வி. தவமணித் தேவர்
தோற்றம்
வி. தவமணித் தேவர் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| தொகுதி | சேடப்பட்டி |
| பதவியில் 1971–1976 | |
| பின்னவர் | சேடப்பட்டி ஆர். முத்தையா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 1929 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு |
| தொழில் | விவசாயி |
வி. தவமணித் தேவர் (V. Thavamani Thevar)(பிறப்பு 1929) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் எம். கல்லுப்பட்டி பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை எம். கல்லுப்பட்டி அரசினர் கள்ளர் பள்ளியிலும் விருதுநகர் டி. இ. எல். சி. பள்ளியிலும் பயின்றுள்ளார். தவமணித் தேவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு உறுப்பினர் ஆவார். இவர் 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் முறையே சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக் வேட்பாளராக சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 1967 | சேடப்பட்டி | சுதந்திராக் கட்சி | 41,167 | 63.84[2] |
| 1971 | சேடப்பட்டி | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு | 20,334 | 36.66[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 406-407.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.