இலைவெட்டி எறும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலைகளைக் கொண்டுசெல்லும் அட்டா கொளோம்பிகா எறும்புப் பணியாளர்கள்

இலைவெட்டி எறும்பு (Leafcutter ant) எனும் இவ்வெறும்பு, உலகின் முதல் விவசாயி எனப்படுகிறது. இது, நடு அமெரிக்கா, மெக்சிக்கோ, மற்றும் தென்னமெரிக்காவின் ஒரு பகுதியான வெப்பமண்டல பகுதிகளில் இவ்வகை எறும்புகள் பெருமளவில் காணப்படுகிறன.[1] மேலும், இலை மென்றுண்ணும் எறும்புகளில் 47 வகையான பரம்பரையியல் பெயர்கள் இருப்பினும் "அட்டா" (Atta) மற்றும் அக்ரோமிர்மெக்ஸ் (Acromyrmex) எனும் இருவகை பெயர்களில் குறிப்பிடப்படுவதாக அறியப்படுகிறது.[2]

வாழ்வியல்[தொகு]

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசிக்கும் இந்த குறிப்பிட்ட வகை எறும்புகள், உலகின் முதல் விவசாயி என அறியப்படுகிறது. [3] மனிதர்களுக்கு முன்பே விவசாயம் செய்து, உணவைப் பெற்று உயிர் வாழ்ந்து வருகின்றன இலை வெட்டி எறும்புகள், மற்ற எறும்புகளைப் போன்றே கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு முறையைப் பின்பற்றுகிறது, இவற்றிலும் ராணி எறும்பு, ஆண் எறும்பு, வேலைக்கார எறும்பு போன்று இருக்கின்றன. ராணி எறும்பு உருவத்தில் சற்றுப் பெரிதாக இறக்கையுடையதாக இருக்கும். 15-ஆண்டுகள் வரை உயிர்வாழும், 30 மிமீ நீளமுள்ள ராணியின் வழிநடத்தலில் எறும்புக் கூட்டமாக (ஒரு காலனியாக) இயங்குவதாக உள்ளது. முட்டையிட்டு சந்ததியை உருவாக்குவதுதான் ராணியின் பிரதான வேலையாகும். ஒரு நாளைக்குச் சுமார் 1000 முட்டைகள் வரை இடக்கூடிய ராணி எறும்பு, தனது வாழ்நாள் முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது மட்டுமே தன் பணியாக உள்ள ஆண் எறும்புடன் குடும்பம் நடத்துவது மட்டும்தான்.[4]

செயல்பாடுகள்[தொகு]

பணியாற்றும் எறும்புகளில் பல வகைகள் உள்ளன. உருவம் சற்றுப் பெரிதாகவும், வலிமையான தாடையும் உள்ள எறும்புகள் வீரர்கள் என்று அழைக்கப்படுகின்றன.[5] இந்த எறும்புகளின் பணி இலைகளை வெட்டிக்கொண்டு வந்து, புற்றில் சேர்ப்பதாகும். உருவத்தில் சிறிய வேலைக்கார எறும்புகளுக்கு ராணியைக் கவனிப்பது, புழுக்களுக்கு உணவளிப்பது, கூட்டைச் சுத்தம் செய்வது, உணவைச் சேமித்து வைப்பது, எதிரிகளிடமிருந்து புற்றைப் பாதுகாப்பது, புற்றைக் கட்டுவது என ஏராளமான பணிகள் இருக்கின்றன.[6]

வீரர்களாக உள்ள எறும்புகள் விவசாயம் செய்வதற்கான இலைகளைக் கொண்டுசேர்க்கிறது,[7] புற்றுக்குச் சரியாகத் திரும்பி வரவேண்டும் என்பதற்காக ரசாயனத்தைச் சுரந்தபடியே செல்கின்றன. சரியான இலைகள் கிடைக்காவிட்டால், நெடுந்தூரம் பயணம் செய்கின்றன. உரிய இலைகள் கிடைத்தவுடன் வலுவான தாடைகளால் மிக வேகமாக இலைகளை வெட்டுகின்றன. இலைகளை வெட்டும்போது எதிரிகள் தாக்காமல் இருக்கவும், இலைகளில் எதிரிகளின் முட்டைகள் ஒட்டிக்கொண்டிருப்பதைப் பரிசோதிக்கவும் சில எறும்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு எறும்பும் தன்னைவிட 50 மடங்கு எடையுடைய இலையைச் சுமந்தபடி வேகமாகப் புற்றை நோக்கித் திரும்பும்.[8]

கட்டமைப்பு[தொகு]

