மேல் தீர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல் தீர் மாவட்டம்
ضلع دیر بالا
மாவட்டம்
மேல்:குமாரத் பள்ளத்தாக்கின் ஜாஹாஷ் பண்டா
கீழ்:லௌரோ கொடிமுடி
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
Established1996
தலைமையிடம்தீர் நகரம்
அரசு
 • வகைDistrict Administration
பரப்பளவு
 • Total3,699 km2 (1,428 sq mi)
மக்கள்தொகை (2017)[1]
 • Total947,401
 • அடர்த்தி260/km2 (660/sq mi)
 • நகர்ப்புறம்44,165
 • நாட்டுப்புறம்902,256
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
தாலுகா]க்கள்6
முக்கிய மொழிகள்பஷ்தூ மொழி (92.5%),[2]:21 கோகிஸ்தானி மொழி, கோவார் மொழி, குர்ஜரி மொழி
இணையதளம்dirupper.kp.gov.pk

மேல் தீர் மாவட்டம் (Upper Dir District) (பஷ்தூ: بر دير ولسوالۍ, உருது: ضلع دیر بالا), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தீர் நகரம் ஆகும். தீர் நகரம், கைபர் பக்துன்வா மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடக்கே 269 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 1970-ஆம் ஆண்டில் தீர் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு மேல் தீர் மாவட்டம் மற்றும் கீழ் தீர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

பாகிஸ்தானின் வடக்கில் உள்ள மேல் தீர் மாவட்டத்தின் வடக்கிலும், வடமேற்கிலும் முறையே சித்ரால் மாவட்டம் மற்றும் ஆப்கானித்தான் உள்ளது. கிழக்கில் சுவாத் மாவட்டம், தெற்கில் கீழ் தீர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.


கல்கோட் குமாரத் பள்ளத்தாக்கு, மேல் தீர் மாவட்டம்

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 9,47,401 ஆகும். அதில் ஆண்கள் 4,66,594 மற்றும் பெண்கள் 4,80,766 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 46.09% ஆகும். 95.35% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 471 பேர் மட்டுமே உள்ளனர் [1]90.78% மக்கள் பஷ்தூ மொழியும், கோகிஸ்தானி மொழி போன்ற பிற மொழிகள் பேசுவோர் 8.60% ஆக உள்ளனர்.[1]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

மேல் தீர் மாவட்டம் 3 தாலுகாகக்ளை கொண்டது. அவைகள்: [3]

  • தீர் நகர தாலுகா
  • செரிங்கல் தாலுகா
  • வாரி தாலுகா

மக்கள் பிரதிநிதிகள்[தொகு]

இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு ஒரு தொகுதியும், கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 3 தொகுதிகளையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  2. 1998 District Census report of Upper Dir. Census publication. 104. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000. 
  3. "District Dir Upper".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_தீர்_மாவட்டம்&oldid=3611462" இலிருந்து மீள்விக்கப்பட்டது