கம்பளா
கம்பளா, கம்பாளா அல்லது கம்புளா என்பது தென்மேற்கு இந்திய மாநிலமான கருநாடகாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் எருமைப் பந்தயம் ஆகும். பாரம்பரியமாக இது துளுநாடு என்று அழைக்கப்படும் கருநாடகாவின் தெற்கு கன்னட மற்றும் உடுப்பி மற்றும் கேரளாவின் காசர்கோடு ஆகிய கடலோர மாவட்டங்களில் உள்ள உள்ளூர் துளுவா நிலப்பிரபுக்கள் மற்றும் குடும்பங்களால் நடத்தப்படுகிறது.
கம்பளா பருவம் பொதுவாக நவம்பரில் தொடங்கி மார்ச் வரை நீடிக்கும். இந்த விளையாட்டுக்கள் கம்பளா சமிதிகள் (சங்கங்கள்) மூலம் ஒழுங்கமைக்கப்படுகின்றன. கடலோர கர்நாடகாவில் ஆண்டுதோறும் கிட்டதட்ட நாற்பத்திற்கும் மேற்பட்ட பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
சொற்பிறப்பியல்
[தொகு]கம்பளா என்பது 'கம்ப-களா' என்பதிலிருந்து பெறப்பட்டது. 'கம்பா' என்ற சொல் சேறும் சகதியுமான வயல் தொடர்புடையது மற்றும் 'களா' என்றால் அது நடத்தப்படும் களம். நவீன கம்பளாவின் மற்றொரு விளக்கம் 'கம்பா' என்பதிலிருந்து பெறப்பட்டது, இது பந்தயத்தின் போது எருமைகளுக்கு நீர் பாய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படுகிற ஒரு நீளமான கம்பை (குச்சி) குறிக்கிறது.[1]
வடிவம்
[தொகு]கம்பளா ஒரு விளையாட்டு.[2] கம்பளா பந்தயப் பாதை ஒரு சேறும் சகதியுமான நெல் வயல் ஆகும்.[3] இதில் விவசாயியால் சவுக்கு அல்லது சாட்டையால் அடித்து எருமைகள் இயக்கப்படுகின்றன. [4]
பாரம்பரிய கம்பளா போட்டியற்றது, மேலும் ஒவ்வோர் எருமை குழுவாக இறங்கி காலத்தில் விளையாடபட்டது. நவீன கம்பளாவில், பொதுவாக எருமை குழுக்களிடையே ஒரு ஓட்டப்பந்தயம் போல போட்டி நடத்தப்படுகின்றது. உடுப்பியில் வந்தாறு மற்றும் ஷிவமோகாவில் உள்ள சோரடி போன்ற கிராமங்களில் ஒரு சடங்கு அம்சமும் உள்ளது, விவசாயிகள் தங்கள் எருமை மாடுகளை நோய்களில் இருந்து காப்பாற்றிய தெய்வங்களுக்கு நன்றி செலுத்துவதற்காக ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுகின்றனர்.
எருமைகள் வண்ண மற்றும் பித்தளை மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட தலை ஆபரணங்கள் (சில நேரங்களில் சூரியன் மற்றும் சந்திரனின் சின்னங்களைத் தாங்கியவை), மற்றும் ஒரு வகையான கடிவாளத்தை உருவாக்கும் கயிறுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. எருமையின் முதுகை மறைக்கப் பயன்படுத்தப்படும் சிறப்புத் துண்டு பாவடே என்று அழைக்கப்படுகிறது.
