓட்சு நிலப்பகுதி மற்றும் வில்கெசு நிலப்பகுதியும் விக்டோரியா நிலப்பகுதிக்கு எல்லைகளாக சூழ்ந்துள்ளன. 1841 ஆம் ஆண்டில் கேப்டன் யேம்சு கிளார்க் இராசு என்பவரால் விக்டோரியா நிலப்பகுதி கண்டறியப்பட்டு இங்கிலாந்து இராணி[1] விக்டோரியாவின் நினைவாக இந்நிலப்பகுதிக்கு விக்டோரியா நிலப்பகுதி எனப் பெயரிடப்பட்டது. விக்டோரியா நிலப்பகுதியின் தென்கோடிப் புள்ளியாக பாறை முந்தலான மின்னா தட்டை முகப்பு கருதப்படுகிறது. தெற்கில் இராசு கடலோரப் பகுதியைச் சார்ந்த இல்லாரி கடற்கரையையும் வடக்கில் உள்ள சிகாட்டு கடற்கரையையும் விக்டோரியா நிலப்பகுதி பிரிக்கிறது.

அண்டார்டிக் மலைகளின் மறுபக்கம் மற்றும் மெக்மர்டோ வறண்ட பள்ளத்தாக்குகள் (வடக்கு மலையடிவாரத்தில் உள்ள மவுண்ட் அப்போட்டில் இருக்கும் மிக உயர்ந்த புள்ளி), லேபிரிந்து சமவெளி ஆகிய பகுதிகளும் விக்டோரியா நிலப்பகுதியில் அடங்கும். விக்டோரியா நிலப்பகுதியின் முந்தைய கண்டுபிடிப்பாளர் யேம்சு கிளார்க் இராசுடன் டக்ளசு மவுசன் என்பவரும் சேர்க்கப்படுகிறார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Victoria Land". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. பார்த்த நாள் 2007-01-04.
  2. "Victoria Land". The Columbia Encyclopedia, Sixth Edition. (2001-05). Columbia University Press. அணுகப்பட்டது 2008-01-26.  பரணிடப்பட்டது 2006-02-11 at the வந்தவழி இயந்திரம்