அசாம் இலை ஆமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் இலை ஆமை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜியோஎமைடிடே
பேரினம்:
சைக்கிள்மிசு
இனம்:
சை. ஜெமிலி
இருசொற் பெயரீடு
சைக்கிள்மிசு ஜெமிலி
பிரிட்சூ மற்றும் பலர், 2008
சைக்கிள்மிசு ஜெமிலி பரம்பல்

அசாம் இலை ஆமை (Assam leaf turtle)(சைக்கிள்மிசு ஜெமிலி) என்பது ஜியோமிடிடே குடும்பத்தில் உள்ள ஒரு ஆமை சிற்றினம் ஆகும்.[1][3][4] இந்த ஆமைச் சிற்றினத்தின் தாயகம் இந்தியா, நேபாளம், பூட்டான் மற்றும் வங்கதேசம்.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

அசாம் இலை ஆமையின் சிற்றினப் பெயரான ஜெமிலி, ஆத்திரிய ஊர்வனவியலாளர் ரிச்சர்ட் ஜெமல் (பிறப்பு 1948) நினைவாக இடப்பட்டது.[4][5]

விளக்கம்[தொகு]

சி. ஜெமிலியின் மேலோடு முதிர்வடைந்த ஆமைகளில் வடிவங்களைக் கொண்டிருக்கவில்லை. அசாம் இலை ஆமை நீளமானது மற்றும் ஒப்பீட்டளவில் தட்டையானது. கிட்டத்தட்ட இணையான பக்கங்களைக் கொண்டது. மார்புப்பரிசம் வடிவமற்று அடர் பழுப்பு நிறத்திலானது. தலை பழுப்பு நிறமாகவும், தொண்டை மற்றும் கழுத்து ஒரே மாதிரியான கருமையாகவும் இருக்கும். தலையினையும் கழுத்தினையும் இணைக்கும் இணைப்பு அடர் பழுப்பு நிறத்தில் உள்ளது.[6][7]

புவியியல் வரம்பு[தொகு]

அசாம் இலை ஆமை வடகிழக்கு இந்தியா, நேபாளம், பூட்டான்,[1][4] மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1] இதன் புவியியல் வரம்பு மியான்மர் வரை நீட்டிக்கப்பட்டுக் காணப்படுகிறது.[1]

வாழிடம்[தொகு]

அசாம் இலை ஆமையின் விருப்பமான இயற்கை வாழ்விடங்கள் நன்னீர் ஈரநிலங்கள் மற்றும் காடுகள் ஆகும்.[1]

இனப்பெருக்கம்[தொகு]

அசாம் இலை ஆமை ஐந்து வயதில் பாலியல் முதிர்ச்சியை அடைகிறது.[1] எல்லா ஆமைகளையும் போலவே, இது முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 species:Peter Praschag; species:Mohammad Fioz Ahmed (2021). "Cyclemys gemeli ". IUCN Red List of Threatened Species 2021: e.T170507A1315452. doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T170507A1315452.en. https://www.iucnredlist.org/species/170507/1315452. பார்த்த நாள்: 28 May 2022. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. Turtle Taxonomy Working Group (Rhodin AGJ, van Dijk PP, Iverson JB, Shaffer HB) (2010). "Turtles of the world, 2010 update: annotated checklist of taxonomy, synonymy, distribution, and conservation status". In: Rhodin AGJ, Pritchard PCH, van Dijk PP, Saumure RA, Buhlmann KA, Iverson JB, Mittermeier RA (editors) (2010). "Conservation Biology of Freshwater Turtles and Tortoises: A Compilation Project of the IUCN/SSC Tortoise and Freshwater Turtle Specialist Group". Chelonian Research Monographs (5): 000.85–000.164, எஆசு:10.3854/crm.5.000.checklist.v3.2010
  4. 4.0 4.1 4.2 4.3 Cyclemys gemeli at the Reptarium.cz Reptile Database
  5. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Cyclemys gemeli, p. 99).
  6. species:Uwe Fritz; species:Daniela Guicking; species:Markus Auer; species:Robert S. Sommer; species:Michael Wink; species:Anna K. Hundsdörfer (2008). "Diversity of the Southeast Asian leaf turtle genus Cyclemys: how many leaves on its tree of life?". Zoologica Scripta 37 (4): 367–390. doi:10.1111/j.1463-6409.2008.00332.x. http://www.iucn-tftsg.org/wp-content/uploads/file/Articles/Fritz_etal_2008a.pdf.  (Cyclemys gemeli, new species).
  7. Praschag, Peter; Hundsdörfer, Anna K.; Fritz, Uwe (2009). "Further specimens and phylogenetic position of the recently described leaf turtle species Cyclemys gemeli (Testudines: Geoemydidae)". Zootaxa 29 (37): 29–37. http://www.mapress.com/zootaxa/2009/f/zt02008p037.pdf. பார்த்த நாள்: March 29, 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_இலை_ஆமை&oldid=3820714" இலிருந்து மீள்விக்கப்பட்டது