உள்ளடக்கத்துக்குச் செல்

அறுவடை எறும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகோனோமைர்மெக்சு படியசு வேலைக்கார எறும்புகள் தானியக் களஞ்சியத்தில் சேர்க்க விதையைக் கொண்டு செல்லும் காட்சி
மெச்சர் சிற்றினம் விதைகளை தங்கள் கூட்டிற்கு கொண்டு செல்லுதல்

அறுவடை எறும்பு (Harvester ant) விதைகளைச் சேகரிக்கும் எறும்புகளின் பேரினம் அல்லது சிற்றினங்களின் பொதுவான பெயர் (விதை வேட்டையாடுதல் என்று அழைக்கப்படுகிறது). மேலும் காளான்களை யூப்ரெனோலெபிசு ப்ரோசெரா சேகரிக்கின்றது. இவை எறும்பு புற்றுகளில் சில அறைகளில் சேமிக்கப்படுகின்றன. இந்த அறைகள்களஞ்சியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.[1] இத்தகைய எறும்புகள் விவசாய எறும்புகள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. சில பாலைவன எறும்புகளின் விதை அறுவடை என்பது ஹெமிப்டிரான்களிடமிருந்து இரை அல்லது தேன்பனி போன்ற வழக்கமான எறும்பு வளங்களின் பற்றாக்குறை தழுவலாகும். அறுவடை எறும்புகள் விதை பரவல் பணியினையும் விதைப் பாதுகாப்பினையும் அதிகரிக்கின்றன. மேலும் பாலைவன தாவரங்களின் உயிர்வாழ்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. கூடுதலாக, இத்தகைய எறும்புகள் மண்ணில் அறைகளை உருவாக்குவதன் மூலம் மண்ணின் காற்றோட்டத்தை அதிகரிக்கின்றது. மண்ணின் ஆழமான மற்றும் மேல் அடுக்குகளைக் கலக்கின்றன மற்றும் மண்ணில் கரிம கழிவுகளை இணைக்கின்றன.[2]

விதை பரவல்

[தொகு]

எறும்புகள் விதை பரவல் அல்லது விதை வேட்டையாடுபவர்களாக அல்லது இரண்டு பணியினையும் செயல்படுத்துவதன் மூலம் தாவர சமூகங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அறுவடை எறும்புகள் சவன்னா தாவரங்கள் மற்றும் தாவர விதைகளைப் பகலில் சேகரித்து தங்கள் கூட்டிற்குக் கொண்டு செல்கின்றன. எறும்புகள் இந்த விதைகளை இரண்டு முக்கிய வழிமுறைகள் மூலம் பரப்புகின்றன. இவை மிர்மிகோகோரி (myrmecochory), அல்லது எலியோசோம் பரப்பப்படுகின்றன. இதில் கொழுப்பு நிறைந்த விதை முக்கியமாக விதையினை விரும்பாத எறும்புகளை ஈர்க்கிறது. விதைப்பரவுதல் அல்லது விதை பரவல் விதை அறுவடை செய்யும் எறும்புகள் மூலம் பரவுதல். முந்தியது பாரம்பரியமாக முக்கியமாக ஒரு பரசுபரவாதமாக அங்கீகரிக்கப்பட்டாலும், பிந்தியது பொதுவாக விரோதமாகக் கருதப்படுகிறது.[3]

உணவு தேடும் நடத்தை

[தொகு]

வெப்பமான, வறண்ட நிலையில் உணவு தேடும் எறும்புகள் தண்ணீரை இழக்கின்றன. ஆனால் அவை உண்ணும் விதைகளில் உள்ள கொழுப்புகளை வளர்சிதை மாற்றம் செய்வதன் மூலம் தண்ணீரைப் பெறுகின்றன. உணவு தேடுபவர்கள் உணவுடன் திரும்பும் எறும்புகள் உணவு தேடுதல் செயல்பாடு குறித்த நேர்மறையான கருத்துக்களை உணவு தேடச்செல்லும் எறும்புகளுக்குத் தெரிவிக்கின்றன. இதனால் தேவையற்ற தேடுதல் மூலம் நீர், சக்தி இழப்பு தவிர்க்கப்படுவதோடு தற்போதைய உணவு இருப்புக் குறித்த தகவலும் எறும்புப் புற்றில் உள்ள உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது.[4]

பல அறுவடை எறும்பு இனங்களில், உணவு தேடும் நடத்தை வானிலையால் பாதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, எறும்பு மெசசர் ஆன்ட்ரேயில், அதிக ஈரப்பதமான நிலையில் உணவினைப் பெற அதிக அளவில் ஆட்சேர்ப்பு இருக்கும். வானிலையில் நாளுக்கு நாள் ஏற்படும் மாற்றங்களால் ஈரப்பதம் மற்றும் உணவு கிடைப்பது இரண்டும் பாதிக்கப்படுகிறது. காற்று மற்றும் வெள்ளத்தால் உணவு விநியோகிக்கப்படுகிறது. மண்ணின் மேல் அடுக்கில் உள்ள விதைகளை மழை வெளிப்படுத்துகிறது. போகோனோமைர்மெக்சு பார்படசு சிற்றின கூட்டமைப்பில் ஈரப்பதம் மற்றும் உணவு கிடைப்பது இந்த கூட்டமைப்பு உறுப்பினர்களின் தினசரி நடவடிக்கைகளில் வலுவான மாற்றங்களை உருவாக்குகின்றன.[5]

