விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/மார்ச் 30, 2014
- நியண்டர்தால் (படம்) எனப்படுவோர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 30 000 - 50 000 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருந்த, தற்கால மனிதர்களுக்கு மிக நெருக்கமான ஹோமோ பேரின உயிரினங்கள் ஆகும்.
- பசுங்கூரை என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும்.
- நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு கருவிப் பகிர்வகம் எனப்படுகிறது.
- மீன்கள் அன்றும் இன்றும் என்ற நூல் பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன என்று கூறுகிறது.
- போபொஸ் துணைக்கோள் செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க்கு மிக அண்மித்ததும் மிகப் பெரியதுமான துணைக்கோளாகும்.