உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கினி
பூர்வீக பெயர்सङ्गिनी
சொற்பிறப்புபெண் தோழிகள்
வகைநாட்டுப்புற நடனம்
தோற்றம்நேபாளம் - மலைப்பகுதி

சங்கினி (Sangini) என்பது மதத் திருவிழாவான திஹார் மற்றும் தீஜ் திருவிழாவின் போது நேபாளப் பெண்களால் நிகழ்த்தப்படும் ஒரு குறிப்பிட்ட வகை பாடல் மற்றும் நடனம் ஆகும். [1] இது நேபாளத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் உருவானது என்று சொல்லப்படுகிறது. இது, நேபாளம், இந்தியா மற்றும் பூட்டானின் சில பகுதிகளைச் சேர்ந்த நேபாள பெண்களால் நிகழ்த்தப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

சங்கினி நடனம் மற்ற சந்தர்ப்பங்களில் பொழுதுபோக்கிற்காக நிகழ்த்தப்படுகிறது. ஆனால் பெரிய அளவில் இல்லை. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், பசுமை சூழ்ந்த சுற்றுப்புறங்களுக்கு மத்தியிலோ, வீட்டின் முற்றத்திலோ அல்லது கோவில்களிலோ சங்கினி நடனம் ஆடுகின்றனர். இதில் பங்கேற்கும் நடனக் கலைஞர்களே பாடல்களைப் பாடுகிறார்கள். இந்த நடனம் பிராமணர் மற்றும் செத்திரியர்களில் நேபாளி சமூகத்தின் உயர் சாதியைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. [2] திருமணமாகி, கணவன் வீட்டிற்குச் சென்ற மகள்கள் தொலைதூரத்தில் இருந்து வந்து தங்கள் பெற்றோர் வீட்டில் கூடி நடனம் ஆடுவார்கள். அவர்கள் நீண்ட காலமாக மறந்துவிட்ட நண்பர்களை அங்கே சந்தித்து அவர்களுடன் நடனத்தில் பங்கேற்கிறார்கள். இந்த நடனத்தில் பெண்கள் அகல் விளக்கு தட்டுகளை பிடித்துக்கொண்டு அல்லது கலசத்தை தலையில் சுமந்து கொண்டு சங்கினி நடனம் ஆடுவார்கள்.

புராணக் கதை

[தொகு]

சங்கினியின் புராணக் கதை இந்துக் கடவுள் சிவன் மற்றும் பார்வதியின் புராணக் கதைக்கு செல்கிறது. சிறுவயதிலேயே கணவனை இழந்த பல இளம் விதவைகளைக் கண்டு வேதனை அடைந்த பார்வதி தேவி, திருமணமான இளம் பெண்களை அவர்களின் சாபத்திலிருந்து காப்பாற்றுமாறு சிவனிடம் மன்றாடுகிறார். திருமணமான இந்த இளம் பெண்களை சிவ பூஜை செய்யும்படி பார்வதியிடம் சிவன் அறிவுறுத்தினார். இவ்விதமாக, சிவபெருமானுக்கு பூஜை செய்தால், இளம் பெண்கள் அகால விதவையாவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. [3]

சான்றுகள்

[தொகு]
  1. "---: Cultural Affairs & Heritage Department - Government of Sikkim :---". Archived from the original on 2014-02-21. பார்க்கப்பட்ட நாள் 2013-01-23.
  2. "Face Nepal: Sangini Dance 'Girls and friends getting together to celebrate the Festival'". Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-05.
  3. Datta, Amaresh (1988). Encyclopaedia of Indian Literature: Devraj to Jyoti. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126011940. பார்க்கப்பட்ட நாள் 2021-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கினி&oldid=3680749" இலிருந்து மீள்விக்கப்பட்டது