வரலாற்று ரீதியாக, வெற்றி பெற்ற எருமை மாடுகளுக்கு தேங்காய் மற்றும் வாழைப்பழங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இன்று, வெற்றி பெற்ற உரிமையாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைப் பெறுகிறார்கள்.[5] சில ஏற்பாட்டுக் குழுக்கள் வெற்றியாளருக்கு எட்டு கிராம் தங்க நாணயத்தை வழங்குகின்றன.[6] சில போட்டிகளில், ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
நாத சைவ கம்பளா முந்தைய நாள் மாலை கொரகா சமூகங்களின் பாரம்பரிய நடனத்துடன் பெரும்பாலும் தொடங்குகிறது.[7] கம்பள நாளுக்கு முந்தைய நாள் இரவு முழுவதும் கொரகாக்கள் எழுந்து அமர்ந்து பனியில் பனிக்குலுனி என்ற விழாவை நடத்தினர். இவர்கள் தங்கள் சிறப்பு தெய்வ ஆவியான நீச்சாவைப் பற்றி இசைக்குழு துடியின் துணையுடன் பாடல்களைப் பாடி, ஒரு பெரிய மண் பானையில் புட்டு மற்றும் அரிசி-கொழுக்கட்டை வழங்குகிறார்கள். இந்த புட்டு பானை புட்டு என்று அழைக்கப்படுகிறது.[8]
சட்ட தகுதி
[தொகு]சாட்டையால் ஓட்டப்படும் பந்தய எருமைகளுக்கு கம்பளா கொடூரமானது என்று பலர் விமர்சித்துள்ளனர்.[9] பிரபல விலங்கு உரிமை ஆர்வலர் மேனகா காந்தி, பந்தயத்தின் போது எருமைகளை மோசமாக நடத்துவது குறித்து கவலை தெரிவித்தார். கம்பளா அமைப்பாளர்கள் அதிகபட்ச வேகத்தை பெற சவுக்கடிகள் அவசியம் என்று வாதிடுகையில், பந்தயத்தின் போது சவுக்கடிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், எருமைகள் மீது மென்மையாக இருக்கவும் அரசாங்க அதிகாரிகள் சவாரி செய்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.[9]
2014 ஆம் ஆண்டில், விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் அடிப்படையில், இந்திய உச்ச நீதிமன்றம் கம்பளாவைத் தடைசெய்து உத்தரவிட்டது. காளைகளை அடக்கும் விளையாட்டான சல்லிக்கட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. சனவரி 2017 இல் சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிய நடுவண் அரசு உத்தரவை தொடர்ந்து, கம்பளா மீதான தடையையும் நீக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.[10] விலங்குகள் வதை தடுப்பு (திருத்தம்) ஆணை, 2017 கம்பளா திருவிழாவை மீண்டும் சட்டப்பூர்வமாக்கியது. வழக்கு தொடர்ந்தது, ஆனால் விலங்குகள் வதை தடுப்பு (திருத்தம்) மசோதா, 19 பிப்ரவரி 2018 அன்று நிறைவேற்றப்பட்டதன் மூலம் தீர்க்கப்பட்டது.[11] இருப்பினும், தடை நீக்கப்பட்ட பிறகு, பந்தயத்தின் போது எருமைகள் இன்னும் சாட்டையால் அடிக்கப்படுவது கண்டறியப்பட்டது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ TuLunadina ShasanagaLa Sanskritika Adhyayana. By Shaila T. Verma (2002) Jnanodaya Prakashana,Bangalore, p.304.
- ↑ Chaudhari, edited by Sarit K. Chaudhari, Sucheta Sen (2005). Primitive tribes in contemporary India : concept, ethnography and demography. New Delhi: Mittal Publications. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183240260.
{{cite book}}
:|first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Kadri comes alive with 'Kambala', fair". http://www.hindu.com/2010/12/13/stories/2010121360400200.htm.
- ↑ Herzberg, Esther Grisham,Christine Ronan,editor-Roberta Dempsey (1997). South India. Glenview, IL: Good Year Books. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780673363596.
{{cite book}}
:|first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Kambala". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/kambala/article2748729.ece.
- ↑ "Day and night kambala in Jeppinamogaru on March 19". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/day-and-night-kambala-in-jeppinamogaru-on-march-19/article1542342.ece.
- ↑ Tuluvara mooltāna Adi Alade Paramrapare mattu Parivartane by Dr. Indira Hegde, [Navakaranataka,Bangalore,2012,p.278]
- ↑ Karavali Janapada 1990, Mangalagangothri by Dr. Purushothama Bilimale, p.36
- ↑ 9.0 9.1 "Pilikula Nisargadhama plays host to Kambala". The Hindu. 10 January 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/pilikula-nisargadhama-plays-host-to-kambala/article1176240.ece?textsize=large&test=1. பார்த்த நாள்: 7 December 2012.
- ↑ "Jallikattu Back, Why Not Kambala, Asks Karnataka. Protests Begin". NDTV.com.
- ↑ K.T. Vinobha (19 February 2018). "President approves Bill allowing Kambala in Karnataka". The Times of India.
- ↑ Chethan Misquith (Dec 3, 2017). "Buffaloes whipped again enough evidence against Kambala: PETA | Mangaluru News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-25.