கூட்டமைப்பில், ஈரப்பதம் மற்றும் உணவு தேடுதல் செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பில் வேறுபடலாம். கூட்டமைப்பு ஆண்டுக்கு ஆண்டு தொடர்ச்சியாக வேறுபடுகின்றன. மேலும் பெரும்பாலான கூட்டமைப்பு அதிக ஈரப்பதம் மற்றும் அதிக உணவு கிடைக்கும் நாட்களில் தீவனம் தேடுகின்றன. மழைக்குப் பிறகு, வெள்ளம் மண்ணில் விதைகளின் அடுக்கை வெளிப்படுத்துகிறது. சில கூட்டமைப்புகள் வறண்ட நாட்களில் தீவனம் தேடுகின்றன. வெளிச்செல்லும் உணவு தேடும் எறும்புகளின் விகிதத்தைத் திரும்பி வரும் எறும்புகளின் விகிதத்துடன் சரிசெய்வதில் கூட்டமைப்பு வேறுபடுகின்றன. பொதுவாக நிலைமைகள் நன்றாக இருக்கும்போது இந்த விகிதம் சரியாக உள்ளது.[6]

கொடுக்கு

[தொகு]

அறுவடை எறும்புகள், இவற்றின் அளவிற்கு ஏற்ப, மிகவும் சக்திவாய்ந்த விசத்தைக் கொண்டுள்ளன. இவை அடிவயிற்றிலிருந்து கொடுக்கினைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவரின் உடலினுள் விசத்தினை செலுத்துகிறது. இதனால் 4-8 மணிநேரம் வலி ஏற்படுத்துகிறது. எறும்பின் விசம் நரம்பு மண்டல பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியது. கடிபட்ட இடத்தினைச் சுற்றி வீக்கம் ஏற்படுகிறது.[7]

பேரினங்களும் சிற்றினங்களும்

[தொகு]
  • அபெனோகாசுடர் - சுமார் 200 சிற்றினங்கள்
    • அபெனோகாசுடர் காக்கெரெலி, விதை அறுவடை எறும்பு[8]
  • யூப்ரெனோலெபிசு - எட்டு இனங்கள்
    • யூப்ரெனோலெபிசு புரோசெரா, நாடோடி காளான் - அறுவடை எறும்பு, எறும்புகள் மத்தியில் முன்னர் அறியப்படாத வாழ்க்கை முறை[9]
  • மெசசர், விதை அறுவடை எறும்பு[10]
  • பெகிடோல் விதை அறுவடை எறும்பு[11][12]
  • போகோனோமிர்மெக்சு, விதை அறுவடை எறும்பு[13]
    • போகோனோமிர்மெக்சு பார்பேடசு
    • போகோனோமிர்மெக்சு மரிகோபா, அமெரிக்காவின் அரிசோனாவில் காணப்படும் ஒரு விஷ இனம்
    • போகோனோமிர்மெக்சு ஆக்சிடெண்டாலிசு, விதை அறுவடை செய்பவர்கள் [14]
  • கரேபரா[15]
    • கரேபரா டைவர்சா, விதை அறுவடை எறும்பு[16]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Conference, International Union for the Study of Social Insects. Italian Section. (1991). Biological studies on social and presocial arthropods: proceedings of the Third Conference of the Italian Section of the International Union for the Study of Social Insects (I.U.S.S.I.) (in ஆங்கிலம்). Associazione Italiana per lo Studio degli Artropodi Sociali e Presociali (A.I.S.A.S.P.). p. 79.
  2. Uppstrom & Klompen 2011, ப. 1
  3. Arnan et al. 2012, ப. 2
  4. Gordon, Dektar & Pinter-Wollman 2013, ப. 1
  5. Gordon, Dektar & Pinter-Wollman 2013, ப. 1–2
  6. Gordon, Dektar & Pinter-Wollman 2013, ப. 2
  7. Clinical Consequences of Toxic Envenomations by Hymenoptera
  8. Whitford & Steinberger 2009, ப. 551
  9. LaPolla 2009, ப. 1
  10. Steinberger, Leschner & Shmida 1991, ப. 241
  11. "Species: Pheidole militicida". antweb.org. AntWeb. பார்க்கப்பட்ட நாள் 19 October 2013.
  12. Johnson 2000, ப. 89
  13. Gordon & Hölldobler 1987, ப. 341
  14. "Pogonomyrmex occidentalis (Cresson, 1865)". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
  15. Corlett, Richard T. (21 August 2014). The Ecology of Tropical East Asia (in ஆங்கிலம்). Oxford University Press. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780191503498.
  16. Mani, M. S. (1989). Indian Insects (in ஆங்கிலம்). Satish Book Enterprise. p. 133.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுவடை_எறும்பு&oldid=3748530" இலிருந்து மீள்விக்கப்பட்டது