பிலே (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலே
பிலே வால்வெள்ளியை அணுகும் விவரிப்பு
திட்ட வகைவால்வெள்ளி தரையிறங்கி (விண்கலம்)
இயக்குபவர்ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
காஸ்பார் குறியீடுPHILAE
இணையதளம்www.esa.int/rosetta
திட்டக் காலம்1–6 வாரங்கள் (திட்டத்தில்)
விண்கலத்தின் பண்புகள்
ஏவல் திணிவு100 கிகி (220 இறா)[1]
ஏற்புச்சுமை-நிறை21 கிகி (46 இறா)[1]
பரிமாணங்கள்1 × 1 × 0.8 மீ (3.3 × 3.3 × 2.6 அடி[1]
திறன்32 வாட்டுகள் 3 AU இல்[2]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்2 மார்ச்சு 2004 (2004-03-02) 07:17 ஒசநே
ஏவுகலன்ஆரியான் 5G+ V-158
ஏவலிடம்கயானா ELA-3
ஒப்பந்தக்காரர்ஆரியான்ஸ்பேசு
67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ தரையிறங்கி
தரையிறங்கிய நாள்12 நவம்பர் 2014
15:35 ஒசநே
கருவிகள்
APX ஆல்ஃபா: ஆல்ஃபா துணிக்கை எக்சு-கதிர் நிறமாலைமானி
ÇIVA: Comet nucleus Infrared and Visible Analyzer
CONSERT COmet Nucleus Sounding Experiment by Radiowave Transmission
COSAC: COmetary SAmpling and Composition
MUPUS: Multi-Purpose Sensors for Surface and Subsurface Science
PTOLEMY: gas chromatograph and medium resolution mass spectrometer
ROLIS: ROsetta Lander Imaging System
ROMAP: ROsetta lander MAgnetometer and Plasma monitor
SD2: Sample and Distribution Device
SESAME: Surface Electric Sounding and Acoustic Monitoring Experiment

ஃபிலே (Philae)[3] என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் ரொசெட்டா விண்கலத்திலிருந்து ஏவப்பட்ட ஒரு தானியங்கி தரையிறங்கி ஆகும்.[4] இது புவியிலிருந்து ஏவப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின் வெற்றிகரமாக அதன் இலக்கான வால்வெள்ளி 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோவை கடந்த 12 நவம்பர் 2014 இல் அடைந்தது.[5][6][7] [8] இத் தரையிறங்கியிலிருந்து முதல் புகைப்படமும் நேரடியான வால்வெள்ளியின் மேற்பரப்பு பற்றிய பகுப்பாய்வுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.[9]

திட்டம்[தொகு]

பிலேவின் குறிக்கோளானது வால் நட்சத்திரத்தில் இறங்கி, தன்னை அதனுடன் பொருத்திக் கொண்டு, அதை பற்றிய விவரங்களை அனுப்புவதே ஆகும். 2004-ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி, பிரெஞ்சு கயானா நாட்டில் இருந்து அரியான் விறிசு ஏவப்பட்டது. இந்த விறிசு ரொசெட்டா விண்கலம் மற்றும் பிலே கோள் இறங்கி இவை இரண்டையும் ஏந்தி சென்றது. சரியாக 3,907 நாட்கள், அதாவது 10.7 ஆண்டுகள் பயணித்து, 67பி/சுர்யுமோவ்-கேரசிமெங்கோ வால் நட்சத்திரத்தை அடைந்தது பிலே. டெம்பெல் 1 எனும் வால் நட்சத்திரத்தை தாக்கிய டீப் இம்பேக்ட் போல இந்த பிலே ஓர் தாக்கி அல்ல.

