மகேசிண்ட பிரதிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேசிண்ட பிரதிகாரம்
இயக்கம்திலீஷ் போத்தன்
தயாரிப்புஆஷிக் அபு
கதைசியாம் புஷ்கரன்
இசைபிஜிபால்
நடிப்பு
ஒளிப்பதிவுஷிஜு காலித்
படத்தொகுப்புசைஜு ஸ்ரீமரன்
கலையகம்ஓபிஎம் டிரீம் மில் சினிமாஸ்
விநியோகம்ஓபிஎம் டிரீம் மில் சினிமாஸ் (இந்தியா)
வெளியீடுபெப்ரவரி 5, 2016 (2016-02-05)(கேரளம்)
12 பெப்ரவரி 2016 (rest of India)
ஓட்டம்120 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு45.0 மில்லியன்[2]
மொத்த வருவாய்173.5 மில்லியன்[3] (கேரளம்)

மகேசிண்ட பிரதிகாரம் (Maheshinte Prathikaaram (பொருள்; மகேசின் சபதம் ) என்பது 2016 ஆண்டைய இந்திய மலையாள நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை திலீஷ் போத்தன் (அறிமுக இயக்குநர்) இயக்க, படத்தை ஆஷிக் அபு தயாரித்துள்ளார். இப்படத்தில் பகத் பாசில், அனுஸ்ரீ, அலென்சியர் லீ லோபஸ், அபர்ணா பாலமுரளி, சவுபின் ஷாஹிர் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் கதையானது செந்தாலா, துறவூரின் தம்பன் புருஷனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. படத்துக்காக எழுதியவர் சியாம் புஷ்கரன் ஆவார். ஷிஜு காலித் திரைப்படத்தின் ஒளிப்பதிவைச் செய்ய. பின்னணி இசையை பிஜிபால் செய்துள்ளார்.

2013 ஆம் ஆண்டில் மகேஷிண்ட பிரதிகாரமின் வளர்ச்சி துவங்கியது. அப்போது போத்தன் ஆஷிக் அபுவிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார் ( இடுக்கி கோல்டு படத்தை இயக்கியவர்களுடன் இணைந்து புஷ்கரன் எழுதினார்). தன் சொந்த கிராமத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை போத்தனுக்கு புஷ்கரன் கூறினார். இதையடுத்து போத்தனின் வலியுறுத்தலினால் புஷ்கரன் அந்த ஆண்டு இந்தக் கதைக்கான திரைக்கதை எழுதினார். அதன்பிறகு இப்படத்தை தயாரிப்பதில் அபு ஆர்வம் காட்டினார். படத்தின் தயாரிப்பு வேலைகளை 2014 திசம்பர் முதல் துவங்க திட்டமிடப்பட்டது, ஆனால் திட்டமிடலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, இது 2015 ஆகத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் முதன்மைப் படப்பிடிப்புகள் ஆகத்து மாத துவக்கத்தில் இடுக்கி மற்றும் அருகிலுள்ள இடங்களில் நடந்ததன. படப்பிடிப்பு அக்டோபர் இறுதியில் முடிந்தது.

இப்படமானது கேரளாவில் 2016 பெப்ரவரி 5 அன்றும், இந்தியாவில் பிப்ரவரி 12 ம் தேதி அன்றும் உலக அளவில் பெப்ரவரி 26 அன்றும் வெளியிடப்பட்டது. மகேஷிண்ட பிரதிகாரம் வணிகரீதியாக வெற்றிபெற்றது. 4.5 கோடி (45 மில்லியன்) செலவில் தயாரிக்கப்படமானது, கேரளா பாக்ஸ் ஆபிசில் 173.5 மில்லியன் வசூலித்தது. படத்தில் நடிகர்களின் நடிப்பு, நகைச்சுவை, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, திரைக்கதை போன்றவை விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. 64 வது தேசிய திரைப்பட விருதுகளில், மலையாளத்தின் சிறந்த திரைக்கதை விருது மற்றும் மலையாளத்தில் சிறந்த திரைப்படம் போன்ற விருதுகளைப் பெற்றது. மேலும் 47 வது கேரளா மாநில திரைப்பட விருதுகளில், இது சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த திரைப்படம் போன்ற விருதுகளைப் பெற்றது. இந்தத் திரைப்படம் பிரியதர்சனால் தமிழ் மொழியில் நிமிர் (2018) என்ன பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது.

கதை[தொகு]

மகேஷ் பாவானா ஒரு ஒளிப்படக் கலைஞர் ஆவார். அவர் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தின் பிரகாஷ் பகுதியில் எண்ணியல் ஒளிப்பட நிலையமான பாவனா ஸ்டுடியோவை நடத்திவருகிறார். ஒரு சண்டையில் மகேசை ஒருவர் அடித்து விடுகிறார் இதனால் அவமானம் அடைந்த மகேஷ் அவரை திருப்பி அடிக்காமல் காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுக்கிறார். தன்னை அடித்து அவமானப்படுத்திய அந்த நபரை திருப்பி அடிக்காமல் செருப்பு அணிய மாட்டேன் என்று முடிவெடுக்கும் மகேசின் சூளுரை என்னவானது என்பதே இத்திரைப்படத்தின் கதை.

