பத்ரா (இந்து தேவதை)
இந்து மதத்தில் பத்ரா (Bhadra) எனும் பெயர் பல்வேறு தேவதைகளைக் குறிக்கிறது. குபேரனின் மனைவி, சந்திரனின் மகள், கிருஷ்ணரின் மனைவி, ஒரு மலை [1] சக்தி வடிவமான துர்கா தேவியின் உடனிருப்பவர் என்றவாறு பல தேவதைகளின் வடிவங்களுக்கு இந்தப் பெயர் வழங்கப்படுகிறது[2][3][4]
குபேரனின் மனைவி
[தொகு]பத்ரா என்ற பெயர் யக்சி, இச்சாவி, ரித்தி, மனோரமா[5] நிதி,[6] சகாதேவி [7] மற்றும் குபேரி என்றும் அழைக்கப்படுகிறார். குபேரி என்ற பெயர் மங்களம் அல்லது சுபம் அல்லது சௌபாக்கியத்தைக் குறிப்பதாகவும், சிறு தெய்வங்களில் ஒருவரான குபேரனின் மனைவி என்றும் குறிப்பிடப்படுகிறார். முரா என்ற அசுரனின் மகள் ஆவார். பத்ரா மற்றும் குபேரன் ஆகியோருக்கு நளகுவாரா, மணிக்ரியா, மயூராஜா என்ற மூன்று மகன்களும், மீனாட்சி என்ற மகளையும் கொண்டிருந்தனர். இராவணன் இலங்கைக்குள் புகுந்து அதைக் கைப்பற்றிய பிறகு அல்காபுரிக்கு நகர்ந்துள்ளனர்.[8][9][10][11]
சந்திரனின் மகள்
[தொகு]மற்றொரு விதத்தில், பத்ரா சந்திரின் மகள் எனவும் இவள் உடத்யா என்ற முனிவருக்கு மணம் முடிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. வருணக் கடவுள் முன்னதாக பத்ராவின் அழகில் மயங்கியவர் உடத்யாவின் பர்ணசாலையிலிருந்து பத்ராவைக் கைப்பற்றி வந்தார் எனவும் கூறப்படுகிறது. நாரதரிடம் பத்ராவை மீட்டு வரச் சொல்லியதன் பேரில் நாரதர் வருணனிடம் சென்று கேட்டும் கூட பத்ராவை அனுப்பி வைக்க வருணன் இசையவில்லை. இதன் காரணமாக உடத்யா சீற்றமடைந்து கடலில் உள்ள நீர் முழுவதையும் குடித்து விட்டதாகவும் அப்பொழுதும் வருணன் பத்ராவை விடவில்லை எனவும் கூறப்படுகிறது. பின்னர் வருணனின் ஏரி மற்றும் பெருங்கடல்களும் முழுவதுமாக வற்றச் செய்யப்பட்டன. பின்னர் உடத்யா நாடுகளில் பாய்ந்து வந்த சரஸ்வதி போன்ற நதிகளை பாலைவனத்திற்குள் புகச் செய்து வளமாக இருந்த நாட்டை பாலைவனமாக மாற்றினார். நாடே வறண்டு போன பின்னர் வருணன் முனிவரிடம் பணிந்து பத்ராவை மீண்டும் கொண்டு வந்து ஒப்படைத்தான். இதன் பின்னர் முனிவர் மகிழ்ந்து உலகையும், வருணனையும் துன்பங்களிலிருந்து காப்பாற்றினர் என்ற புராணமும் உண்டு.[12]
கிருஷ்ணரின் மனைவி
[தொகு]பத்ரா ஒரு அஷ்டபார்யா, இந்துக் கடவுள் கிருஷ்ணரின் முதன்மை அரசிகளில் எட்டாவதானவர் என்று பாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் பாகவத புராணத்தின் படி இவரது மைத்துனியாகவும், எட்டாவது மனைவியாகவும் குறிப்பிடப்படுகிறார். விஷ்ணு புராணம் மற்றும் ஹரிவம்சம் ஆகியவை பத்ரா கேகேய நாட்டு இளவரசி அல்லது திருஷ்டகேதுவின் மகள் என குறிப்பிடப்படுகிறார்.
வியுஷிடஸ்வாவின் மனைவி
[தொகு]பத்ரா (அல்லது வத்ரா) காக்சிவாத்தின் மகள் மற்றும் புரு அரசன் வியுஷிடஸ்வாவின் மனைவி என்றும் அறியப்படுகிறார். இவரின் கணவர் தனக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் இறந்து போன போது இவர் தன் கணவரைத் தொடர்ந்து செல்ல தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளத் துணிந்தார். ஆனால் இந்த தருணத்தில் பௌர்ணமியிலிருந்து எட்டாம் மற்றும் பதினான்காம் நாளில் அவரது கணவரின் சடலத்துடன் உடலுறவு கொள்ள ஒரு அசரீரி குரல் கூறியது. அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி, மாதவிடாய் குளியலுக்குப் பிறகு தன் கணவரின் சடலத்துடன் உடலுறவு கொண்டார், இதன் விளைவாக ஏழு மகன்கள் பிறந்தனர்.
இவ்வாறு பத்ரா என்ற பெயரைச் சுற்றி இந்து மதத்தில் பல புராணக் கதைகள் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 75. இணையக் கணினி நூலக மைய எண் 500185831.
- ↑ 1) Bangala Bhasar Abhidhaan ( Dictionary of the Bengali Language) Shishu Sahitya Samsad Pvt Ltd. 32A, APC Road, Kolakata – 700009, Volume 1, p.151. (ed. 1994)
- ↑ Manorama Year Book (Bengali edition)Malyala Manorama Pvt. Ltd., 32A, APC Road, Kolkata- 700 009(ed.2012), p.153
- ↑ "Archived copy". Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Brahmavaivarta Purana Brahma Khanda(Khanda I) Chapter 5 Verse 62, English translation by Shantilal Nagar Parimal Publications Link: https://archive.org/details/brahma-vaivarta-purana-all-four-kandas-english-translation
- ↑ Devdutt Pattanaik's 7 SECRETS OF THE GODDESS, Chapter 5. Lakshmi's Secret Page 180
- ↑ Padma Purana Srishti Khanda First Canto Chapter 5.Verse 15, English translation by Motilal Bansaridas Publications Book 1 Page 41, Link: https://archive.org/details/PadmaPuranaVol05BhumiAndPatalaKhandaPages15651937ENGMotilalBanarsidass1990_201901/Padma-Purana%20Vol-01%20-%20Srshti-Khanda%20-%20pages%201-423%20ENG%20Motilal%20Banarsidass%201988
- ↑ Daniélou, Alain (1964). "Kubera, the Lord of Riches". The myths and gods of India. Inner Traditions / Bear & Company. pp. 135–7.
- ↑ Wilkins, W. J. (1990). Hindu Mythology, Vedic and Puranic. Sacred texts archive. pp. 388–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-9308-4.
- ↑ Knapp, Stephen (2005). The Heart of Hinduism: The Eastern Path to Freedom, Empowerment and Illumination. iUniverse. pp. 192–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-595-79779-2.
- ↑ "Puranic encyclopaedia : A comprehensive dictionary with special reference to the epic and Puranic literature". 1975.
- ↑ Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.