அணிக்கட்டிலம்மா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவபார்வதி கோயில்

அணிக்கட்டிலம்மா கோயில் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியிலிருந்து 3.5 கி.மீ. தொலைவிலுள்ள அனிக்காடு என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோயில் ஆகும். [1] [2]

மூலவர்[தொகு]

இக்கோயிலில் சிவனும் பார்வதியும் ஒரே அளவு முக்கியத்துடன், சிவபார்வதியாக, ஒரே கருவறையில் வழிபடப்படுகின்றனர். கருவறையில் இவ்வாறாக சிவனையும் பார்வதியையும் கொண்ட கோயில்கள் மிகவும் அரிதாகும். இவ்விருவரும் அக்னிமகாகாலனும் அக்னியேட்சியாகவும் உருவகிக்கப்பட்டுள்ளனர். அருகருகே உள்ள இந்த ஒவ்வொரு சிலையும் சுமார் 4 அடி அளவு உயமுள்ளது. நிறுவப்பட்டுள்ளன. அசுர வடிவான கிராதன் எனப்படுகின்ற சிவனின் கைகளில் வில்லும் அம்பும், பார்வதி கையில் வாளும் உள்ளன.மணிமாலா ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள இக்கோயில், 1600 ஆண்டுகளுக்கு முன், எடப்பள்ளி வம்சத்தின் ஆரம்ப காலகட்டத்தில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

சிறப்பு[தொகு]

இங்குள்ள மூலவரான அணிக்கட்டிலம்மா ஆக்கம், அழித்தலில் ஈடுபடுபவர். ஒரு தாய், தன் குழந்தைகளை கவனித்துக்கொள்வதைப்போல் அவர் தன் பக்தர்களைக் கவனித்துக் கொள்கிறார். பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்தவராக நம்பப்படுகிறார். பல பெண் பக்தர்கள் அவருடைய உன்னத சக்தியை உணர்ந்துள்ளதைக் காணமுடிகிறது. அணிக்கட்டிலம்மா அவர்கள் வேண்டுகின்ற குழந்தைப்பேறு, வளமான வாழ்க்கை ஆகியவற்றைத் தந்து ஆசீர்வதிப்பாகக் கூறுகின்றனர்.

துணைத்தெய்வங்க[தொகு]

இங்கு சிவன், பத்ரா, நாகராஜா, ராட்சசர்கள், யட்சியம்மா ஆகிய துணைத்தெய்வங்களும் உள்ளன.

திருவிழாக்கள்[தொகு]

கும்பம் மாதத்தில் பூரம் அன்று பொங்கல் விழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா கும்பம் மாதத்தில் எட்டு நாட்கள் கொண்டாடப்பட்டு பூரம் நட்சத்திரத்தன்று முடிவடைகிறது. கேரளாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கும் இந்த கோவிலின் மிகவும் புகழ்பெற்ற திருவிழா ஆணிக்கட்டிலம்மைக்கு பொங்கல் விழாவாகும். பொங்கலன்று ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு காணிக்கை செலுத்தி அருள் பெறுகின்றனர். மலையாள மாதமான மகரம்-கும்பம் (பிப்ரவரி-மார்ச்) ரோகிணி நாளில் திருவிழா தொடங்கி எட்டு நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் எட்டாவது நாள் புகழ்பெற்ற பொங்கலா ஆகும். அன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் மண் பானைகளில் பொங்கலைப் படைக்க கோவிலுக்கு வருகின்றனர். பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் நிலையில் கோயிலில் வைக்கப்படுகின்ற பொங்கலானது பொங்கி கோயிலின் வெளியே சாலைக்கும் வந்துவிடும். சுமார் 2 கி.மீ. சுற்றளவில் பெண்கள் பொங்கலைப் படைக்கின்றனர். முக்கியமாக புல்லுக்குத்தி, காவல்கடவு முழுதும் பெண்கள் பொங்கல் வைக்கும் புனிதத்தலங்களாக மாறிவிடுகின்றன.

போக்குவரத்து வசதி[தொகு]

மல்லப்பள்ளி மற்றும் கருகச்சல் நகரங்கள் வழியாக இக்கோயிலுக்கு வரலாம். தெற்கு கேரளாவில் இருந்து வருபவர்கள் திருவல்லா மல்லப்பள்ளி, புல்லுக்குத்தி வழியாக வரலாம். இருப்பினும் வட கேரளாவில் இருந்து வரும் பக்தர்கள் கோட்டயம், கருகச்சல், நூரோம்மாவு வழியாக வரலாம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணிக்கட்டிலம்மா_கோயில்&oldid=3835629" இலிருந்து மீள்விக்கப்பட்டது