இசுக்காண்டியம்(III) முப்புளோரோமெத்தேன் சல்போனேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுக்காண்டியம் டிரைபுளோரோமெத்தேன்சல்போனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
144026-79-9 | |
ChemSpider | 2016319 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 2734571 |
| |
பண்புகள் | |
C3F9O9S3Sc | |
வாய்ப்பாட்டு எடை | 492.16 கி/மோல் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Oxford MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இசுக்காண்டியம்(III) முப்புளோரோமெத்தேன் சல்போனேட்டு (Scandium trifluoromethanesulfonate) என்ற வேதியியல் சேர்மம் பொதுவாக இசுக்காண்டியம் டிரிப்லேட்டு என்றும் அழைக்கப்படுகிறது. Sc(SO3CF3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இவ்வுப்பு இசுக்காண்டியம் (Sc3) நேர்மின் அயனிகளும் டிரிப்லேட்டு எதிர்மின் அயனிகளும் (SO3CF3−) சேர்ந்து உருவாகிறது.
கரிம வேதியியலில், இசுக்காண்டியம் டிரிப்லேட்டு ஒரு இலூயிக் அமில[1] வினையாக்கியாகப் பயன்படுகிறது. மற்ற இலூயிக் அமிலங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வினையாக்கி தண்ணீருடன் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இதனால் கரிம வேதிவினைகளில் இதை வேதிவிகித அளவுகளில் அல்லாமல் ஒரு உண்மையான வினையூக்கியாகப் பயன்படுத்த இயலும். இசுக்காண்டியம் ஆக்சைடுடன் முப்புளோரோமெத்தேன்சல்போனிக் அமிலம் சேர்த்து இசுக்காண்டியம் முப்புளோரோமெத்தேன் சல்போனேட்டைத் தயாரிக்கலாம்.
இசுக்காண்டியம் டிரிப்லேட்டின் அறிவியல் பயன்பாட்டுக்கு உதாரணமாக முகையாமா ஆல்டால் கூட்டுவினையைக் குறிப்பிடலாம். இவ்வினையில் பென்சால்டிகைடு மற்றும் வளையயெக்சனோனின் சிலில் ஈனால் ஈதர் ஆகியன வினைபுரிந்து 81% வேதிச் சேர்ம உற்பத்தி நிகழ்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Deborah Longbottom (1999). "SYNLETT Spotlight 12: Scandium Triflate". Synlett 1999 (12): 2023. doi:10.1055/s-1999-5997.
- ↑ S. Kobayashi (1999). "Scandium Triflate in Organic Synthesis". Eur. J. Org. Chem. 1999: 15–27. doi:10.1002/(SICI)1099-0690(199901)1999:1<15::AID-EJOC15>3.0.CO;2-B. http://www3.interscience.wiley.com/journal/10049248/abstract.[தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]