அக்ரோட்ரேமா அர்னோட்டியானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்ரோட்ரேமா அர்னோட்டியானம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. arnottianum
இருசொற் பெயரீடு
Acrotrema arnottianum
Wight, 1840

அக்ரோட்ரேமா அர்னோட்டியானம் (தாவரவியல் பெயர்: Acrotrema arnottianum) என்ற பூக்கும் தாவரம், தில்லினேசியே (Dilleniaceae) என்ற தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இதன் பிறப்பிடம், இந்திய மாநிலங்களான கேரளம், தமிழ்நாடு என கண்டறிந்துள்ளனர்.[1] இத்தாவரயினம் பல்லாண்டுத் தாவரம் ஆகும். இது குட்டையான தண்டுப்பகுதியையும், முட்டை வடிவிலான இலைகளையும் கொண்டுள்ளது. பூக்கள் இருபாலின மலர்களாகவும், மஞ்சள் நிறத்துடனும் இருக்கின்றன. பழங்கள் நுண்ணறைகள் (follicules) கொண்டதாகவும், விதைகள் பளபளப்புடனும் இருக்கின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Acrotrema arnottianum Wight". Plants of the World Online. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2024.
  2. "Acrotrema arnottianum - Arnott's Acrotrema". www.flowersofindia.net. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2024.