காற்றூட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காற்றூட்டம் (aeration) என்பது திரவம் அல்லது திடப்பொருளுடன் காற்றைக் கலந்து சுற்றவைத்து கரைக்க அல்லது கலக்க மேற்கொள்ளப்படும் ஒரு செயல்முறையாகும்.

திரவங்களில் காற்றூட்டம்[தொகு]

முறைகள்[தொகு]

திரவங்களில் காற்றூட்டம், பெரும்பாலும் நீரில் பின்வரும் முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

  • நீரூற்றுக்கள், அருவிகள், துடுப்பு-சக்கரங்கள் அல்லது கூம்புகள் மூலம் காற்றுக்குள் திரவத்தைச் செலுத்தி காற்றூட்டம் செய்வது முதல்வகையாகும்.
  • வெந்தூரிக் குழாய், காற்றூட்டச் சுழல்சக்கரம் அல்லது நீர்சிதற்றிகள், நுண்குமிழ் நீர்சிதற்றிகள், பெருங்குமிழ் நீர்சிதற்றிகள் அல்லது நேர்குழாய் காற்றூட்ட முறை ஆகிய முறைகளில் அழுத்தக்காற்றை திரவத்தின் வழியாகச் செலுத்திக் காற்றூட்டம் செய்வது இரண்டாவது வகையாகும்>

பெரும்பாலும் மட்பாண்டங்கள் இச்செயல்முறைக்குப் பொருத்தமாக இருக்கின்றன. இவற்றில் உள்ள நுண்துளைகள் வழியாக மெல்லிய காற்று அல்லது காற்றுக்குமிழ்கள் திரவம் முழுவதும் பரவலாக விரவுகிறது. குமிழ்களின் அளவு குறையக் குறைய அதிக அளவு காற்று அல்லது வாயு திரவத்துடன் கலந்து வாயு பரிமாற்றத் திறன் அதிகரிக்கிறது. தேவைப்பட்டால் இதற்காகவே வடிவமைக்கப்பட்ட சிதற்றிகள் அல்லது தூவுகலன்கள் பயன்படுத்தி கொப்பளிப்பு அல்லது கலக்கலை உருவாக்கவும் முடியும்.

அலுமினியம் ஆக்சைடு துகள்களை உருக்கி பீங்கானுடன் கலந்து உறுதியான, சீரான நுண்துளைகளுடைய மற்றும் ஒரேவிதமான அமைப்புடன் கூடிய நுண்துளையுள்ள பீங்கான் சிதற்றிகள் செய்யப்படுகின்றன. இயற்கையாகவே பீங்கான் நீர்விருப்பப் பொருள் ஆதலால் எளிதில் ஈரமுறிஞ்சி சீரான குமிழ்களை உற்பத்தி செய்கின்றன[1] .

கொடுக்கப்பட்ட காற்று அல்லது நீர்மத்தின் அளவில் அதன் மேற்பரப்பு பகுதியில் துளி அல்லது குமிழி அளவு, பரிமாற்றம் ஏற்பட்டு மாற்றம் நிகழலாம். மிகச்சிறிய அளவு குமிழ்கள் அல்லது துளிகள் அங்குச் செயல்பட்டால் காற்றூட்ட விகிதம் அதிகரிக்கிறது. குமிழ்கள் உட்புகும் நுண்துளைகளின் அளவு பொதுவாக மைக்ரோ மீட்டர் அளவிலேயே இருக்கும்.

