நொமுரா சொறி மீன்
நொமுரா சொறி மீன் | |
---|---|
ஒசாக்காவின் கைகான்-மீன்காட்சியகத்தில் உள்ள நொமுரா சொறிமீன் | |
மனிதன் அளவோடு நொமுரா சொறிமீனின் அளவு ஒப்பீடு | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Nemopilema |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/NemopilemaN. nomurai
|
இருசொற் பெயரீடு | |
Nemopilema nomurai (Kishinouye, 1922) | |
வேறு பெயர்கள் | |
|
நொமுரா சொறி மீன் (Nomura's jellyfish (யப்பானிய மொழி: エチゼンクラゲ) என்பது ஒரு மிகப்பெரிய ரைசோஸ்டோமே சொறி மீன் ஆகும். இது சிங்கப்பிடறி சொறி மீனின் அளவை ஒத்தது. இது உலகின் மிகப்பெரிய கடற்காஞ்சொறி ஆகும். இது உண்ணத்தக்கது என்றாலும் சுவையான உணவாக கருதப்படுவது இல்லை.[1]
கண்ணோட்டம்
[தொகு]இந்த சொறி மீன் முழுமையாக வளரும் போது அதன் விட்டம் சராசரி மனிதனின் உயரத்தை விட சற்று அதிகமாக இருக்கும். யப்பான் நாட்டைச் சேர்ந்த மீனியல் வல்லுனரான கனிச்சி நோமுரா என்பவர்தான் 1921 திசம்பர் தொடக்கத்தில் இந்த மாபெரும் சொறி மீனை அடையாளம் கண்டார். 72-லிட்டர் (16 imp gal; 19 US gal) கடல் நீர் கொள்ளும் ஒரு மரப்பீப்பாயில் இதை பிடித்துவைத்து ஆய்வு செய்தார். இதனால் இந்த மீனுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது. [2]
2 மீட்டர் வரை வளர்ந்து 200 kg (440 lb) வரை எடை கொண்டதாக நொமுரா சொறி மீன் உள்ளது.[3] இது முதன்மையாக மஞ்சள் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடலில் சீனா மற்றும் ஜப்பான் இடையே உள்ள கடற்பகுதியில் வாழ்கிறது. [4] கடந்த 20 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. [5] நோமுரா சொறி மீன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களில் காலநிலை மாற்றம், அதிகப்படியான மீன்பிடித்தலால் இவற்றை உட்கொள்ளும் மீன்களின் எண்ணிக்கைக் குறைதல், கடலோரங்களில் ஏற்படும் மாற்றம் ஆகியவை என்று தெரியவருகிறது. [4]
2009 ஆம் ஆண்டில் யப்பானின் 10 tonnes (11 டன்கள்) மீன்பிடி விசைப்படகானது டோக்கியோ வளைகுடாவில் உள்ள சிபாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வலையில் டஜன் கணக்கான நொமுரா சொறி மீன்கள் பிடிபட்டது. பின்னர் அந்த வலையை இழுக்க முயன்ற கப்பல் கவிந்தது. கப்படில் இருந்த மூன்று பேர் கொண்ட குழுவினர் மற்றொரு படகால் மீட்கப்பட்டனர்.
