தென்னை சிவப்புக் கூன் வண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்னை சிவப்புக் கூன் வண்டு (Rhynchophorus Ferrugineus) என்பது தென்னை மரத்தை தாக்கும் பூச்சிகளில் மிகவும் அபாயகரமானது.

பூச்சியின் வாழ்க்கை சரிதம்[தொகு]

இவ் வண்டுகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் முன் பகுதி மூக்கு போல் நீண்டு காணப்படும். வண்டுகள் தண்டுப் பகுதியில் தனது மூக்கினால் சுரண்டி முட்டைகளை இடுகின்றன. முட்டையிலிருந்து கால்கள் இல்லாத புழுக்கள் வெளி வரும். இந்த புழுக்களுக்கு 'மேகட்' என்று பெயர். நன்கு வளர்ந்த புழு தண்டின் உள்ளேயே கூட்டுப் புழுவாக மாறி, பின் வண்டாக வெளி வரும்.

சேத அறிகுறி[தொகு]

வண்டுகள் மரத்தின் தண்டுப்பகுதியில் குடைந்து சிறு துவாரத்தை ஏற்படுத்தி உள்ளே சென்று சதைப்பற்றை சிறிது சிறிதாக தின்று விடும். நாளடைவில் பாதிக்கப்பட்ட மரங்கள் முறிந்து விடும். வண்டுகள் துளைத்த துவாரத்தின் வழியாக ஒரு வித பழுப்பு நிறத் திரவம் வடியும்.

கட்டுப்பாட்டு முறைகள்[தொகு]

  • பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்
  • பாதிக்கப்பட்ட மரத்தின் துவாரங்களில் இரண்டு செல்பாஸ் மாத்திரைகளை வைத்து அடைத்து விட வேண்டும்
  • நுவக்ரான் மருந்தை வேர் மூலம் செலுத்த வேண்டும்
  • இயற்கை முறையில் கட்டுப்படுத்த 'இனக்கவர்ச்சி பொறி' கொண்டு வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்