உள்ளடக்கத்துக்குச் செல்

கருவிப் பகிர்வகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூல்களை எவ்வாறு ஒரு நூலகத்தில் இருந்து பெற்று, வாசித்து, குறிப்பெடுத்து விட்டு, திரும்ப நூலகத்துக்கு கொடுக்கின்றோமே அதே மாதிரி பல்வேறு கருவிகளை பெற்று பயன்படுத்தி விட்டு திருப்ப கொடுக்கும் அமைப்பு கருவிப் பகிர்வகம் (Tool Library) எனப்படுகிறது.

அனேக கருவிகள் அவ்வப்பொழுதுதான் பயன்படுத்துகிறன. இவை அனைத்தையும் வாங்கி, இடமெடுத்து, பாதுகாப்பது வீண் செலவு. தேவைப்படும் பொழுது அத்தகைய கருவிகளை பெறக்கூடியதாக இருந்தால் பலர் இவ்வாறு வாங்குவதை தவிர்த்து விடுவர். இது ஒரு பேண்தகு செயற்பாடக அமையும். இதை ஊக்குவிக்கவே கருவிப் பகிர்வகங்கள் தொடங்கப்பட்டன.

சமையல் கருவிகள், புல்லு வெட்டும் இயந்திரம், நீர்க்குழாய் திருத்தும் கருவிகள், ஏணி, மின்னோடிகள், வாகனங்கள், கூடாரங்கள் என பல்வேறு தரப்பட்ட கருவிகள் இவ்வாறு பகிரப்படலாம்.

வரலாறு[தொகு]

கருவிப் பகிர்வகங்கள் ஐக்கிய அமெரிக்காவில் 1970 களிலும் 80 களிலும் குமுக வளர்ச்சி செற்திட்டங்களின் ஒரு பகுதியாக உருவாக்கம் பெற்றன. RTCO Tool Library, Phinney Tool Library, The Berkeley Tool Library ஆகியவை இவ்வாறு தோற்றம் பெற்றன.[1] இவற்றின் மாதிரியைப் பின்பற்றி பல்வேறு குமுக அமைப்புகளும் கருவிப் பகிர்வங்களை உருவாக்கின.

இணைய வளர்ச்சி கருவிப் பகிர்வகங்களை பரவலாக்க உதவியுள்ளது. ஒரு கருவிப் பகிர்வககத்தில் என்ன உள்ளன, அவற்றை இரவல் பெற முடியுமா, கருவிகளை முன்பதிவு செய்தல் போன்ற வசதிகளை கருவிப் பகிர்வகங்களுக்கான மென்பொருள் வழங்கி உதவின.

2000 களில் பல்வேறு அரச நூலகங்களும் கருவிப் பகிர்வகங்களை தமது சேவைகளில் சேர்த்துக் கொண்டுள்ளன.

பகிரப்படும் கருவி வகைகள்[தொகு]

கருவிப் பகிர்வகங்களில் பல் வகைப்பட்ட கருவிகள் பகிரப்படுகின்றன. அவற்றுள் பின்வருவன அடங்கும்:

  • தானுந்து திருந்தும் கருவிகள்
  • மரவேலைக் கருவிகள்
  • மின்வேலைக் கருவிகள்
  • வீடு திருத்தும் கருவிகள்
  • உலோகவேலைக் கருவிகள்
  • குழாய்வேலைக் கருவிகள்
  • பாதுகாப்புக் கருவிகள்
  • பேண்தகு வாழ்வியல் கருவிகள்
  • தோட்டவேலைக் கருவிகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Library Dispenses Tools and Home-Repair Advice". Berkeley Daily Planet. August 19, 2005. http://www.berkeleydailyplanet.com/article.cfm?archiveDate=08-19-05&storyID=22136. 

இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவிப்_பகிர்வகம்&oldid=1929642" இலிருந்து மீள்விக்கப்பட்டது