வி. தவமணித் தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. தவமணித் தேவர் (V. Thavamani Thevar)(பிறப்பு 1929) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் எம். கல்லுப்பட்டி பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை எம். கல்லுப்பட்டி அரசினர் கள்ளர் பள்ளியிலும் விருதுநகர் டி. இ. எல். சி. பள்ளியிலும் பயின்றுள்ளார். தவமணித் தேவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு உறுப்பினர் ஆவார். இவர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் முறையே சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக் வேட்பாளராக சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 சேடப்பட்டி சுதந்திராக் கட்சி 41,167 63.84[2]
1971 சேடப்பட்டி அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு 20,334 36.66[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 406. {{cite book}}: More than one of |at= and |pages= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  3. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._தவமணித்_தேவர்&oldid=3538187" இலிருந்து மீள்விக்கப்பட்டது