குன்னத்தூர், மதுரை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குன்னத்தூர், தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[1] இக்கிராமம், மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 156 மீட்டர் உயரத்தில், 9°53′38″N 78°15′26″E / 9.8938°N 78.2573°E / 9.8938; 78.2573 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு குன்னத்தூர் அமையப் பெற்றுள்ளது. குன்னத்தூர், மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில், மதுரை - சிவகங்கை மாநில நெடுஞ்சாலை எண் 33 அருகே, வரிச்சியூர் - களிமங்கலம் செல்லும் மாவட்டச் சாலையில் அமைந்துள்ளது. அருகமைந்த கிராமங்கள் ஆளவந்தான், வரிச்சியூர், களிமங்கலம், பூவந்தி, நாட்டார்மங்கலம், செங்கோட்டை, இடையப்பட்டி ஆகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625201; தொலைபேசி குறியீடு எண் (Std Code) 04549 ஆகும்.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, குன்னத்தூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1,307 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 180 (13.77%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 71.26% ஆகும். குன்னத்தூரில் 335 வீடுகள் உள்ளது. [2]

குன்னத்தூர் சமணர் குடைவரைகள்[தொகு]

குன்னத்தூர் கிராமத்தின் சிறு மலை மீது, கிபி 9 - 10ம் நூற்றாண்டு காலத்திய சமணர் படுகைகளும், தமிழி கல்வெட்டுகளும், வட்டெழுத்துகளும், கிழக்கு நோக்கிய உதயகிரீஸ்வர் கோயிலும், மேற்கு நோக்கிய அஸ்தகிரீஸ்வரர் குடைவரைக் கோயில்களும் உள்ளது.[3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kunnathur
  2. Kunnathur Population - Madurai, Tamil Nadu
  3. எம். குன்னத்தூர் தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள் - காணொளி
  4. உதயகிரீசுவரர் கோயில்

வெளி இணைப்புகள்[தொகு]