உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ் தீர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 34°51′N 71°51′E / 34.850°N 71.850°E / 34.850; 71.850
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ் தீர் மாவட்டம்
ضلع دیرِ زیریں
மாவட்டம்
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தீர் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தீர் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
ஆள்கூறுகள்: 34°51′N 71°51′E / 34.850°N 71.850°E / 34.850; 71.850
நாடுபாகிஸ்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
தலைமையிடம்திமெர்கரா
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • Total1,583 km2 (611 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
 • Total14,36,082
 • அடர்த்தி910/km2 (2,300/sq mi)
 • நகர்ப்புறம்
40,314
 • நாட்டுப்புறம்
13,95,768
நேர வலயம்PST
தாலுகாக்கள்5
இணையதளம்dirlower.kp.gov.pk

கீழ் தீர் மாவட்டம் (Lower Dir District) (பஷ்தூ: لر / کوز دير ولسوالۍ, உருது: ضلع دیر زیریں‎), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் திமெர்கரா நகரம் ஆகும். இந்நகரம் கைபர் பக்துன்வா மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடக்கில் 199 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 1996-ஆம் ஆண்டில் தீர் மாவட்டத்தை கீழ் தீர் மாவட்டம் மற்றும் மேல் தீர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இதன் கிழக்கில் சுவாத் மாவட்டம், மேற்கில் ஆப்கானித்தான், வடக்கிலும், வடகிழக்கிலும் முறையே கீழ் சித்ரால் மாவட்டம், மேல் தீர் மாவட்டம் மற்றும் தெற்கில் மாலகண்ட் மாவட்டம் & பஜௌர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 14,36,082 ஆகும். அதில் ஆண்கள் 7,09,829 மற்றும் பெண்கள் 7,26,203 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 61.83% ஆகும். 97.19% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 471 பேர் மட்டுமே உள்ளனர்.[1]99.30% மக்கள் பஷ்தூ மொழி பேசுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் 5 தாலுகாக்கள் கொண்டது. இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு ஒரு தொகுதியும், கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 5 தொகுதிகளும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்_தீர்_மாவட்டம்&oldid=3611454" இலிருந்து மீள்விக்கப்பட்டது