போட்சா சத்யநாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போட்சா சத்யநாராயணா
ஆந்திரப் பிரதேச அரசில் கல்வியமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 ஏப்ரல் 2022
முதலமைச்சர்ஜெகன் மோகன் ரெட்டி
முன்னையவர்அடிமுலப்பு சுரேஷ்
ஆந்திரப் பிரதேசத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான அமைச்சர்
பதவியில்
8 ஜூன் 2019 – 7 April 2022
முன்னையவர்பி. நாராயணா
பின்னவர்அடிமுலப்பு சுரேஷ்
போக்குத்துவரத்து ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
2011-2014
முன்னையவர்எஸ். விஜயராம ராஜு
பின்னவர்கிஞ்சராபு அச்சன் நாயுடு
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
2009-2011
முன்னையவர்ஜே. சி. திவாகர் ரெட்டி
பின்னவர்ஜனா ரெட்டி
வீட்டுவசதித் துறை அமைச்சர், ஆந்திரப் பிரதேச அரசு
பதவியில்
2004-2009
முன்னையவர்கிஞ்சராபு எர்ரான் நாயுடு
பின்னவர்சில்பா மோகன் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1999 - 2004
முன்னையவர்கொண்டப்பள்ளி பைதிதள்ளி நாயுடு
பின்னவர்கொண்டப்பள்ளி பைதிதள்ளி நாயுடு
தொகுதிபொப்பிலி மக்களவைத் தொகுதி
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்கே. மிருணாளினி
தொகுதிசீபுருபல்லி
பதவியில்
2004–2014
முன்னையவர்கத்தே பாபு ராவ்
பின்னவர்கே. மிருணாளினி
தொகுதிசீபுருபல்லி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 சூலை 1974 (1974-07-09) (அகவை 49)
விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2015 – தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2015)
பிள்ளைகள்2[1]
வாழிடம்(s)கஜுவக்கா, விஜயநகரம்

போட்சா சத்தியநாராயணா (Botsa Satyanarayana) (9 ஜூலை 1958) [2] ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். 2015 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரசில் இருந்த அவர், 7 ஜூன் 2015 அன்று YSR காங்கிரஸில் சேர்ந்தார் [3] இவர் ஆந்திரப் பிரதேசத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான முன்னாள் மாநில அமைச்சர் ஆவார். [4]

சொந்த வாழ்க்கை[தொகு]

போட்சா, விசயநகரத்தில் பிறந்தவர். மகாராஜா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2006 இல் பொப்பிலி மக்களவைத் தொகுதியிலிருந்தும் 2009 இல் விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் மக்களவை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்,ஜான்சி லட்சுமி என்பவரை மணந்தார். இவருக்கு அரசியல்வாதியான போட்சா அப்பால நரசையா என்ற சகோதரர் உள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

போட்சா சத்தியநாராயணா , 1999-ம் ஆண்டு பொப்பிலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார்.[5] இந்தத் தேர்தலில் ஆந்திராவிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் தேர்தெடுக்கப்பட்ட 5 மக்களவை உறுப்பினர்களும் இவரும் ஒருவர். இவர்,2004 மற்றும் 2009ல் சீப்புருபள்ளி சட்டமன்றத் தொகுதியில் இருந்து சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், கனரக தொழில்கள், பஞ்சாயத்து ராஜ், [6] [7] வீட்டுவசதி, போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் அமைச்சராக பணியாற்றினார். ஆந்திரப் பிரதேச காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். [8]

2009 ஆம் ஆண்டு வானூர்தி விபத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறந்த பிறகு, கொனிஜெட்டி ரோசய்யா, நல்லாரி கிரண் குமார் ரெட்டி ஆகியோர் ஆந்திராவின் முதல்வராக பதவி வகித்தனர். அப்போது, முதல்வர் வேட்பாளராக இவரது பெயரும் பரிசீலனையில் இருந்தது. [9]

2015 ஆம் ஆண்டில், போட்சா இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இருந்து ராஜினாமா செய்து தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். [10] இவர் 2019 இல் சீபுருபள்ளி தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். 8 ஜூன் 2019 முதல் 7 ஏப்ரல் 2022 வரை ஆந்திரப் பிரதேச அரசில் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றினார் [11] [12]

ஜி20 சுகாதார மாதிரி மருத்துவமனை[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் அமைந்துள்ள பல்சஸ் விஜயா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், இவரால் 2023 இல் திறக்கப்பட்டது. பல்சஸ் குழுமம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசின் ஆரோக்கியசிறீ நலத் திட்டத்தால் நிதியளிக்கப்பட்ட இந்த மருத்துவமனை உள்கட்டமைப்பு 25,000 சதுர மீட்டருக்கு மேல் பரந்து விரிந்துள்ளது. இந்த மருத்துவமனையானது இதய நோய் முதல் அவசரகால சேவைகள் வரை பலவிதமான சிறப்புகளை வழங்குகிறது. [13] [14] [15]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Detailed Profile - Dr. (Smt.) Jhansi Lakshmi Botcha - Members of Parliament (Lok Sabha) - Who's Who - Government: National Portal of India". 16 May 2012. Archived from the original on 16 May 2012. பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  2. "Botsa Member of Parliament".
  3. "All clouds clear for Botsa's entry into YRSCP - ApNewsCorNer".
  4. "Jagan's 25 sworn in: Full list of Andhra Cabinet ministers".
  5. "Botsa Member of Parliament".
  6. "Crisis in Andhra as minister quits, 10 others unhappy". http://economictimes.indiatimes.com/news/politics/nation/Crisis-in-Andhra-as-minister-quits-10-others-unhappy/articleshow/7027271.cms. 
  7. "SI test cancellation irks leaders". http://www.deccanchronicle.com/hyderabad/si-test-cancellation-irks-leaders-083. 
  8. "Botsa PCC Chief". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/botcha-happy-with-pcc-chiefs-post/article4539237.ece. 
  9. "I am true political heir of YSR: Botsa". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 July 2010. http://articles.timesofindia.indiatimes.com/2010-07-13/hyderabad/28279270_1_odarpu-yatra-kadapa-congress-mp-jagan. பார்த்த நாள்: 3 December 2010. 
  10. "Botcha joins YSR Congress along with kin, followers". https://www.thehindu.com/news/national/botcha-joins-ysr-congress-along-with-kin-followers/article7291415.ece. 
  11. "పురపాలక శాఖ మంత్రి బొత్స-3 క్యాపిటల్స్".
  12. "Minister Botsa on 3 capitals".
  13. "Andhra Pradesh minister Satyanarayana inaugurates multi-specialty hospital in Srikakulam". 2 June 2023.
  14. "G20 Health Summit Series Initiates Affordable Healthcare Model In Srikakulam With A New 100 Bed Pulsus Vijaya Multi-Speciality Hospital & Research Centre". 2 June 2023.
  15. "Pulsus Group establishes hospital in AP in PPP model". 2 June 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்சா_சத்யநாராயணா&oldid=3823772" இலிருந்து மீள்விக்கப்பட்டது