எறும்புப் புற்று
Appearance
எறும்புப் புற்று என்பது எறும்புகள் வாழ்வதற்காக நிலத்திற்கு அடியில் அமைத்துக் கொள்ளும் வாழ்விடமாகும். இதை எறும்புகள் உணவு, இனப்பெருக்கம் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றன. எறும்புப் புற்றுக்குள்ளே ஒரு கட்டட அமைப்புக் காணப்படும். அதாவது நிலத்துக்கு அடியே பல அறைகள் காணப்படும். இந்த அறைகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வழிகள் காணப்படும். இந்த அறைகளைப் பொதுவாக உணவு சேமிப்பதற்கே பயன்படுத்துகின்றன. இத்தகைய புற்றுக்களைக் கறையான்களும் தமது வாழ்விடமாக அமைக்கின்றன.