2009-ஆம் ஆண்டு பிப்ரவரி 25 தேதி அன்று செவ்வாய்க் கோளுக்கு அருகே செல்லும்பொழுது, பிலே அதனுள் இருந்த சில கருவிகள் தானியங்கிகளாகச் செயல்படுத்தப்பட்டன. ரொசெட்டாவின் கருவிகள் உறக்கத்திற்கு அனுப்பப்பட, பிலேவின் புகைப்பட கருவி செவ்வாய் கோளின் புகைப்படங்களை அனுப்பின; செவ்வாய்க் கோளின் காந்தக்கோளத்தை ரோமாப் அளந்தது. மற்ற கருவிகளுக்கு நிலப்பரப்புடன் தொடர்பு இருந்தால் மட்டுமே ஆய்வு செய்யக்கூடிய திறன் இருந்தன, அதனால் அவை அப்பொழுது அணைக்கப்பட்டு இருந்தன.வால் நட்சத்திரத்தைத் தோட்டப் பின்பு, இந்தத் திட்டத்தின் செயல்பாடு நான்கு முதல் ஐந்து மாதங்கள் நீடிக்கும்.[10]

அறிவியல் சார்ந்த குறிக்கோள்கள்[தொகு]

வால் நட்சத்திரத்தின் தனிமம், சம இயல்பு, மூலக்கூற்று மற்றும் கனிம வளங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதும், நிலப்பரப்பு மற்றும் அதன் கீழே இருக்கும் கனிமங்களின் இயற்பியல் குணங்களின், பெரு அளவு அமைப்பு மற்றும் அதன் அணுக்கருவின் காந்த மற்றும் பிளாசுமா சூழல் போன்றவைகளைப் பண்புறு வருணனை செய்தலும், இந்தத் திட்டத்தின் அறிவியல் சார்ந்த குறிக்கோள்கள் ஆகும்.[11]

பிலே (விண்கலம்) தரை இறங்கியபோது எடுக்கப்பட்ட ஒளிப்படம்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "PHILAE". தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம். பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.
  2. "Philae lander fact sheet" (PDF). DLR. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2014.
  3. Ellis, Ralph (12 நவம்பர் 2014). "Space probe scores a 310-million-mile bull's-eye with comet landing" (pronunciation used in video). cnn.com. CNN. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2014.
  4. Chang, Kenneth (5 August 2014). "Rosetta Spacecraft Set for Unprecedented Close Study of a Comet". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/08/06/science/space/rosetta-spacecraft-set-for-unprecedented-close-study-of-a-comet.html. பார்த்த நாள்: 5 August 2014. 
  5. Ulamec, S.; Espinasse, S.; Feuerbacher, B.; Hilchenbach, M.; Moura, D. et al. (April 2006). "Rosetta Lander—Philae: Implications of an alternative mission". Acta Astronautica 58 (8): 435–441. doi:10.1016/j.actaastro.2005.12.009. Bibcode: 2006AcAau..58..435U. 
  6. Biele, Jens (2002). "The Experiments Onboard the ROSETTA Lander". Earth, Moon, and Planets 90 (1-4): 445–458. doi:10.1023/A:1021523227314. Bibcode: 2002EM&P...90..445B. 
  7. Agle, D. C.; Cook, Jia-Rui; Brown, Dwayne; Bauer, Markus (17 January 2014). "Rosetta: To Chase a Comet". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). பார்க்கப்பட்ட நாள் 18 January 2014.
  8. Chang, Kenneth (12 November 2014). "European Space Agency’s Spacecraft Lands on Comet’s Surface". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/11/13/science/space/european-space-agencys-spacecraft-lands-on-comets-surface.html. பார்த்த நாள்: 12 November 2014. 
  9. "Europe's Comet Chaser - Historic mission". European Space Agency. 16 January 2014. http://www.esa.int/Our_Activities/Space_Science/Rosetta/Europe_s_comet_chaser/. பார்த்த நாள்: 5 August 2014. 
  10. Gilpin, Lyndsey (14 August 2014). "The tech behind the Rosetta comet chaser: From 3D printing to solar power to complex mapping". TechRepublic. http://www.techrepublic.com/article/the-tech-behind-the-rosetta-comet-chaser-from-3d-printing-to-solar-power-to-complex-mapping/. 
  11. Bibring, J.-P.; Rosenbauer, H.; Boehnhardt, H.; Ulamec, S.; Biele, J. et al. (February 2007). "The Rosetta Lander ("Philae") Investigations". Space Science Reviews 128 (1–4): 205–220. doi:10.1007/s11214-006-9138-2. Bibcode: 2007SSRv..128..205B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலே_(விண்கலம்)&oldid=1937093" இலிருந்து மீள்விக்கப்பட்டது