எறும்புப் புற்றின் உள் கட்டமைப்புகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முட்டைகள் இட, புழுக்களைப் பராமரிக்க, விவசாயம் செய்ய, உணவைச் சேமிக்க, தூங்க என்று எல்லாவற்றுக்கும் தனித் தனி அறைகள் உள்ளன. இலைகளை கொண்டுவரும் எறும்புகள் இருளடைந்த பகுதியில் இலைகளை சேமிக்கிறன. ஓர் எறும்புப் புற்றில் சுமார் 50 இலட்சம் இலைவெட்டி எறும்புகள் வரையில் வசிக்கின்றன. எறும்பு காலனி ஒரு சிறிய சீருந்து அளவுக்குப் பெரியதாக இருக்கும். இராணி எறும்பு காலனிக்கு தலைமை வகிக்கிறது. இராணி இறந்துவிட்டால் மற்ற எறும்புகளும் விரைவில் இறந்துவிடுகின்றன.[9]

வேளாண்மை[தொகு]

இலைவெட்டி எறும்புகள் இலைகளைத் தாடைகளால் வெட்டி, நசுக்கப்பட்டு, உமிழ்நீரையும் இரசாயனத்தையும் இலை கூழ் மீது பாய்ச்சிவிட்டு பிறகு மீண்டும் இலைகளை வெட்டக் கிளம்பிவிடுகின்றன. இலை கூழ் நொதிக்க ஆரம்பித்து அதிலிருந்து சில நாட்களில் பூஞ்சைகள் உருவாகும். அந்தப் பூஞ்சைகள் எறும்புப் புழுக்களின் உணவாக பயன்படுத்தப்படுகிறது. விவசாயம் செய்த பூஞ்சைகளைத் தவிர வேறு எந்த உணவையும் இலை வெட்டி எறும்புப் புழுக்கள் உண்பதில்லை பெரிய எறும்புகள் பூஞ்சைகளுடன் இலைகளில் உள்ள சாற்றையும் சேர்த்து உண்கின்றன.[10]

எறும்புகளால் பூஞ்சைகள் உருவாக்கப்படுகிறது சிலநேரம் நச்சு இலைகளாக இருந்தால், பூஞ்சைகள் எறும்புகளுக்குக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன. இதன் மூலம் எறும்புகளின் உயிர் காப்பாற்றப்படுகிறது. நஞ்சு தன்மையுடைய பூஞ்சைகள் உருவாகிவிட்டால் அவற்றை அப்புறப்படுத்தும் வேலைகளை வேலைக்கார எறும்புகள் உடனே செய்கின்றன. விவசாயக் கழிவு, இறந்த எறும்புகள் போன்றவற்றையும் இரவு நேரங்களில் சுத்தம் செய்துவிடுகின்றன.[11]

சமூகப் பங்கு[தொகு]

மழைக்காடுகளின் சூழலியலைக் காப்பதில் இலைவெட்டி எறும்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மிகச் சிறந்த சமூக வாழ்க்கை வாழும் இக்குமுகம் கூட்டு முயற்சி, வேலைப் பகிர்வு, சுறுசுறுப்பு, விடாமுயற்சி போன்றவற்றை காலங்காலமாக கடைபிடித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "kids.sandiegozoo.org|ArthropodLeaf-cutter ant|வலைகாணல்:03/05/2016". Archived from the original on 2016-04-24. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
 2. gettyimages.in|Leaf-cutter Ant (Atta sp.) / Mapari, Rupununi, Guyana|வலைகாணல்:03/05/2016[தொடர்பிழந்த இணைப்பு]
 3. antweb.org|How large is a leaf-cutter queen? (Benjamin, Ann Arbor, Michigan, USA)|வலைகாணல்:05/05/2016[தொடர்பிழந்த இணைப்பு]
 4. "antark.net|Queen|வலைகாணல்:05/05/2016". Archived from the original on 2016-05-03. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
 5. "arkive.org|Leaf-cutter ant biology|வலைகாணல்:05/05/2016". Archived from the original on 2011-04-24. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 6. "These Ants Go Marching|வலைகாணல்:05/05/2016". Archived from the original on 2016-04-24. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
 7. sciencedaily.com|Bioenergy potential unearthed in leaf-cutter ant communities|வலைகாணல்:07/05/2016
 8. huffingtonpost.com|Leaf-Cutter Ants Obliterate Roses In Mesmerizing Time Lapse Video|வலைகாணல்:07/05/2016
 9. antfarm.yuku.com|What does an ant do if its colony dies?|வலைகாணல்:09/05/2016
 10. "cincinnatizoo.org|LEAF-CUTTING ANT Atta cephalotes|வலைகாணல்:10/05/2016". Archived from the original on 2016-05-14. பார்க்கப்பட்ட நாள் 2016-05-10.
 11. sciencemag.org|Leafcutter ants use prehensile legs to help chop up leaves|வலைகாணல்:10/05/2016
 12. cals.ncsu.edu|Leaf Cutter Ants|Social Symbionts|வலைகாணல்:13/05/2016

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைவெட்டி_எறும்பு&oldid=3684067" இலிருந்து மீள்விக்கப்பட்டது