வரம் தரும் பெருமாள் கோயில், தச்சநல்லூர்
| அருள்மிகு வரம் தரும் பெருமாள் கோவில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | திருநெல்வேலி |
| அமைவிடம்: | பெருமாள் கோயில் தெரு, தச்சநல்லூர், திருநெல்வேலி வட்டம்[1] |
| சட்டமன்றத் தொகுதி: | திருநெல்வேலி |
| மக்களவைத் தொகுதி: | திருநெல்வேலி |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | வரம்தரும்பெருமாள் |
| தாயார்: | ஸ்ரீதேவி, பூதேவி |
| சிறப்புத் திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி, கருடசேவை |
| வரலாறு | |
| கட்டிய நாள்: | பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் கி.பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]திருநெல்வேலி , தச்சநல்லூரில் அமைந்துள்ளது. வரம் தரும் பெருமாள் திருக்கோயில் 700 ஆண்டுகள் பழமையானது.
இக்கோவில் கல்வெட்டில் கி.பி 1232 ம் ஆண்டு இப்பகுதி தச்சனுார் என்று அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அக்காலத்தில் தாமிரபரணி ஆற்றை எல்லைகளாக கொண்டிருந்த இரு நாடுகளில் கீழ நாட்டு வேம்பு பிரிவில் தச்சனுார் இருந்துள்ளது. இதன்படி இக்கோவில் சுமார் 700 ஆண்டுகள் முந்தையதாகும்.கி.பி 1734 ம் ஆண்டில் மார்த்தாண்ட வர்மர் எனும் அரசராலும் பினனர் வல்லப மங்களத்து அரசராலும் பராமரிக்கப்பட்டுள்ளது,
மேலும் குலசேகர பாண்டிய மன்னர் இக்கோவிலை சிறப்பாக பராமரிக்கும் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.
கி.பி 16 ம் நுாற்றாணடில் சுந்தரபாண்டிய மன்னர் மதுரை திருமலை நாயக்க மன்னராலும் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு இங்கு வந்து மதுரை மன்னர்கள் வழிபட்டது குறித்து இங்கு உள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் வரம்தரும்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் கருடசேவை திருவிழாவாக நடைபெறுகிறது.
இவற்றையும் காண்க
[தொகு]தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில்
பங்களா நடுநிலைப் பள்ளி, தச்சநல்லூர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்பிரவரி 19, 2017.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.