பி. எஸ். மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. எஸ். மணி (பிறப்பு:1916) தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி. இந்தியா விடுதலை பெற்ற பின்னரும், ‎திருவாங்கூர்-கொச்சியுடன் (கேரளம்) இருந்த குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். அதன் பலனாக, 1956ஆம் ஆண்டின் நவம்பர் முதலாம் நாளில் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

இவர் திருவாளர் பெருமாள் பிள்ளை என்ற கட்டட ஒப்பந்ததாரரின் மூத்த மகனாக 1916இல் பிறந்தார். பள்ளிப் படிப்பை முடித்த மணி, திருவனந்தபுரத்தில் இருந்த ஒரு ஜெர்மானிய நிறுவனத்தில் சில காலம் வேலை பார்த்து, பின்னர் நாகர்கோயிலுக்கு திரும்பி தந்தையுடன் குடும்பத் தொழில் ஒரு பக்கம், சமஸ்தான காங்கிரசில் இணைந்து அரசியல் ஈடுபாடு ஒரு பக்கம் என வாழத்தலைப்பட்டார். ஒரு சில ஆண்டுகளிலேயே அரசியல் முழுமையாக அவரை ஆட்கொண்டது. ஆகஸ்ட் 1942 போராட்டத்தில் சிறைவாசம் பெற்றார். திருவிதாங்கூர், கொச்சி ஆகிய சமஸ்தானங்களோடு மலபார் பகுதியையும் ஒருங்கிணைத்து ஐக்கிய கேரளம் அமைக்கவேண்டி கேரள காங்கிரசை மலையாள தலைவர்கள் தோற்றுவித்தனர். ஐக்கிய கேரளத்திற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்னர். இதனால் 1938 இல் மணி சமஸ்தான காங்கிரசில் இருந்து வெளியேரினார்.

தி.த.நா.கா[தொகு]

தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்கப் போராடும் நோக்கத்துடன் திருவாங்கூர் தமிழ் காங்கிரஸ் பிறப்பெடுத்தது. அதில் அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றினார். 1950ஆம் ஆண்டில், கன்னியாகுமரியில் எல்லை மாநாட்டுச் செயளாளராய்ப் பெறுப்பேற்ற மணி சிறப்பாக செயல்பட்டார். 1954ஆம் ஆண்டு போராட்டம் தீவிரம் பெற்றது. ஆகஸ்ட் 11 அன்று தமிழர் எழுச்சி நாளில் துப்பாக்கி சூட்டால் 11 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மணியும் கைது செய்யப்பட்டு ஆறுமாதம் சிறைவாசம் பெற்றார். 1.நவம்பர் 1956 அன்று குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

தமிழ்த்தேசியர்[தொகு]

தமிழ்த் தேசிய உணர்வில் திளைத்த மணி, 1990 ஆம் ஆண்டு தமிழர் தேசிய இயக்கத்தின், தமிழர் தன்னுரிமை பிரகடன மாநாடு பழ. நெடுமாறன் தலைமையில் தஞ்சையில் கூடியபோது அதில் பங்கு பெற வந்த மணி கைது செய்யப்பட்டு இரு மாதங்கள் சிறைவாழ்வு பெற்றார்.

கன்னியாகுமரி இதழ்[தொகு]

1956ஆம் ஆண்டிற்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கன்னியாகுமரி என்ற இதழை தொடங்கி 25 ஆண்டுகள் நடத்தினார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எஸ்._மணி&oldid=2717593" இருந்து மீள்விக்கப்பட்டது