இந்துக்களின் ஓவியக் கலை மரபு
ஆதி காலத்திலிருந்தே இந்துக்களிடையே ஓவியக் கலை மரபு விருத்திபெற்றிருந்தமையைத் தொல்பொருளாய்வுகளும் இலக்கிய ஆதாரங்களும் காட்டுகின்றன. இவை பற்றி விஷ்ணு தர்மோத்திரம், தக்கண சித்திரம் , சித்திரலட்சணம் முதலான நூல்கள் குறிப்பிடுகின்றன. சங்க காலத்தில் இறந்த போர் வீரனுக்காக நடுகல்லில் சித்திரம் தீட்டும் மரபு காணப்பட்டது. சங்க காலத்தின் தமிழ் நூல்களான தொல்காப்பியம், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன இவ்வோவியங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்துக்களின் ஓவிய மரபு கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கொள்ளக்கூடியது. "நாடக மகளிர்க்கு நற்கனம் வகுத்த ஓவியச் செந்நூல்" என சிலப்பதிகாரத்தில் கூறப்படுவதிலிருந்து இதனை நாம் ஆதாரப்படுத்தலாம்.பல்லவ மன்னன் தக்கண சித்திரம் என்ற ஓவிய நூலுக்கு அணிந்துரை எழுதியதாகவும் அறிய முடிகிறது.
பண்டைய ஓவியப் பயன்பாடுகள்:
[தொகு]- மட்பாண்டங்கள், உடைகள் என்பவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டன.
- அரண்மனை குகைகள் கோயில்களில் வரையப்பட்டன.
- ஓவியம் வரையப்பட்ட கூரை 'ஓவிய விதானம்' எனப்பட்டது.
- தான் விரும்பிய பெண்ணை மணக்க முடியாத வேளைகளில் பெண்ணில் உருவத்தை ஓவியமாகத் தீட்டி மடலேறுதல் வழக்கம் இருந்து வந்தது.
சிந்துவெளி ஓவியங்கள்
[தொகு]சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த மக்கள் ஓவியக்கலை மரபில் ஆழ்ந்த அறிவும் திறமையும் கொண்டு விளங்கியமைக்கு அங்கு கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் சான்றுபகர்கின்றன.
மதகுரு உருவம்
[தொகு]குறுகிய கண்ணும், தடித்த உதடும் தட்டை மூக்கும்,அடர் தாடியும் கொண்ட மனித உரு மதகுரு என அழைக்கப்படுகிறது.
விஷ்ணு தர்மோத்திரம் காட்டும் ஓவிய வகைகள்
[தொகு]- சத்தியம் - சமயம் சார்ந்த கருத்து நிலைகளைக் கருப் பொருளாகக் கொண்ட ஓவியங்கள்.
- வைதிகம் - இயற்கைக் காட்சி,மிருகங்கள், பறவைகள், சமயம் சாராத ஐதீகக் கதைகளைக் கருப் பொருளாகக் கொண்ட ஓவியங்கள்.
- நாகரம் - பிரதிமை ஓவியங்கள்.
- மிஸ்ரம் - மேலுள்ள ஓவியப் பகுப்புகளில் பல சேர்ந்ததாக கொண்ட ஓவியங்கள்.
ஆண்டிப்பட்டி மலை, பழனி ஓவியங்கள்
[தொகு]ஆண்டிப்பட்டி மலை, பழனி பகுதியில் சங்ககாலத்தைச் சேர்ந்த சுமார் 3000 ஆண்டுகள் பழைமையான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.