உள்ளடக்கத்துக்குச் செல்

தோர்கர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 34°36′49″N 72°47′18″E / 34.613573°N 72.788200°E / 34.613573; 72.788200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோர்கர்
ضلع تورغر
மாவட்டம்
சிந்து ஆறு மற்றும் பரந்தோ ஆறுகள் கூடுமிடம்
சிந்து ஆறு மற்றும் பரந்தோ ஆறுகள் கூடுமிடம்
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தோர்கர் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தோர்கர் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்)
ஆள்கூறுகள்: 34°36′49″N 72°47′18″E / 34.613573°N 72.788200°E / 34.613573; 72.788200
நாடு பாக்கித்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவிய ஆண்டு2011
தலைமையிடம்ஜுத்பா
அரசு
 • வகைமாவட்ட நிர்வாகம்
பரப்பளவு
 • மொத்தம்497 km2 (192 sq mi)
மக்கள்தொகை
 (2017)[1]
 • மொத்தம்1,71,349
 • அடர்த்தி340/km2 (890/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
தாலுகாக்கள்3
இணையதளம்torghar.kp.gov.pk

தோர்கர் மாவட்டம் (Torghar District) (பஷ்தூ: تور غر ولسوالۍ, உருது: ضلع تورغر‎, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். [2]இம்மாவட்டம் மன்செரா மாவட்டத்தின் 3 தாலுகாக்களைக் கொண்டு 2019ம் ஆண்டில் நிறுவப்பட்டது.[3]இதன் நிர்வாகத் தலைமையிடம் ஜூத்பா நகரம் ஆகும். இம்மாவட்டம் மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடகிழக்கே 292 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மலைகளால் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் சிந்து ஆறு மற்றும் பரந்தோ ஆறுகள் கூடுகிறது. இது கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிக்கு மேற்கில் உள்ளது. 2005 பாகிஸ்தான் நிலநடுக்கத்தின் போது இம்மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

497 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தோர்கர் மாவட்டம் இரண்டு தாலுகாக்கள் கொண்டது. அவைகள்: ஜூத்பா தாலுகா மற்றும் காந்தேர் தாலுகா ஆகும். இது 16 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 171,349 ஆகும். அதில் ஆண்கள் 86,059 மற்றும் பெண்கள் 85,274 உள்ளனர். எழுத்தறிவு 23.86% கொண்டுள்ளது. 100% விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 22 பேர் மட்டுமே உள்ளனர்.[1]பஷ்தூ மொழி 96.34%, இண்டிகோ மொழி 1.54% பேசுகின்றனர்.

மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றததிற்கு இம்மாவட்டத்திற்கு ஒரு சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  2. "KP govt creates new Kohistan district - Newspaper - DAWN.COM". 16 January 2014.
  3. Tor Ghar: Kala Dhaka becomes 25th K-P district The Express Tribune. 28 January 2011. Retrieved 12 November 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்கர்_மாவட்டம்&oldid=3611001" இலிருந்து மீள்விக்கப்பட்டது