சாங்லா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்லா மாவட்டம்
شنګله
மாவட்டம்
மேல்:சாங்லா மலைத்தொடர்
கீழ்:ஆறு
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணததில் சாங்லா மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணததில் சாங்லா மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம் கைபர் பக்துன்வா மாகாணம்
கோட்டம்மாலகண்ட்
தலைமையிடம்அல்புரி
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்1,586 km2 (612 sq mi)
மக்கள்தொகை (2017)[1]
 • மொத்தம்759,609
 • அடர்த்தி480/km2 (1,200/sq mi)
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
ஒன்றியக் குழுக்கள்28
தாலுகாக்கள்5
இணையதளம்shangla.kp.gov.pk

சாங்லா மாவட்டம் (Shangla District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் அல்புரி நகரம் ஆகும். 1,586 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 5 தாலுகாக்களும்; 28 ஒன்றியக் குழுக்களும் கொண்டது.

அமைவிடம்[தொகு]

சாங்லா மாவட்டத்தின் வடக்கில் கோஹிஸ்தான் மாவட்டம், கிழக்கில் பாட்டாகிராம் மாவட்டம் மற்றும் தோர்கர் மாவட்டங்களும், மேற்கில் சுவாத் மாவட்டம் மற்றும் தெற்கில் புனேர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.[2]

புவியியல்[தொகு]

இமயமலையில் மலைக்காடுகளால் சூழ்ந்த சாங்கலா மாவட்டத்தில் தேவதாரு, பைன் போன்ற மரங்கள் அதிகம் வளர்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 2000 முதல் 3000 மீட்டர் வரை உயரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் குஷ் கன்சால் எனுமிடத்தில் மிக உயரமான சிகரம் 3440 மீட்டர் உயரத்தில் உள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சாங்லா மாவட்ட மக்கள் தொகை 7,59,609 ஆகும். அதில் ஆண்கள் 3,86,082 மற்றும் பெண்கள் 3,73,508 ஆக உள்ளது. இம்மாவட்ட மக்களில் 98% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 33.13% ஆக உள்ளது. பஷ்தூ மொழி 96.97% விழுக்காட்டினர் பேசுகின்றனர்.[1]

தேசிய மற்றும் மாநில சட்டசபை தொகுதிகள்[தொகு]

இம்மாவட்டத்திலிருந்து தேசிய சட்டமன்றத்திற்கு ஒரு தொகுதியும்[3], கைபர் பக்துன்வா மாகாண சட்டமன்றததிற்கு 2 தொகுதிகளையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  2. 2.0 2.1 PCO 1998, ப. 1.
  3. "Election Commission of Pakistan". Archived from the original on 2015-11-10. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.

உசாத்துணை[தொகு]

  • 1998 District Census report of Shangla. Census publication. 106. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்லா_மாவட்டம்&oldid=3607302" இலிருந்து மீள்விக்கப்பட்டது