உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் சின்னம்
இலத்தீன்: Universitas Oxoniensis
குறிக்கோளுரைDominus Illuminatio Mea (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
The Lord is my Light
உருவாக்கம்தெரியவில்லை, கற்பித்தல் தொடங்கப்பட்டது 1096; 928 ஆண்டுகளுக்கு முன்னர் (1096)
நிதிக் கொடை£3.772 பில்லியன் (inc. colleges)
வேந்தர்கிரிஸ் பட்டன்
துணை வேந்தர்அண்ட்ரூ ஹமில்டன்
மாணவர்கள்21,535
பட்ட மாணவர்கள்11,723
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்9,327
பிற மாணவர்
461
அமைவிடம்,
இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
நிறங்கள்     Oxford Blue
தடகள விளையாட்டுகள்The Sporting Blue
சேர்ப்புIARU
Russell Group
Coimbra Group
Europaeum
EUA
G5
LERU
இணையதளம்ox.ac.uk

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில், ஆக்சுபோர்டு என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொன்மைப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இதுவே ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் யாவற்றினும் பழமை வாய்ந்ததாகும். இதன் தொடக்கம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எனக் கூறுவர். இதன் தொடக்க நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே இன்றுவரை இது சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உயர் கல்வி நிறுவனமாக இருந்து வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நகர மக்களுக்கும் இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் இடையே கி.பி. 1209ல் எழுந்த சண்டையினால் சில மாணவர்கள் வட-கிழக்கான திசையில் உள்ள கேம்பிரிட்ஜ் என்னும் ஊருக்கு ஓடிச் சென்றனர் என்றும், அதனாலேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உருவானது என்றும் ஒரு தொல்கதை உண்டு. இதனால் இன்றளவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே கடும் போட்டி உண்டு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

இப் பல்கலைக்கழகமானது 39 கல்லூரிகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம். இதில் 2006 ஆம் ஆண்டுக் கணக்கின் படி 22,640[1] மாணவர்கள் படிக்கின்றார்கள். அவற்றில் 15,495[1] மாணவர்கள் பட்டப் படிப்புக்காவும், 7,145[1] மாணவர்கள் மேற்பட்டப் படிப்புக்காகவும் பயில்கின்றார்கள். இப் பல்கலைக்கழகமானது சுமார் 3.6 பில்லியன் பிரித்தானிய பவுண்டு நிறுவன வளர்ச்சித் தொகையாகப் பெற்றுள்ளது.

கட்டடங்களும் வசதிகளும்

[தொகு]

நூலகங்கள்

[தொகு]

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலேயே ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலக அமைப்புக் காணப்படுகின்றது. இங்கே 11 மில்லியன் நூல்கள் காணப்படுகின்றன. இவை அலுமாரிகளில் 120 மைல் (190 கிலோமீற்றர்) நீளத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நூலகங்களில் ஒன்றான பொட்லியன் நூலகமே பிரித்தானிய நூலகத்திற்கு அடுத்தபடியாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக உள்ளது. இந்த நூலகம் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்படும் அனைத்து நூல்களினதும் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு சட்டரீதியான சேமிப்பு நூலகம் ஆகும். இந்த நூலகத்தின் நூல்கள் வைக்கும் அலுமாரியின் நீளம் ஒவ்வொரு வருடமும் மூன்று மைல்கள் (ஐந்து கிலோமீற்றர்கள்) வீதம் அதிகரித்துச் செல்கின்றது.

அருங்காட்சியகங்கள்

[தொகு]

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய பல திறந்த அருங்காட்சியகங்களையும் காட்சியகங்களையும் பராமரிக்கின்றது. இவற்றுள் ஒன்றான அஷ்மோலியன் அருங்காட்சியகம் 1683 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகமே ஐக்கிய இராச்சியத்தின் பழமையான அருங்காட்சியகமும் உலகின் மிகப் பழமை வாய்ந்த பல்கலைக்கழக அருங்காட்சியகமும் ஆகும். அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் மைக்கலாஞ்சலோ, லியொனார்டோ டா வின்சி, பாப்லோ பிக்காசோ போன்றோரின் படைப்புக்கள் உள்ளடங்கலாகக் கலை மற்றும் தொல்லியல் துறை சார்ந்த பல குறிப்பிடத்தக்க திரட்டுகள் காணப்படுகின்றன.

