அடையாளப்பொருள் நம்பிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வோடூ( voodoo) அடையாளப்பொருள் சந்தை, லோமே, டோகோ, 2008

அடையாளப்பொருள் வழிபாடு (ஆங்கில மொழி: Fetishism) என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் சில பொருட்களில் காணப்படுகின்றது என்று எண்ணுவதைக்குறிக்கும். இத்தகைய பொருட்கள் தன்னகத்தே சில சக்தியைக் கொண்டுள்ளன என்றும், மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களை இவை செய்யவல்லன என்றும் நற்பலன்களை ஏற்படுத்தவல்லன என்றும் மக்கள் ஆதி காலத்திலிருந்து நம்பி வருகின்றனர்.

அடையாளப்பொருள் வழிபாட்டில், வழிபாட்டிற்குரிய பொருட்கள் உயிருள்ளவையாகவோ, உயிரற்றவையாகவோ, இயற்கையானவையாகவோ, செயற்கையாகவோ இருக்கலாம். பெரும்பாலான பண்பாடுகளில் மண்டையோடுகள், எலும்புகள், செதுக்கப்பட்ட சிற்பங்கள், தனித்தன்மையுடைய கற்கள், மரப்பொருட்கள், கையால் வரையப்பட்ட சித்திரங்கள், பறவைகளின் இறகுகள் போன்ற பலவகை பொருட்கள்.[1] அடையாளப்பொருள் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. இவையனைத்தும் இயற்கையை மீறிய ஆற்றலைக் கொண்டுள்ளன என்று இன்றும் நம்பப்படுகின்றது.

இந்துக்களின் செயற்கைப்பொருள் வழிபாடு[தொகு]

தமிழ்நாட்டில் செம்பு அல்லது இரும்பினால் செய்யப்பட்ட தாயத்துக்களைக் கட்டிக் கொள்வது, மந்திரித்து கட்டிக் கொள்ளப்படும் கயிறு, நூல் போன்றவை, நரி பற்கள், யானை முடி போன்றவை போலி பொருள் வழிபாட்டின் ஒரு அங்கமாகும். தீர்த்த தண்ணீர் நோய் தீர்க்கும் மருந்தாக பாவித்தல், கற் சிலைகள், மரங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை தொட்டு வணங்குதல், கல்லில் பால் ஊற்றுதல், கோவில் வளாகத்தில் உள்ள மண் எடுத்து வணங்குதல், இவைகளை புனித பண்டங்களாக எடுத்து கொள்ளல், உப்பு, மிளகு, பூ, நூல், விளக்கு, போன்றவற்றை புனித பொருளாக பத்திரப்படுத்துதல், குருக்கள், சாமியார்கள், வேண்டப்பட்ட மனிதர்களின் உடலின் பகுதியையோ அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், உடை போன்றவற்றை புனிதமாக கருதி பாதுகாத்தல் எல்லாம் செயற்கைப்பொருள் வழிபாட்டின் பகுதியாக கருதப்படுகின்றது.

கிறித்தவர்களின் செயற்கைப் பொருள் வழிபாடு[தொகு]

கத்தோலிக்க கிறித்தவர்களிடம் இருக்கின்ற நற்கருணை பக்தி அதை சார்ந்த நம்பிக்கைகள் எல்லாம் மானுடவியல் பார்வையில் போலிப் பொருள் வழிபாட்டின் அம்சங்களாக கருதப்படுகின்றன. சிலுவையை முத்தமிடுதல், செபமாலையை முத்தமிடுதல், புனிதர் படங்களை வணங்குதல், உத்தரியம் அணிதல் ஆகியவை செயற்கைப் பொருள் வழிபாடக பார்கப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Animals: fact and folklore," New Mexico Magazine, August 2008, pp. 56-63, see New Mexico magazine website.