அனுஸ்ரீ
அனுஸ்ரீ நாயர் (பிறப்பு: அக்டோபர் 24, 1990), என்பவர், மலையாள திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகையாவார்.இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த டயமண்ட் நெக்லெஸ் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மற்றும் பல மலையாள படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.[1] [2]
அனுஸ்ரீ நாயர் | |
---|---|
![]() 2017 ல் அனுஸ்ரீ | |
பிறப்பு | 24 அக்டோபர் 1990 கமுகும்சேரி, கொல்லம், கேரளா, India |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 2012 லிருந்து தற்போது வரை |
பெற்றோர் | முரளிதரன் பிள்ளை , ஷோபனா |
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
1990 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி கேரளாவை சார்ந்த கேரள நீர் ஆணையத்தின் எழுத்தரான முரளீதரன் பிள்ளை, ஷோபனா தம்பதியானருக்கு அனுஸ்ரீ பிறந்தார். [3] இவர்கள் கொல்லம் மாவட்டத்தில் காமுகும்சேரியில் வசிக்கிறார்கள்.[1] இவருக்கு அனூப் என்ற மூத்த சகோதரனும் உள்ளார். [4]
தொழில்[தொகு]
இயக்குனர் லால் ஜோஸ் தீர்ப்பாளராக பங்கெடுத்த சூர்யா டிவி நேரடி நிகழ்வான விவேல் ஆக்டிவ் ஃபேர் பிக் பிரேக் நிகழ்ச்சியில் போட்டியிட வந்திருந்த அனுஸ்ரீ இயக்குனர் லால் ஜோஸைக் கவர்ந்தார், இதுவே லால் ஜோஸ் இயக்கி வெளிவந்த டைமண்ட் நெக்லஸ் என்ற திரைப்படத்தில் கலாமண்டலம் ராஜஸ்ரீ என்ற கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அனுஸ்ரீக்கு உருவாக்கி தந்தது.
திரைப்படங்கள்[தொகு]
Year | Title | Role | Notes |
---|---|---|---|
2012 | டைமண்ட் நெக்லஸ் | கலா மண்டலம் ராஜஸ்ரீ | |
2013 | ரெட் ஒயின் | ஸ்ரீலெட்சுமி | |
லெஃப்ட் ரைட் லெஃப்ட் | தீபா | ||
புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் | கொச்சி ராணிi | ||
வெடிவழிபாடு | ராஸ்மி | ||
2014 | மை லைஃப் பார்ட்னர் (2014) | பவித்ரா | |
நாக்கு பெண்ட நாக்கு டாக்க | இந்து | ||
ஆங்க்ரி பேபிஸ் இன் லவ் | செல்வி | ||
இதிகாசா | ஜானகி | ||
குருத்தம் கெட்டவன் | மரியா | ||
பேடித்தொண்டன் | ராதிகா | ||
செகண்ட்ஸ் (2014 ) | பார்வதி | ||
2015 | சந்திரேட்டா எவிட யா | சுஸ்மா | |
ராஜம்மா அட் யாஹூ | நசீமா | ||
2016 | மகேஷின்டே பிரதிகாரம் | செளமியா | |
ஒப்பம் | ஏ.சி.பி. கங்கா | ||
கொச்சவ்வ பெளேலா அய்யப்ப கொய்லோ | அஞ்சு | ||
2017 | அமர் ஜவான் அமர் பாரத் | தேசபக்தி காணொளி | |
ஒரு சினிமாக்காரன் | நயனா | ||
2018 | தெய்வமே கைதொழாம் கெ.குமார் ஆகணும்' | நிர்மலா | |
ஆதி | ஜெயா | ||
பஞ்சவர்ண தத்த | சித்ரா | ||
ஆணக் கள்ளன் | நீலிமா | ||
ஆட்டோ சா | அனிதா | ||
2019 | மதுர ராஜா | வசந்தி | |
சேஃப் | அருந்ததி | ||
உல்டா (2019) | பெளர்ணமி | ||
பிரதி பூவன் கோழி | ரோசம்மா | ||
மை சண்டா (2019)' |
தொலைக்காட்சி[தொகு]
வருடம் | தலைப்பு | பங்கு | தொலைக்காட்சி | Notes |
---|---|---|---|---|
2011 | விவெல் ஆக்டிவ் ஃபேர் பிக் | போட்டியாளர் | சூர்யா தொலைக்காட்சி | |
2015 | காமெடி ஸ்டார்ஸ் சீசன் - 2 | தீர்ப்பாளர் | ஆசியா நெட் | |
2016 | அதாம் பாத்து ருசி | தொகுப்பாளினி தீர்ப்பாளர் |
மழவில் மனோரமா | |
2016 | 6 பீஸ் பீட்சா | நந்தா |
ஆசியா நெட்|| டெலஃபிலிம் | |
2017 | அதாம் பாத்து ருசி 2017 | தொகுப்பாளினி தீர்ப்பாளர் |
மழவில் மனோரமா | |
2018 | அதாம் பாத்து ருசி 2018 | தொகுப்பாளினி தீர்ப்பாளர் |
மழவில் மனோரமா | |
2018–2019 | தகர்ப்பான் காமெடி | தீர்ப்பாளினி | மழவில் மனோரமா | |
2019 | அதாம் பாத்து ருசி 2019 | தொகுப்பாளினி தீர்ப்பாளர் |
மழவில் மனோரமா |
- இதர நிகழ்ச்சிகள்
- காமெடி சர்க்கஸ்
- ஒண்ணும் ஒண்ணும் மூன்று
- ஒண்ணும் ஒண்ணும் மூன்று -2
- காமெடி சூப்பர் நைட் 2
- நீங்களும் ஆகாம் கோடீஸ்வரன்
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 Sathyendran, Nita (19 July 2003). "Different Step: Actor Anusree on finding her footing in tinsel town".
- ↑ Krishna, Gayathri (2 August 2013). "Anusree Nair goes urban".
- ↑ "Mangalam - Varika 15-Dec-2014". Mangalamvarika.com.
- ↑ "ഐ മിസ് യു". மூல முகவரியிலிருந்து 3 November 2012 அன்று பரணிடப்பட்டது.