அபிதா சுல்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிதா சுல்தான் பேகம்
இளவரசி சுரயா ஜா, நவாப் கொவ்ஹார் இ தாஜ்
பிறப்பு28 ஆகஸ்ட் 1913
போபால், பிரித்தானிய இந்தியா
இறப்பு11 மே 2004 (வயது 88)
கராச்சி, சிந்து, பாக்கித்தான்
புதைத்த இடம்
துணைவர்முகம்மது சர்வார் அலி கான்
குழந்தைகளின்
பெயர்கள்
ஷஹ்ர்யர் கான்
தந்தைஹமிதுல்லாஹ் கான்
தாய்மைமூனா சுல்தான்

இளவரசி சுரயா ஜா, நவாப் கோஹர்-இ-தாஜ், அபிதா சுல்தான் பேகம் சாஹிபா (Suraya Jah, Nawab Gowhar-i-Taj, Abida Sultan Begum Sahiba) (ஆகஸ்ட் 28, 1913 - மே 11, 2002) பொதுவாக அபிதா சுல்தான் என அறியப்படும் இவர் போபால் மாநிலத்தின் கடைசி நவாப் ஹமீதுல்லா கான் மற்றும் பேகம் மைமூனா சுல்தான் ஆகியோரின் மூத்த மகளாவார்.

வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

போபால் அரச குடும்பம்: இடமிருந்து வலமாக - நவாப் ஹமீதுல்லா கான், அவரது மனைவி மைமூனா சுல்தான், அவர்களின் மகள்கள் - ரபியா சுல்தான், அபிதா சுல்தான், சாஜிதா சுல்தான், இலண்டன் 1932

அபிதா போபாலின் நவாப் ஹமிதுல்லாஹ் கான் மற்றும் பேகம் மைமூனா சுல்தான் ஆகியோரின் மகள் ஆவார். இவர் தனது பெற்றோர்களின் மூன்று குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தவர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி சாஜிதா சுல்தான் மற்றும் ஒரு தங்கை ரபியா சுல்தான் இருகின்றார்கள். போபாலின் பேகம், சுல்தான் ஜஹான் இவரது பாட்டியாவார். மற்றும் ஷாஜகான் பேகம் இவரது பெரிய பாட்டியாவார்.

இவரது சகோதரி சஜிதாவுடனான திருமணத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் இப்திகர் அலி கான் பட்டோடி இவரது மைத்துனராக ஆகினார். மேலும் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி இவரது மருமகன் ஆவார்.

அபிதா 1926 ஆம் ஆண்டில் குர்வாய் மாநிலத்தின் ஆட்சியாளரான நவாப் முகமது சர்வார் அலிகானை மணந்தார். 1928 ஆம் ஆண்டில், போபால் சிம்மாசனத்திற்கு வெளிப்படையான வாரிசாக இவர் அங்கீகரிக்கப்பட்டார். இருப்பினும், இவர் சிம்மாசனத்திற்கான தனது உரிமையை விட்டுவிட்டு, 1950 இல் புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். [1]

பாகிஸ்தானில், இவர் வெளிநாட்டு சேவையில் சேர்ந்தார். ஆகையால், இந்திய அரசு இவரை அரசாணையில் இருந்து விலக்கியது. மேலும் இவரது தங்கை சஜிதா 1960 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணையில் அமர்ந்தார். இருந்தபோது அபிதா சுல்தான் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.[சான்று தேவை]

அபிதா சுல்தான் தனது 37 வயதில் புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு தனது இளம் மகனுடன் குடியேறினார். இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பாகிஸ்தானில் கழித்தார். இவர் 2002 இல் கராச்சியில் இறந்தார். அவரது மகன் ஷஹார்யார் கான் பாகிஸ்தானின் வெளியுறவு செயலாளராகவும் பின்னர் பாகிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "The remarkable Begums who defied patriarchal norms to rule Bhopal for more than a century".
  2. "The remarkable Begums who defied patriarchal norms to rule Bhopal for more than a century".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிதா_சுல்தான்&oldid=3908213" இலிருந்து மீள்விக்கப்பட்டது