செல்லப்பன் (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்லப்பன்
பிறப்பு1940
இக்கியானம், நாகர்கோவில் மாவட்டம்
இறப்புஆகஸ்ட் 28, 2015
ராயப்பேட்டை, சென்னை
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுகேலிச்சித்திரம், படக்கதை

செல்லப்பன் என்பவர் தமிழக கேலிசித்திர, படக்கதை ஓவியர்களுள் ஒருவர். முரசொலி இதழில் கேலிச்சித்திரங்களை வரைந்தார். 1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை காலத்தில் இவர் வரைந்த கேலிச்சித்திரம் உலகப் புகழ்பெற்றது. அந்த ஓவியத்தை நியூஸ்வீக் இதழ் என்ற இதழ் மறுபிரசுரம் செய்தது. வாண்டுமாமா, முல்லை தங்கராசன் ஆகியோரின் கதைகளுக்கு ஓவியங்களை வரைந்துள்ளார்.

இவரை ஓவியர் செல்லம், ஓவியச் சக்ரவர்த்தி என்று அழைக்கின்றனர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

செல்லப்பன் நாகர்கோவில் மாவட்டம் இக்கியானம் எனும் ஊரைச் சேர்ந்தவர். [1]

1940 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நாகர்கோவில் சித்ரா ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பி. எஸ். மணி ஆசிரியராக இருந்த கன்னியாக்குமரி இதழில் ஓவியம் வரையத் தொடங்கினார். [1]

செல்லப்பன் தனது மனைவியான விமலா என்ற பெயரில் சில இதழ்களில் சித்திரக்கதை வரைந்துள்ளார். 1963 இல் குழுதம் வார இதழில் எழுத்தாளர் புனிதனின் விளம்பரக்காரி என்ற கதைக்கு விமலா என்ற பெயரில் சித்திரக்கதை வரைந்துள்ளார்.

40 ஆண்டுகள் முரசொலி நாளிதழின் கேலி சித்திரக்காரராகப் பணி செய்தார். [1] 1997 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். 2015 ஆகஸ்ட் 28 இல் உடல்நலக்குறைவால் சென்னை ராயப்பேட்டையில் இறந்தார்.

சிறப்பு[தொகு]

1976 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை குறித்தான இவர் வரைந்த கேலிசித்திரத்தை நியூஸ்வீக் இதழ் பிரசுகித்தது. கோகுலம், சிறுவர் மலர், ரத்னபாலா, பூந்தளிர், கண்மணி, தங்க மலர், முத்து காமிக்ஸ், சுட்டி விகடன் போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளியிட்டுள்ளன. [1]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 தமிழ் கார்ட்டூன்களுக்கு உயிர்கொடுத்த ஓவியர் 02 செப்டம்பர் 2015 இந்து தமிழ் திசை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லப்பன்_(ஓவியர்)&oldid=3172841" இலிருந்து மீள்விக்கப்பட்டது