அடிமுலப்பு சுரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிமுலப்பு சுரேஷ்
ஆந்திரப் பிரதேச அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 ஏப்ரல் 2022
முன்னையவர்போட்சா சத்யநாராயணா
ஆந்திரப் பிரதேச அரசின் கல்வித் துறை அமைச்சர்[1]
பதவியில்
8 ஜூன் 2019 – 7 ஏப்ரல் 2022
முதலமைச்சர்ஜெகன் மோகன் ரெட்டி
முன்னையவர்கண்ட சீனிவாசராவ்
பின்னவர்போத்சா சத்யநாராயணா
ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்டேவிட் ராஜு பாலபர்த்தி
தொகுதிஎர்ரகொண்டபாலம்
பதவியில்
2014–2019
முன்னையவர்பி. என். விஜய்குமார்
பின்னவர்டி. ஜே. ஆர். சுதாகர் பாபு
தொகுதிசந்தனூதலபாடு
பதவியில்
2009–2014
முன்னையவர்புதியதாக உருவாக்கப்பட்டது
பின்னவர்டேவிட் ராஜு பாலபர்த்தி
தொகுதிஎர்ரகொண்டபாலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 ஏப்ரல் 1964 (1964-04-27) (அகவை 60)
மர்கபூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்டி. எச். விசயலட்சுமி
பிள்ளைகள்அடிமுலப்பு விசால், அடிமுலப்பு சிருஷ்டி
பெற்றோர்s
  • அட்முலப்பு சாமுவேல் ஜியார்ஜ் (father)
  • செருக்குரில் தெரசாம்மாள் (mother)
வேலைஅரசியல்வாதி

அடிமுலப்பு சுரேஷ் (Audimulapu Suresh) (பிறப்பு: ஏப்ரல் 27, 1964) ஓர் முன்னாள் அரசு ஊழியரும், அரசியல்வாதியும் பதினான்காவது ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராவார். தற்போது, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் ஆந்திரப் பிரதேச அரசின் கல்வி அமைச்சராக உள்ளார். [2] [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரகாசம் மாவட்டத்தின் மர்க்கபூரில் ஜார்ஜ் குழும நிறுவனங்களின் நிறுவனர் அடிமுலப்பு சாமுவேல் ஜார்ஜுக்கு பிறந்தார். இவரது தந்தை பதினோராவது மக்களவை பொதுத் தேர்தலில் ஓங்கோல் தொகுதியில் போட்டியிட்டார். சுரேஷ் 1984 இல் தேசிய தொழில்நுட்பக் கழகதில் குடிசார் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார், பின்னர் கணினி அறிவியல் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். [4] இவர் டி. எச். விஜயலட்சுமி என்பவரை மணந்தார். முன்னதாக, சுரேஷ் இந்திய ரயில்வேயில் துணை நிதி அதிகாரி மற்றும் தலைமை கணக்கு அதிகாரியாக பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2009 ஆம் ஆண்டு இந்திய இரயில்வேயில் இருந்து அரசு ஊழியர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 மற்றும் 2019 பொதுத் தேர்தர்களில் எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2014 இல் சந்தனூதலபாடு சட்டமன்றத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

ஆண்டு தொகுதி அரசியல் கட்சி விளைவு
2009 எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி இந்திய தேசிய காங்கிரசு வெற்றி
2014 சந்தனூதலபாடு சட்டமன்றத் தொகுதி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி
2019 எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Andhra Pradesh Ministers: Portfolios and profiles" (in en-IN). 8 June 2019 இம் மூலத்தில் இருந்து 15 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220415155454/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-ministers-portfolios-and-profiles/article27698301.ece. 
  2. "AP Cabinet 2019: 25 ministers inducted into Jaganmohan Reddy's Cabinet". Bennett, Coleman & Company. https://timesofindia.indiatimes.com/city/amaravati/andhra-pradesh-cm-ys-jagan-cabinet-ministers-complete-list/articleshow/69699829.cms. 
  3. "Council of Ministers".
  4. Staff Reporter. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Ph.D.-awarded-to-MLA/article16136111.ece. 
  5. "Suresh Audimulapu".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமுலப்பு_சுரேஷ்&oldid=3823773" இலிருந்து மீள்விக்கப்பட்டது