பிலால் அசரப்
பிலால் அசரப் ( உருது: بلال اشرف) இவர் ஒரு பாக்கித்தான் திரைப்பட நடிகர் மற்றும் "விஷுவல் எஃபெக்ட்ஸ்" இயக்குநர் ஆவார். ஃபிராங்க்ளின் மார்ஷல் கல்லூரியிலிருந்து விஷுவல் எஃபெக்ட்ஸைப் படித்த பிறகு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் 2014 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற ஓ 21 என்ற திரில்லர் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றியதின் மூலம் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். பின்னர் 2017 இல் அசரப் மற்றொரு புகழ்பெற்ற போர்த் திரைப்படமான யல்காரில் இராணுவ அதிகாரியாக நடித்தார்.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]அசரப் கராச்சியில் பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த உருது மொழி பேசும் ஒரு குடும்பத்தில் பிறந்தார்.[3] 2016 இல் வெளிவந்த "ஜனான்" என்றப் படத்தில் பஷ்தூன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார், ஆனால் அவர் பஷ்தூனாக இல்லாததால், அவர் தனது பாத்திரத்திற்காக பஷ்தூ மொழியைக் கற்றுக்கொண்டார், இது "பாடல்களுக்கு உதடு அசைப்பதற்கு போதுமானதாகும்." [4]
அசரப் தனது ஆரம்பக் கல்வியை கராச்சியில் உள்ள புனித மைக்கேல்ஸ் கான்வென்ட் பள்ளியில் பெற்றார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிராங்க்ளின் & மார்ஷல் கல்லூரியில் "விஷுவல் எஃபெக்ட்ஸ்" இயக்கத்தைப் படித்தார். அவர் நிதி மற்றும் கலைகளில் இரட்டை பட்டம் பெற்றார். பின்னர் அனிமேஷனை கற்க இலண்டனில் உள்ள எஸ்கேப் ஸ்டுடியோவுக்குச் சென்றார். கேமராவின் பின்னால் அவருக்கு பத்து வருட அனுபவம் உள்ளது.[5]
அவர் ஆரம்பத்தில் நியூயார்க்கில் ஒரு நிதியிழப்பு ஆலோசகராக பணிபுரிந்தார். ஆனால் அவரது மறைந்த சகோதரி சாடியா அசரப்பின் வற்புறுத்தலின் பேரில் பின்னர் அவர் தனது வேலையை விட்டுவிட்டு அனிமேஷன் மற்றும் "விஷுவல் எஃபெக்ட்ஸ்" படிப்பதற்காக இலண்டன் சென்றார், அவரது சகோதரி ஒரு இயக்குநர் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்புத்துறையில் ஆசிரியர், அவர் பாகிஸ்தானின் சினிமாவை மேம்படுத்த விரும்பினார், அவருடன் இணைந்து இவர் தீவிர திரைப்படங்களை உருவாக்கினார். அவர் ஒரு நடிகராக மாற முடிவு செய்ததற்கு அவரது சகோதரிதான் காரணம்.[6]
அவர் தனக்கு எல்லா நேரங்களிலும் பிடித்த இசைக்குழுவாக பிங்க் ஃபிலாய்ட் என்பதை குறிப்பிட்டுள்ளார், சென்ட் ஆஃப் எ வுமன் என்ற திரைப்படம் அவரை ஒரு நடிகராக தள்ளியது அதே நேரத்தில் சிற்பம் மற்றும் ஓவியம் ஆகியவை தனது "மறைக்கப்பட்ட திறமைகள்" என்றும் விவரித்தார்.[7]
தொழில்
[தொகு]பிலால் அசரப் 2014 ஆம் ஆண்டின் திரில்லர் படமான ஓ 21 இல் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். 2016 ஆம் ஆண்டில், அர்மீனா கான் மற்றும் அலி ரஹ்மான் கான் ஆகியோருடன் இணைந்து ஜான் என்ற காதல் நகைச்சுவை படத்தில் அசரப் தனது முன்னணி நடிப்பை அறிமுகப்படுத்தினார், இது விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் பாராட்டைப் பெற்றது. அடுத்த ஆண்டு அவர் யால்கார் என்ற போர் திரைப்படத்தில் தோன்றினார், இது திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையில் ஒரு நல்ல தொடக்கத்தைக் கொண்டிருந்தது,[8] அதே நேரத்தில் அவரது 2017 ஆம் ஆண்டு வெளியான ரங்ரேஸா ஒரு விமர்சன மற்றும் வணிக ரீதியான தோல்வியாக இருந்தது.
வெளி இணைப்புகள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Mag the weekly Fashion Magazine - Your Source for Fashion Trends, Beauty Tips, Pop Culture News, and Celebrity Style". www.magtheweekly.com. Archived from the original on 2015-11-17. பார்க்கப்பட்ட நாள் 2015-11-14.
- ↑ NewsBytes. "Bilal Ashraf and Gohar Rasheed sign another film together".
- ↑ The After Moon Show | Episode #3 | 24 Feb 2018 | Kubra Khan & Humayun Saeed with Yasir Hussain, at 34:10 in the link
- ↑ Mariam Mushtaq (4 October 2015), "Bilal Ashraf – a name to look out for" பரணிடப்பட்டது 2019-06-11 at the வந்தவழி இயந்திரம், The News. Retrieved 27 April 2019.
- ↑ Sultan, Sana (Jan 11–17, 2014). "INTERVIEW >> Bilal Ashraf Next heartthrob of Pakistan". magtheweekly.com. Archived from the original on 2014-01-20. பார்க்கப்பட்ட நாள் 2018-08-23.
- ↑ Humay Waseem (25 August 2015), "A mix of muscle and masala", The Express Tribune. Retrieved 14 November 2018.
- ↑ "Movie stars, Bilal Ashraf and Syra Shahroz’s insane Chemistry fogs up in the camera lens", GOOD TIMES Magazine. 15 May 2017. Retrieved 21 September 2018.
- ↑ "Yalghaar rules box-office" (in en-US). The Nation. http://nation.com.pk/entertainment/30-Jun-2017/yalghaar-rules-box-office.