உள்ளடக்கத்துக்குச் செல்

பேராவூரணி தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 10°17′07″N 79°12′01″E / 10.2854°N 79.2004°E / 10.2854; 79.2004
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராவூரணி
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே நிலையம் சாலை, பேராவூரணி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு - 614804
இந்தியா
ஆள்கூறுகள்10°17′07″N 79°12′01″E / 10.2854°N 79.2004°E / 10.2854; 79.2004
ஏற்றம்28 மீட்டர்கள் (92 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்திருவாரூர் - திருத்துறைப்பூண்டிகாரைக்குடி வழித்தடம்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
மாற்றுத்திறனாளி அணுகல்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைகட்டுமானத்திற்காக மூடப்பட்டது
(மறுசீரமைப்பு செயலில் உள்ளது)
நிலையக் குறியீடுPVI
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) திருச்சிராப்பள்ளி
வரலாறு
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
பேராவூரணி is located in தமிழ் நாடு
பேராவூரணி
பேராவூரணி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
பேராவூரணி is located in இந்தியா
பேராவூரணி
பேராவூரணி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

பேராவூரணி தொடருந்து நிலையம் (Peravurani railway station, நிலையக் குறியீடு:PVI) இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில், பேராவூரணி நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின், திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

பின்னணி

[தொகு]

இத்தொடருந்து நிலையமானது, பேராவூரணி நகரத்தினுள் அமைந்துள்ளது. இது வடக்கில் திருத்துறைப்பூண்டி தொடருந்து நிலையத்தையும், தெற்கில் காரைக்குடி தொடருந்து நிலையத்தையும் இணைக்கிறது. இது ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் தொடருந்து பாதையாக அமைக்கப்பட்டு, இதில் இரண்டு பயணிகள் தொடருந்தும், ஒரு விரைவுத் தொடருந்தும் என மொத்தம் மூன்று தொடருந்துகள், தினமும் இயங்கி கொண்டிருந்தது. இந்த தொடருந்து நிலையத்துக்கு அருகிலேயே, பேருந்து நிலையம் உள்ளது. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம், 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் ஆகும்.[1]

வழித்தடம்

[தொகு]

பேராவூரணி தொடருந்து நிலையமானது, திருத்துறைப்பூண்டி தொடருந்து நிலையத்திற்கும், காரைக்குடி தொடருந்து நிலையத்திற்கும் இடையில் உள்ளது. இப்பொழுது பாதை மாற்று பணி மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் காரைக்குடி வரை 187 கிலோமீட்டா நீட்டிப்பு செய்யும் பணிக்கு ரூ. 711 கோடி 2007 – 2008ல் அனுமதிக்கப்பட்டு, பணி நடைபெறுவதன் காரணமாக, தொடருந்து நிலையம் பயணிகள் யாருமற்ற நிலையில் உள்ளது. ஆனால் மாற்றும் பணி மிக மெதுவாக நடைபெறுகிறது. பேராவூரணி தொடருந்து நிலையக் கட்டிடம், கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Town Investment Plan for Peravurani" (PDF). Directorate of Town Panchayats. Government of Tamil Nadu. March 2010. p. 25. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.
  2. "தண்டவாளம் தயார் நிலையில் இருந்தும் காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே ரயில் இயக்குவதில் தாமதம்: சமூக விரோதிகளின் புகலிடமாகும் ரயில் நிலையங்கள்". இந்து தமிழ் (5 சூன், 2018)

வெளியிணைப்புகள்

[தொகு]