மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பூமிநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:மண்ணச்சநல்லூர், மண்ணச்சநல்லூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மண்ணச்சநல்லூர்
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
மூலவர்:பூமிநாதர்
தாயார்:அறம்வளர்த்தநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:தேரோட்டம்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் பூமிநாதர், அறம்வளர்த்தநாயகி சன்னதிகளும், முருகன், தெட்சிணமூர்த்தி, துர்க்கை, நவகிரகங்கள் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் தேரோட்டம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)