திரவங்களில் காற்றூட்டத்தின் பயன்கள்[தொகு]

காற்றூட்டம் செய்யப்பட்ட குழாய் நீர்
  • நீரோட்டம் எளிதாகி திறப்புக்குழாயில் தடையின்றி நீர் வெளிவருகிறது.
  • குடிப்பதற்கு காற்றேறிய நீர் உற்பத்தி ஆகிறது.
  • சாக்கடை நீர் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் ஆகியவற்றை கலக்கிகள் அல்லது சிதற்றிகள் பயன்படுத்தி இரண்டாம் நிலை சுத்திகரிப்பு செய்ய இயல்கிறது.
  • தண்ணீரில் உள்ள ஆக்சிசன் அளவை உயர்த்த முடிகிறது. இதனால் மீன் தொட்டிகள் மற்றும் மீன் பண்ணைகளில் மீன்வளர்ப்பு எளிதாகிறது.
  • புளிக்காத குடிபானங்களில் ஆக்சிசன் அளவை அதிகரித்து நொதிகளைத் தூண்டி பானத்தை நொதிக்கச் செய்கிறது.
  • திரவத்தில் கரைந்துள்ள கார்பன் டைஆக்சைடு அல்லது குளோரின் போன்ற வாயுக்களை வெளியேற்றுகிறது.
  • வேதியியலில் நீரில் கரைந்துள்ள சேர்மங்களை ஆக்சிகரணம் செய்கிறது.
  • சக்குசி
  • குளம் காற்றூட்டம்
  • உடலில் தண்ணீரை நன்கு கலக்கச் செய்கிறது.

மண்ணில் காற்றூட்டம்[தொகு]

உள்ளகமண் காற்றூட்டி

மண்ணில் காற்றூட்டம் என்பது மண்ணிலுள்ள காற்று இடைவெளிகளின் அளவைக் குறிக்கிறது.

மண்ணைக் கூர்முனை கொண்ட கருவிகளால் குத்தி மண்ணில் இடைவெளியை உண்டாக்குவது ( கூர்முனைக் காற்றூட்டம் ) அல்லது தோராயமாக 1 "x 2" அளவுக்கு உரிய கருவிகள் கொண்டு உள்ளகத்தில் உள்ள மண்ணை நீக்குவது ( உள்ளகமண் காற்றூட்டம் ) போன்ற செயல்பாடுகள் மண் காற்றூட்டத்தைக் குறிக்கின்றன. புல்வெளிகளை மீட்கும் முயற்சியில் காற்றூட்டம் அவ்வளவாக கண்காணிக்கப்படுவதில்லை. ஆனால் சுகாதார நோக்கில் காற்றூட்டம் இன்றியமையாதது. இது வடிகால் வசதியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி குட்டைகள் உருவாவதையும் தடுக்கிறது.

கூர்முனைக் காற்றூட்டத்தில் காற்றூட்டக் கருவிகள் ஓர் அடி அல்லது மேலும் மண்ணைக் குத்தி காற்றூட்டம் உண்டாக்குகின்றன. இதனால் சிலவேளைகளில் புல்தரை மண்ணோடு தோண்டி எடுக்கப்பட்டு வடிகால் உபயோகத்தில் பயன்படுகிறது.

புல்தரை மண் இறுக்கம், மண்கூரைகள் உருவாதலைத் தடுத்தல், தண்ணீர் மற்றும் சத்துப்பொருட்கள் மண்ணுக்குள் ஊடுறுவிச் செலவதை ஊக்குவித்தல், வேர்கள் ஆழமாக உட்புக உதவுதல். புல்விதைகள் மண்ணுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் சூழலை ஏற்படுத்துதல் முதலான நோக்கங்களுடன் உள்ளகமண் காற்றூட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வகையான காற்றூட்டத்திற்கு, கருவிகளின் பின்னால் தொடர்ந்து செல்லும் வகை , கருவிகளின் மேல் பயணம் செய்யும் வகை, இழுவை இயந்திரங்களால் இழுத்துச் செல்லும் வகை போன்ற பலவகையான புல்தரைக் கருவிகள் உதவுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Porous Ceramic Diffusers". Archived from the original on 2011-09-30. பார்க்கப்பட்ட நாள் 2015-04-02.

OxyTurbine Aerators

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றூட்டம்&oldid=3549494" இலிருந்து மீள்விக்கப்பட்டது