பூங்காக்கள்

[தொகு]

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பூங்காக்கள் நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் 70 ஏக்கர் பரப்பளவிற்குப் பரந்து காணப்படுகின்றன. இவை பகல் நேரங்களில் பொதுமக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டுள்ளன. இப் பூங்காக்கள் பல்வேறு விளையாட்டுக் களங்களையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன. இந்த பல்கலைக்கழகப் பூங்காக்கள் மரபியல் பூங்கா, பரிசோதனைத் தோட்டம் என்பவற்றையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன.

ஆக்சுபோர்டு உயர் தெருவில் அமைந்துள்ள தாவரவியற் பூங்காவே ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பழமையான தாவரவியற் பூங்கா ஆகும். அத்தோடு இது உலகின் மூன்றாவது பழமையான அறிவியல் தோட்டம் ஆகும். இத் தாவரவியற் பூங்கா 8000 வகையான தாவர வகைகளை 1.8 ஹெக்டயர் (4 ½ ஏக்கர்) நிலப்பரப்பில் கொண்டுள்ளது.

அமைப்பு

[தொகு]

கல்லூரிகள்

[தொகு]

ஆக்சுபோர்டு பல்கலைக்கழக உறுப்பினராவதற்கு, அனைத்து மாணவர்கள், மற்றும் பெரும்பாலான கல்வித்துறை ஊழியர்கள் மேலும் ஒரு கல்லூரி அல்லது மண்டபம் ஒரு உறுப்பினராக இருக்க வேண்டும். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் 38 கல்லூரிகளும் ஆறு நிரந்தர தனியார் மண்டபங்களும் உள்ளன. அனைத்துக் கல்லூரிகளிலும் எல்லாப் பாடப் படிப்புக்களும் கற்பிக்கப்படாவிட்டாலும் ஒரு பரந்த அளவிலான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

அந்தக் கல்லூரிகள் பின்வருமாறு:

  1. ஆல் சவுல்ஸ்
  2. பல்லியொல்
  3. பிரசெனொஸ்
  4. கிறிஸ்ட் தேவாலயம்
  5. கோர்பஸ் கிரிஸ்டி
  6. எக்சேட்டர்
  7. கிறீன் டெம்பிளெட்டொன்
  8. ஹரிஸ் மான்செஸ்டர்
  9. ஹேர்ட்போர்ட்
  10. ஜீசஸ்
  11. கெப்லே
  12. கெல்லொக்
  13. லேடி மர்கரெட் மண்டபம்
  14. லினாக்ரே
  15. லிங்கன்
  16. மக்டலன்
  17. மான்ஸ்பீல்ட்
  18. மேர்டன்
  19. நியூ கல்லூரி
  20. நஃபீல்ட்
  21. ஒரியல்
  22. பெம்பிரோக்
  23. குவீன்ஸ்
  24. சொமெர்வில்லே
  25. புனித ஆன்
  26. புனித அந்தொனியார்
  27. புனித கத்தரீன்
  28. புனித சிலுவை
  29. புனித எட்மன்ட் மண்டபம்
  30. புனித ஹில்டா
  31. புனித ஹியூக்ஸ்
  32. புனித பத்திரிசியார்
  33. புனித பீட்டர்
  34. திரித்துவக் கல்லூரி
  35. பல்கலைக்கழகக் கல்லூரி
  36. வதாம்
  37. வூல்ஃப்சன்
  38. வோர்செஸ்டர்

பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Table 0a - All students by institution, mode of study, level of study, gender and domicile 2004/05". Higher Education Statistics Agency online statistics. பார்க்கப்பட்ட நாள் 2006-11-18.