தச்சநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தச்சநல்லூர்
—  மாநகர் பகுதி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

தச்சநல்லூர் (Thachanallur) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நகர்புறப் பகுதியாகும். இது திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பித்தளை மற்றும் அலுமினியப் பாத்திரத் தொழில்கள் முக்கியமானவை. பீடித்தொழில், மண்பாண்ட தயாரிப்பாளர்கள், இரண்டு நூற்பாலைகளும், மின்சார மோட்டார் உதிரிபாகங்கள் செய்யும் தொழிற் கூடமும், சர்க்கரை ஆலையும் இங்கு உள்ளன.[4]

கி.பி. 1232-ஆம் ஆண்டு இப்பகுதி தச்சனுார் என்று அழைக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டுக்கள் சான்றளிக்கின்றன.

வரலாறு[தொகு]

திருநெல்வேலி, தச்சநல்லூரில் அமைந்துள்ளது வரம் தரும் பெருமாள் திருக்கோயில் 700 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் கல்வெட்டில் கி.பி 1232ஆம் ஆண்டு இப்பகுதி தச்சனுார் என்று அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அக்காலத்தில் தாமிரபரணி ஆற்றை எல்லைகளாக கொண்டிருந்த இரு நாடுகளில் கீழ நாட்டு வேம்பு பிரிவில் தச்சனுார் இருந்துள்ளது. இதன்படி இக்கோவில் சுமார் 700 ஆண்டுகள் முந்தையதாகும். கி. பி. 1734ஆம் ஆண்டில் மார்த்தாண்ட வர்மர் எனும் அரசராலும் பினனர் வல்லப மங்களத்து அரசராலும் பராமரிக்கப்பட்டுள்ளது. மேலும் குலசேகர பாண்டிய மன்னர் இக்கோவிலை சிறப்பாக பராமரிக்கும் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளார். கி. பி. 16ஆம் நுாற்றாணடில் சுந்தரபாண்டிய மன்னர் மதுரை திருமலை நாயக்க மன்னராலும் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு இங்கு வந்து மதுரை மன்னர்கள் வழிபட்டது குறித்து இங்கு உள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

கோவில்கள்[தொகு]

பள்ளிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தச்சநல்லூர்". nellaionline.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சநல்லூர்&oldid=3617797" இலிருந்து மீள்விக்கப்பட்டது