பேச்சு:ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இங்கிலாந்தில் இது ஒக்ஸ்போர்ட் என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆக்சுபோர்டு அல்ல.--பாஹிம் 19:09, 24 திசம்பர் 2011 (UTC)

இங்கிலாந்தின் standard received pronuciation, american, indian english அனைத்திலும் ஆக்ஸ்ஃபர்ட் தான் (/ˈɒksfə(r)d/). ஓக்ஸ்போர்ட் அல்ல. "ஓக்ஸ்ஃபோர்ட்” என்று சொல்வது காக்னி போன்ற வெகுசில வட்டார வழக்கில் மட்டுமே --சோடாபாட்டில்உரையாடுக 03:43, 25 திசம்பர் 2011 (UTC)
பிரித்தானியா, ஆத்திரேலியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒக்ஸ்ஃபோர்ட் என்று தான் உச்சரிக்கப்படுகிறது. நீங்கள் தந்துள்ள இணைப்பிலும், இந்த இணைப்பிலும் உள்ள உச்சரிப்பு வேறுபாட்டைத் தெளிவாகக் காணலாம். ஆனாலும், அமெரிக்க, மற்றும் இந்திய உச்சரிப்பிலேயே தலைப்பிடுவதில் தவறில்லை என்பதே எனது நிலைப்பாடு.--Kanags \உரையாடுக 04:42, 25 திசம்பர் 2011 (UTC)
நீங்கள் குறிப்பிடும் இணைப்பில் உள்ளதும் நான் தந்த இணைப்பிலும் உள்ள ஒலியை நான் “ஆக்ஸ்” என்று தான் கருதுகிறேன்/எழுத விரும்புகிறேன். :-). இது ”ˈɒ” என்ற ஒலியனை இலங்கை/தமிழ்நாடு தமிழர் அணுகும் வேறுபாடுகளால் நிகழுகிறது என்று நினைக்கிறேன். (pot, john, lot என்பதை நாம் தமிழ்ப்பெயர்க்கும் போது ஏற்படும் அதே வேறுபாடுகள் இங்கும் ஏற்படுகின்றன என நினைக்கிறேன்). இரு எழுத்துப்பெயர்ப்புகளையும் கொடுத்து விடலாம்--சோடாபாட்டில்உரையாடுக 05:38, 25 திசம்பர் 2011 (UTC)