தென்னை சிவப்புக் கூன் வண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னை சிவப்புக் கூன் வண்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
R. ferrugineus
இருசொற் பெயரீடு
Rhynchophorus ferrugineus
(Olivier, 1790) [1]
வேறு பெயர்கள்
  • Curculio ferrugineus Olivier, 1790
  • Curculio schach Olivier, 1790
  • Curculio vulneratus Panzerer, 1798
  • Calandra ferruginea Fabricius, 1801
  • Rhynchophorus pascha Boheman in Schönherr, 1845
  • Rhynchophorus ferrugineus v. tenuirostris Chevrolat, 1882
  • Rhynchophorus indostanus Chevrolat, 1882
  • Rhynchophorus signaticollis Chevrolat, 1882
  • Rhynchophorus pascha v. cinctus Faust, 1892
  • Rhynchophorus ferrugineus v. seminiger Faust, 1894
  • Rhynchophorus signaticollis v. dimidiatus Faust, 1894

தென்னை சிவப்புக் கூன் வண்டு (Rhynchophorus Ferrugineus) அல்லது செந்நிற நீள்மூஞ்சி வண்டு என்பது தென்னை, பனை, பேரீச்சை மற்றும் எண்ணெய்ப்பனை போன்ற மர வகைகளைத் தாக்கும் அந்துப்பூச்சி வகையைச் சார்ந்த் பூச்சிகளில் மிகவும் அபாயகரமானதாகும்.[2]

பரவல்[தொகு]

முதலில் வெப்பமண்டல ஆசியாவிலிருந்து, இந்த் சிவப்புக்கூன் வண்டு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு பரவி 1980 களில் மத்தியதரைக் கடலை அடைந்து அங்கே, முதன்முதலில் 1994 ஆம் ஆண்டில் ஸ்பெயினிலும்,[3] 2006 ஆம் ஆண்டில் பிரான்சிலும்[4] இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. மால்டா, இத்தாலி (டஸ்கனி, சிசிலி, காம்பானியா, சார்டினியா, லாசியோ, மார்சே, புக்லியா மற்றும் லிகுரியா), குரோஷியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய நாடுகளில் இந்த வண்டின் மூலம் பரவிய தொற்றுநோய்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது போர்ச்சுகலின் பெரும்பகுதி முழுவதும், குறிப்பாக தெற்கு முழுவதும் நன்கு பரவியுள்ளது[5]. மேலும் மொராக்கோ, துனிசியா மற்றும் பிற வட ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது.[6] [7] இந்த வண்டு முதன்முதலில் அமெரிக்காவில் ஜனவரி 2009 இல் குராக்கோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது [8]. அதே ஆண்டு அருபாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[9] அங்கிருந்து 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் கலிபோர்னியாவின் லகுனா கடற்கரையில் பரவியிருக்கலாம்.[10]

உடல் அமைப்பு[தொகு]

இவ் வண்டுகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் முன் பகுதி மூக்கு போல் நீண்டு காணப்படும். வண்டுகள் தண்டுப் பகுதியில் தனது மூக்கினால் சுரண்டி முட்டைகளை இடுகின்றன. முட்டையிலிருந்து கால்கள் இல்லாத புழுக்கள் வெளி வரும். இந்த புழுக்களுக்கு 'மேகட்' என்று பெயர். நன்கு வளர்ந்த புழு தண்டின் உள்ளேயே கூட்டுப் புழுவாக மாறி, பின் வண்டாக வெளி வரும்.

இளம் உயிரி
கூட்டுப்புழுக்கூடு
கூட்டுப்புழு
முதிர்ச்சியடைந்த வண்டு

சேதங்கள்[தொகு]

இந்த வகை சிவப்பு வண்டுக்கள், உலகமெங்கும், 19 க்கும் மேற்பட்டபனை இனங்களைத் தாக்குவதாகக் கூறப்படுகிறது [11] மேலும் இது உலகின் மிக மோசமான வண்டாகக் கருதப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் தென்னை மரங்களில் இதன் தாக்கம் முதன்முதலில் பதிவாகியிருந்தாலும் , கடந்த இரண்டு தசாப்தங்களாக பல மத்திய கிழக்கு நாடுகளில் பேரீச்சை மரங்களிலும் பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது, தற்போது ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா வரை அதன் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. இவ்வண்டுகள் மரத்தின் தண்டுப்பகுதியில் குடைந்து சிறு துவாரத்தை ஏற்படுத்தி உள்ளே சென்று சதைப்பற்றை சிறிது சிறிதாக தின்று விடும். நாளடைவில் பாதிக்கப்பட்ட மரங்கள் முறிந்து விடும். வண்டுகள் துளைத்த துவாரத்தின் வழியாக ஒரு வித பழுப்பு நிறத் திரவம் வடியும்.

கட்டுப்பாட்டு முறைகள்[தொகு]

  • பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்
  • பாதிக்கப்பட்ட மரத்தின் துவாரங்களில் இரண்டு செல்பாஸ் மாத்திரைகளை வைத்து அடைத்து விட வேண்டும்
  • நுவக்ரான் மருந்தை வேர் மூலம் செலுத்த வேண்டும்
  • இயற்கை முறையில் கட்டுப்படுத்த 'இனக்கவர்ச்சி பொறி' கொண்டு வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Rhynchophorus ferrugineus at European and Mediterranean Plant Protection Organization (EPPO)
  2. "Rhynchophorus ferrugineus Oliver". Phytosanitary Alert System. பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  3. M. Ferry; S. Gómez (2002). "The red palm weevil in the Mediterranean Area". Palms (International Palm Society) 46 (4). http://palms.org/wp-content/uploads/2016/05/vol46n4p172-178.pdf. 
  4. "EPPO Reporting Service". EPPO Reporting Service (Paris, France) (11). 2006-11-01. http://gd.eppo.int/media/data/reporting/rs-2006-11-en.pdf. 
  5. Soares, Marisa (9 February 2014). "As palmeiras ainda podem ganhar a guerra contra o escaravelho-vermelho". PÚBLICO (in போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
  6. "Rhynchophorus ferrugineus (red palm weevil) CABI fact Sheet".
  7. "Niet Gevonden". amigoe.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
  8. 2010 California Farmer periodical "World's worst palm pest in state" Richardson[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Destructive exotic beetle found in Laguna Beach". Orange County Register (in அமெரிக்க ஆங்கிலம்). 2010-10-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
  10. [1] பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம் CDFA; Red Palm Weevil, Worst Known Pest of Palm Trees Detected in Laguna Beach
  11. Malumphy, C.; Moran, H. (2007). "Red palm weevil, Rhynchophorus ferrugineus". Plant Pest Notice (Central Science Laboratory) 50 (Notice 5): 1–3. [2].