நடிகர்கள்[தொகு]

  • பகத் பாசில் - மகேஷ் பவனா, ஒளிப்படக் கலைஞர் மற்றும் பவானா ஸ்டுடியோவின் உரிமையாளர்
  • அபர்ணா பாலமுரளி - ஜிம்சி அகஸ்டியன், கல்லூரி மாணவி
  • அனுஸ்ரீ - சௌமியா, ஒரு செவிலியர் மற்றும் மகேசின் முன்னாள் காதலி
  • அலினைசியே லீ லோபஸ் - பேபி, பேபி ஆர்ட்ஸ் பிளக்ஸ் அச்சக உரிமையாளர்
  • சௌபின் ஷாஹிர் - கிரிஸ்பின், ஒரு அடோபி போட்டோசாப் வழிகாட்டி
  • கே. எல். அண்டனி கோச்சி - வின்சென்ட் பவானா, மகேஷின் தந்தை
  • சுஜித் சங்கர் - ஜிம்சன் ஆகஸ்டின், ஜிம்சியின் சகோதரர்
  • லிஜோமோல் ஜோஸ் - சோனியா, பேபியின் மகள்
  • ஜாபர் இடுக்கி - குஞ்சுமோன், சௌமியாவின் தந்தை
  • அச்சந்தன்நந்தன் - தாஹிர், கிராமப்புற கவுன்சிலர்
  • விஜ்ஜிலிஷ் - விஜ்ஜிலிஷ்
  • லீனா ஆண்டணி -ஜிம்சியின் தாய்
  • தில்லீஷ் போத்தன் - எல்டியோ, ஒரு அமேரிக்க மலையாளி (கௌரவத் தோற்றம்)
  • ஜெயசங்கர் கரிமுட்டம்

வெளியீடு[தொகு]

2016 சனவரியில் மகேஷின்ட பிரதிகாரம் படத்தின் வெளியீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.[4] கேரளத்தில் பிப்ரவரி 5 அன்று 67 திரையரங்குகளில் இந்த படம் வெளியிடப்பட்டது.[5] இது இந்தியாவின் பிற பகுதிகளில் பிப்ரவரி 12 அன்று வெளியானது,[6] மேலும் சர்வதேச அளவில் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வெளியிடப்பட்டது.[7] கேரளாவுக்கு வெளியே இநிதியாவில் பெங்களூரு, மைசூர், மங்களூர், மணிப்பால், சென்னை, கோயம்புத்தூர், ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டனம் ஆகிய இடங்களில் ஓபரா டிரீம் மில் சினிமாஸ் விநியோகித்தது.[6] 2016 பிப்ரவரி மாதம், மும்பை, புனே, குஜராத், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டது..[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maheshinte Prathikaram". British Board of Film Classification. Archived from the original on 14 July 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  2. Ranjini, Beena (1 January 2017). "എതിരില്ലാത്ത താരാധിപത്യം." [Undisputed Stardom..] (in மலையாளம்). Vellinakshatram. பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.
  3. James, Anu (23 June 2016). "Kerala box office: Here's the final collection report of 'Maheshinte Prathikaaram,' 'Action Hero Biju,' 'Kali' and 'Paavada'". International Business Times இம் மூலத்தில் இருந்து 13 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160713191708/http://www.ibtimes.co.in/kerala-box-office-heres-final-collection-report-maheshinte-prathikaaram-action-hero-biju-683993. பார்த்த நாள்: 24 June 2016. 
  4. James, Anu (8 January 2016). "Fahadh Faasil gearing up for release of Monsoon Mangoes and Maheshinte Prathikaram". International Business Times இம் மூலத்தில் இருந்து 14 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160714080504/http://www.ibtimes.co.in/fahadh-faasil-gearing-release-monsoon-mangoes-maheshinte-prathikaram-662539. பார்த்த நாள்: 11 June 2016. 
  5. James, Anu (5 February 2016). "Fahadh Faasil's 'Maheshinte Prathikaaram' movie review: Live audience response". International Business Times இம் மூலத்தில் இருந்து 8 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160408144841/http://www.ibtimes.co.in/fahadh-faasils-maheshinte-prathikaaram-movie-review-live-audience-response-665773. பார்த்த நாள்: 11 June 2016. 
  6. 6.0 6.1 Admin (11 February 2016). "Maheshinte Prathikaram screens increasing from tomorrow !". Onlookersmedia. Archived from the original on 3 June 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  7. Admin (25 February 2016). "Maheshinte Prathikaram will go worldwide from this February 26". Onlookersmedia. Archived from the original on 14 July 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2016.
  8. "Outside Kerala Theatre list". Facebook.com. 19 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேசிண்ட_பிரதிகாரம்&oldid=3587785" இலிருந்து மீள்விக்கப்பட்டது