மன்செரா மாவட்டம்
மன்செரா மாவட்டம்
ضلع مانسہرہ | |
---|---|
மாவட்டம் | |
2011-க்கு முன்னர் பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மன்செரா மாவட்டம் மற்றும் தோர்கர் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
கோட்டம் | ஹசரா |
தலைமையிடம் | மன்செரா |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,579 km2 (1,768 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 15,55,742 |
• அடர்த்தி | 340/km2 (880/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
இடக் குறியீடு | 0997 |
ஒன்றியக் குழுக்கள் | 59 |
தாலுகாக்கள் | 4[2] |
இணையதளம் | mansehra |
மன்செரா மாவட்டம் (Mansehra District) (பஷ்தூ: مانسهره ولسوالۍ, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் மன்செரா நகரம் ஆகும். இது கில்ஜித்-பாஸ்டிஸ்தான் பகுதிக்கு நுழைவாயில் ஆகும். மன்சேரா நகரத்தில் பேரரசர் அசோகர் நிறுவிய மன்செரா பாறைக் கல்வெட்டு உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 15,55,742 ஆகும். அதில் ஆண்கள் 7,71,976 மற்றும் பெண்கள் 7,83,509 ஆக உள்ளனர். 90.69% மக்கள் கிராமப்புறங்களிலும்; 9.31% மக்கள் நகரப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்ட எழுத்தறிவு 62.56%. இசுலாமியர் அல்லாத மதச்சிறுபான்மை மக்கள் 427 பேர் உள்ளனர்.[1] இண்டிக்கோ மொழி 66.48%, பஷ்தூ மொழி 17.02% பேரும், கோகிஸ்தானி மொழி போன்ற பிற மொழிகளை 14.26% பேரும் பேசுகின்றனர்.[3]}}
மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு இம்மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.[4]பாகிஸ்தான் தேசிய சட்ட சபைக்கு இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]- பாலாகோட் தாலுகா
- மன்செரா தாலுகா
- ஒகை தாலுகா
- கால தாகா
இம்மாவட்டம் 59 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது.
இதனையும் காண்க
[தொகு]- மன்செரா பாறைக் கல்வெட்டு
- கைபர் பக்துன்வா மாகாணம்
- கைபர் பக்துன்வா மாவட்டப் பட்டியல்
- மன்செரா சிவன் கோயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ "Kolai-Palas made district, Baffa-Pakhal tehsil". 26 August 2017.
- ↑ "Pakistan: Provinces and Districts". www.citypopulation.de (in ஆங்கிலம்).
- ↑ › reports
உசாத்துணை
[தொகு]- 1998 District census report of Batagram. Census publication. Vol. 18. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.
- 1981 District census report of Mansehra. District Census Report. Vol. 23. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1983.
- 1998 District census report of Mansehra. Census publication. Vol. 62. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000.
- Anjum, Uzma; Rehman, Khawaja (2015). "A First Look at Mankiyali Language: An Endangered Language". Journal of Asian Civilizations 38 (1): 177–90. ProQuest 1816873650.
- Hallberg, Calinda E.; O'Leary, Clare F. (1992). "Dialect Variation and Multilingualism among Gujars of Pakistan". In O'Leary, Clare F.; Rensch, Calvin R.; Hallberg, Calinda E. (eds.). Hindko and Gujari. Sociolinguistic Survey of Northern Pakistan. Islamabad: National Institute of Pakistan Studies, Quaid-i-Azam University and Summer Institute of Linguistics. pp. 91–196. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 969-8023-13-5.