சுதந்திராக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுதந்திரா கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கட்சிக் கொடி

சுதந்திராக் கட்சி (Swatantra Party) ஆகத்து 1959ஆம் ஆண்டு சவகர்லால் நேருவின் சோசலிசக் கொள்கைகளுக்கு எதிராக இராசாசி மற்றும் என். ஜி. ரங்காவால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். லைசன்சு ராஜ் என்றழைக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்திற்கு எதிராக தனியார் தொழில்மயமாக்கலையும் மேற்கத்திய முதலீடுகளையும் வலியுறுத்தி வந்தது. 21 கொள்கைகளை விளக்கிய தேர்தல் அறிக்கை [1] இந்த தாராளமய வணிக அடிப்படையில் அமைந்திருந்தது. இராசத்தான், குசராத், பீகார் மற்றும் ஒரிசாவில் வலிமை பெற்றிருந்தது. 1967-71 ஆண்டுகளிலிருந்த நான்காம் நாடாளுமன்றத்தில் 44 உறுப்பினர்களைக் கொண்டு தனிப்பெரும் எதிர்கட்சியாக விளங்கியது. 1972ஆம் ஆண்டில் இராசாசியின் மறைவிற்குப் பிறகு வேகமாக பலமிழக்கத் தொடங்கியது. பொதுமக்களிடையே பணக்காரர்கள் மற்றும் மகாராசாக்களின் கட்சியாக காட்சிபடுத்தப்பட்டதும் இதன் அழிவிற்கு காரணமாக அமைந்தது.

1974ஆம் ஆண்டு சுதந்திராக் கட்சியுடன் சோசலிஷ்ட் கட்சியின் ஓரங்கம், சரண்சிங் தலைமையிலான பாரதிய கிராந்தி தளம், காங்கிரசின் பிரிவு ஒன்று என ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து பாரதிய லோக தளம் உருவானது.

இதனையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • H.R.Pasricha. The Swatantra Party—Victory in Defeat. The Rajaji Foundation. 2002.
  • Howard L. Erdman. India’s Swatantra Party. Public Affairs Vol 36, Issue 4, Winter 1963-1964, pp. 394–410.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதந்திராக்_கட்சி&oldid=3245288" இருந்து மீள்விக்கப்பட்டது