வாழ்க்கை சுழற்சி
[தொகு]இதன் வாழ்க்கை சுழற்சி மற்ற ரைசோஸ்டோம்களைப் போலவே உள்ளது. நொமுரா சொறி மீன்கள் பொதுவாக மஞ்சள் கடலில் காணப்படுகின்றன. சூன் மற்றும் சூலை மாதங்களில் நீரின் உப்புத்தன்மையில் ஏற்படும் மாற்றங்களானது, சுசிமா நிரிணை வழியாக குடம்பி நிலை சொறிமீன்கள் வெளிவர வழிவகுக்கிறது. [4] ஆறு மாதங்களில் இந்த வகை சொறிமீன்கள் அரிசியின் அளவிலிருந்து 6 அடி (1.8 மீ) அகலம்வரை வளர்கிறது. [6]
சூழலியல்
[தொகு]இந்த சொறி மீன் அதன் இனங்களில் மிகப்பெரிய ஒன்றாகும். இந்த வகை சொறிமீன்கள் பெரும்பாலும் மிதவை உயிர்களை உணவாக கொள்கிறது. இவை பெரியதாக வளரும்போது சிறிய மீன்களையும் உணவாக கொள்கிறது. இவற்றை வேட்டையாடும் எதிரிகளாக வாள் மீன், சூரை மீன், மேளா, தோணி ஆமை போன்ற நீர்வாழிகளும் மனிதர்களும் உள்ளனர். [6]
பயன்கள்
[தொகு]இவற்றின் எண்ணிக்கை அண்மைய காலங்களில் அதிகரித்ததிலிருந்து, இவற்றின் பயன்களைக் கண்டறிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இனங்கள் யப்பானிய மீன்வளத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன, எனவே இவற்றின் படையெடுப்பை ஒரு வளமாக மாற்றுவதில் வெற்றிகண்டால் ஒரு பொருளாதார தீர்வு காணப்படலாம். [4]
உணவாக
[தொகு]யப்பானிய நிறுவனமான டாங்கோ ஜெர்சி டெய்ரி நொமுரா சொறிமீன்களைப் பயன்படுத்தி வெண்ணிலா மற்றும் சொறிமீன் பனிக்கூழை உற்பத்தி செய்கிறது. இந்த சொறி மீனினில் உள்ள நச்சுப் பகுதிகளை நன்கு சுத்தம் செய்து சமைக்காவிட்டால் ஆபத்தாக மாறும் வாய்ப்பு உள்ளது. [7]
மருத்துவ பயன்பாடு
[தொகு]கீல்வாதம் போன்ற மூட்டு நோய்க்கு சிகிச்சையளிக்க நோமுரா சொறி மீன்களின் புரதங்களை பயன்படுத்த ஆய்வு செய்யப்படுகிறது. [8]
குறிப்புகள்
[தொகு]- ↑ Kawahara, M.; Dawson, M. N. (2007). "Nemopilema nomurai - a big problem". The Scyphozoan. பார்க்கப்பட்ட நாள் 28 September 2013.
- ↑
Hansson, Hans G. "Biographical Etymology of Marine Organism Names: N & O". Tjärnö Marine Biological Laboratory. பார்க்கப்பட்ட நாள் 16 November 2009.
Drs Toyokawa Masaya & Kensuke Yanagi kindly informed about Kanichi Nomura...
- ↑ McClain, Craig R.; Balk, Meghan A.; Benfield, Mark C.; Branch, Trevor A.; Chen, Catherine; Cosgrove, James; Dove, Alistair D.M.; Gaskins, Lindsay C. et al. (2015-01-13). "Sizing ocean giants: patterns of intraspecific size variation in marine megafauna" (in en). PeerJ 3: e715. doi:10.7717/peerj.715. பன்னாட்டுத் தர தொடர் எண்:2167-8359. பப்மெட்:25649000.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Uye, S. (2008). Blooms of the giant jellyfish Nemopilema nomurai: a threat to the fisheries sustainability of the East Asian Marginal Seas. பக். 125–131. http://www.plankton.jp/PBR/issue/vol03_suppl/03suppl_125.pdf.Uye, S. (2008). "Blooms of the giant jellyfish Nemopilema nomurai: a threat to the fisheries sustainability of the East Asian Marginal Seas" (PDF). Plankton and Benthos Research (3 (Supplement)): 125–131.
- ↑ Richardson, A.J.; Bakun, A.; Hays, G.C.; Gibbons, M.J. (2009). The jellyfish joyride: causes, consequences and management responses to a more gelatinous future. பக். 312–322.
- ↑ 6.0 6.1 Schultz, Trecien (2014). "Nomura's Jellyfish (Nemopilema nomurai)". (fictional Metropolitan Oceanic Institute & Aquarium), Saginaw Valley State University. Archived from the original on 25 June 2016. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016 – via svsu.edu.Schultz, Trecien (2014). "Nomura's Jellyfish (Nemopilema nomurai)". (fictional Metropolitan Oceanic Institute & Aquarium), Saginaw Valley State University. Archived from the original on 25 June 2016. Retrieved 27 May 2016 – via svsu.edu.
- ↑ "The 21 most dangerous foods in the world". Business Insider Singapore. 2015-10-09.
- ↑ Kiminori Ushida; et al. (2015). "Combined preparation for treating joint diseases". Patent US9095551. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.